முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / சின்னத்திரையில் அறிமுகமாகும் பிக்பாஸ் அனிதா சம்பத் - வைரலாகும் ப்ரோமோ வீடியோ!

சின்னத்திரையில் அறிமுகமாகும் பிக்பாஸ் அனிதா சம்பத் - வைரலாகும் ப்ரோமோ வீடியோ!

அனிதா சம்பத்

அனிதா சம்பத்

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான அனிதா சம்பத் முதல்முறையாக சீரியலில் நடித்துள்ளார். அந்த புரோமோதற்போது வெளியாகிவுள்ளது.

அனிதா சம்பத் முதலில் பாலிமர் டிவி மற்றும் நியூஸ் 7 தமிழின் தொகுப்பாளராக பணியாற்றிய நிலையில் சன் டிவியில் செய்தி வாசிப்பாளராக இணைந்த பின்னர் பிரபலமானார். இதன் மூலம் அவருக்கு பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்க வாய்ப்புகள் கிடைத்தது. விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் பெரிய அளவில் பிரபலமானார். அங்கு முதலில் எதிர்மறையான விமர்சனங்களை பெற்றாலும் தனது கருத்துக்களை தெளிவாக முன்வைத்ததாலும், நியாயமாக விளையாடியதாலும் எண்ணற்ற ரசிகர்களை சம்பாதித்தார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த அடுத்த நாளிலேயே அனிதாவின் தந்தை உயிரிழந்தார். இதனால் மிகவும் மனஅழுத்தத்தில் இருந்த அனிதா, செய்தி வாசிப்பாளராக தனது பணியை தொடராமல் ஓய்வில் உள்ளார். முன்னதாக, அவரது காதலன் பிரபாகனை 2019ம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட நிலையில் அவருடன் சென்னையில் வசித்து வருகிறார். இவர்கள் யூடியூப் சேனல் வைத்துள்ள நிலையில் அவ்வப்போது வீடியோக்கள் ஷேர் செய்வார்கள். அதில் ஸ்கின் கேர் டிப்ஸ், சமையல் வீடியோ உள்ளிட்டவை அப்லோடு செய்வார்கள். மேலும் விஜய் டிவி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார்.

Photos : சீரியல் நடிகை ரச்சிதா கட்டிருக்கும் எமோஜி புடவையை பாத்திருக்கீங்களா! போட்டோஸ்..

தற்போது அனைத்து பிரச்சனைகளில் இருந்தும் மீண்ட அவர், வழக்கம் போல தனது புகைப்படங்களையும், வீடியோக்களையும் இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்து வளர்க்கிறார். இந்தநிலையில் அனிதா சம்பத் முதல்முறையாக சின்னத்திரையில் அறிமுகம் ஆவதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. "சில்லுனு ஒரு காதல்" என்ற பெயரில் கலர்ஸ் தமிழ் சேனலில் ஒளிபரப்பாக உள்ள இந்த சீரியலின் புரோமோ வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.


அந்த புரோமோவில், கயல் என்ற பெண் அழுதுகொண்டிருக்கிறாள். அப்போது கயலோட பிரச்னையை எப்படி தீர்க்கப் போறீங்க மாமா என்று கேட்கிறார்கள். அதற்கு நல்ல போதையில், “மாப்பிள்ளை அதான் நம்ம காவேரி இருக்கிறால” என்று கூறுகிறார். அப்போது ஒரு மாஸான பிஜிஎம் ஒலிக்க அனிதா சம்பத் காரில் இருந்து ஸ்டைலாக வெளியே வருகிறார். காவேரி காலெடுத்து வச்சா, பிரச்னை பண்றவன் தூள் தூளா சிதறிடுவான் என்று கூறுகிறார். கலர்ஸ் தமிழ் டிவியில் சில்லுனு ஒரு காதல் சீரியல் இன்று (ஜுலை 19) இரவு 9.30 மணிக்கு அனிதா அறிமுகமாகிற எபிசோடு ஒளிபரப்பாகிறது. இதனால் அனிதாவின் ரசிகர்கள் இனி சின்னத்திரையில் அவரை காணலாம். ஏராளமான ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Anitha sampath