• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • பிரியா பவானி சங்கர் முதல் அனிதா சம்பத் வரை.. வாழ்க்கையை திருப்பி போட்ட அந்த ஒரு மேஜிக்!

பிரியா பவானி சங்கர் முதல் அனிதா சம்பத் வரை.. வாழ்க்கையை திருப்பி போட்ட அந்த ஒரு மேஜிக்!

ப்ரியா டூ அனிதா சம்பத்

ப்ரியா டூ அனிதா சம்பத்

இன்று சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் முக்கிய நட்சத்திரங்களாக உயர்ந்துள்ளனர்.

  • Share this:
    செய்தி ஊடகங்களில் செய்தி வாசிப்பாளர்களாக தங்களுடைய பணியைத் தொடங்கிய பலர், இன்று சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் முக்கிய நட்சத்திரங்களாக உயர்ந்துள்ளனர். அவர்கள் யார் யார் என்ற விவரத்தை பார்க்கலாம்.

    1. பிரியா பவானிசங்கர் :

    வெள்ளித்திரையில் பிரதான நடிகையாக உருவெடுத்திருக்கும் பிரியா பவானி சங்கர் 2011 ஆம் ஆண்டு செய்தி வாசிப்பாளராக தொலைக்காட்சிக்குள் நுழைந்தார். பின்னர், ஜோடி நம்பர் ஒன், சூப்பர் சிங்கர் சீசன் 5, கிங்ஸ் ஆப் டான்ஸ் ஆகிய ரியாலிட்டி ஷோக்களை தொகுத்து வழங்கிய பிரியா, கல்யாணம் முதல் காதல் வரை சீரியலில் முதன் முதலாக நடித்தார். 2017 ஆம் ஆண்டு வெளியான மேயாத மான் திரைப்படம் மூலம் ஹீரோயினாக மாறிய அவர், தற்போது பிஸியாக பல படங்களில் நடித்து வருகிறார்.

    2. பிரியா பிரின்ஸ் :

    செய்தி வாசிப்பாளராக ஊடக்கத்தில் நுழைந்தார். என் பெயர் மீனாட்சி தொடர் மூலம் நடிகையாக மாறிய பிரியா பிரின்ஸ், தற்போது கண்ணான கண்ணே சீரியலில் நடித்துக் கொண்டிருக்கிறார். இ.எம்.ஐ தவணை முறை வாழ்க்கை, மாப்பிள்ளை, பொன்மகள் வந்தாள், கண்மணி ஆகிய சீரியல்களிலும் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளார். தமிழ் கடவுள் முருகன் சீரியலில் பார்வதி கதாப்பாத்திரம் இவருக்கு நல்ல பெயரை பெற்றுக் கொடுத்தது.

    3. நித்யா குமார் :

    தொலைக்காட்சியில் செய்திவாசிப்பாளராக பணியைத் தொடங்கி, நடிகையாக மாறிய நித்யாகுமார் ‘பூவே பூச்சூடவா’ சீரியலில் கங்கா கதாப்பாத்திரத்தில் நடித்தார். சிவா மனசுல சக்தி சீரியலில் ‘சத்யா’வாக நடித்த நித்யா மீண்டும் செய்தி வாசிப்பாளராக மாறியுள்ளார்.

    ப்ரியா பவானி சங்கர்


    4. உமா பத்மநாபன் :

    பிரபலமான செய்தி வாசிப்பாளர்களில் ஒருவர் உமா பத்மநாபன். முன்னணி செய்திவாசிப்பாளராக இருந்த இவர், ‘பூவே பூச்சூடவா’, சித்தி 2 ஆகிய சீரியல்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். வணக்கம் தமிழகம், செல்லமே செல்லமே, விண்ணைத் தாண்டி வருவாயா, ஒரு தாயின் சபதம் ஆகிய சீரியல்களில் நடித்துள்ள உமா பத்மநாபன், திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

    5. அபிநயா :

    செய்திவாசிப்பாளரான அபிநயா, ‘பிரியமானவள்’ தொடர் மூலம் சின்னத்திரைக்கு அடியெடுத்து வைத்தார். கண்மணி மற்றும் சிவா மனசுல சக்தி ஆகிய சீரியல்களில் பெரும் வரவேற்பை பெற்ற அபிநயா, தற்போது சித்திரம் பேசுதடி சீரியலில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

    அனிதா சம்பத் மற்றும் பாத்திமா பாபு


    6. சரண்யா துரை சுந்தர்ராஜ் :

    சரண்யா துரை சுந்தர்ராஜ் செய்தி வாசிப்பாளராக பணியைத் தொடங்கி சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரைக்குள் நுழைந்தார். நெஞ்சம் மறப்பதில்லை சீரியலில் சரண்யா விக்ரமாக நடித்தார். ஆயுத எழுத்து சீரியலில் மாவட்ட ஆட்சியராக வரும் இந்திரா கதாப்பாத்திரம் வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. மகாபாரதம் தொடரில் பாலியாகவும், ரன் மற்றும் தெலுங்கு சீரியலான ரோஜா ஆகிய சீரியல்களிலும் நடித்துள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    7. ரேவதி ஞானமுருகன் :

    மெட்டி ஒலி சீரியலில் ‘பவானி’ கதாப்பாத்திரம் மூலம் சின்னத்திரைக்குள் அடியெடுத்து வைத்தார். மகள், நிம்மதி, கோலங்கள், பவானி, உதிரிப்பூக்கள் ஆகிய சீரியல்களில் நடித்த அவர், பின்னர் செய்தி வாசிப்பாளராக மாறினார். தற்போது மீண்டும் நடிப்புக்கு திரும்பி இருக்கும் ரேவதி, ராஜ பார்வை மற்றும் பூவே பூச்சூடவா சீரியல்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

    8. பாத்திமா பாபு :

    செய்திவாசிப்பாளர்களில் முன்னோடியாக இருப்பவர். 25 ஆண்டு காலம் தூர்தர்ஷனில் செய்தி வாசித்த அவர், சித்திர பார்வை சீரியல் மூலம் சின்னத்திரையில் நுழைந்தார். லக்ஷ்மி, ராஜ ராஜேஸ்வரி, அரண்மனை கிளி ஆகிய சீரியல்களில் இவரின் கதாப்பாத்திரங்கள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. யாரடி நீ மோகினி சீரியலில் நடித்த அவர், பிக்பாஸ் சீசன் மூன்றிலும் கலந்து கொண்டார்.

     

    சரண்யா


    9. மலர் விழி :

    செய்திவாசிப்பாளராக இருந்த அவர், அண்மையில் சின்னத்திரையில் நடிகையாக காலடி எடுத்து வைத்துள்ளார். தாலாட்டு சீரியலில் ‘தாரா’ கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார்.

    10. அனிதா சம்பத் :

    பிரபல தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்த அனிதா சம்பத், பிக்பாஸ் 4வது சீசனில் பங்கேற்க, தன்னுடைய வேலையை ராஜினாமா செய்தார். பின்னர், சில்லுனு ஒரு காதல் சீரியலில் காவேரி கதாப்பாத்திரத்தில் நடித்த அவர், ஒரு சில படங்களிலும் நடித்துள்ளார்.

    11. வரதராஜன் :

    28 ஆண்டுகளுக்கும் மேலாக தூர்தர்ஷன் சேனலில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றினார். பின்னர் நடிகராக மாறிய அவர், காதல் பகடை, சஹானா, கையளவு மனசு, அண்ணி, தாமரை மற்றும் பெண் ஆகிய சீரியல்களில் நடித்துள்ளார்.

    12. ஸ்ரீவித்யா சங்கர்

    மீடியாவில் பல ஆண்டுகளாக செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்தார். வல்லி, சுமங்கலி, மாயா, டார்லிங் டார்லிங் ஆகிய சீரியல்களில் நடித்துள்ள அவர் தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸில் கலைவாணி ஜனார்த்தனன் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: