ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

அந்த விஷயத்தில் வனிதாவுக்கே டஃப் கொடுக்கும் அனிதா!

அந்த விஷயத்தில் வனிதாவுக்கே டஃப் கொடுக்கும் அனிதா!

அனிதா சம்பத்

அனிதா சம்பத்

அனிதா சம்பத்தும் சீரியல், ரியாலிட்டி ஷோ என பிஸியாக வலம் வருகிறார்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத் சீரியலிலும் களம் இறங்கியுள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சின்னத்திரையில் வனிதா விஜயகுமார் பிஸியானார். அவருக்கே டஃப் கொடுக்கும் வகையில் அடுத்தடுத்த சேனலில்களில் அனிதாவை பார்க்க முடிகிறது.

  சன் டிவியில் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்த அனிதா சம்பத், விஜய் டிவி-யில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ளும் வாய்ப்பை ஏற்று வேலையை விட்டுவிட்டு ரூட்டை மாற்றினார். பிக் பாஸில் எதற்கெடுத்தாலும் அழுகை, கோபம் என ரசிகர்களிடம் நெகட்டிவ் கமெண்டுகளைப் பெற்றார். இருப்பினும் டாஸ்க்குகளில் நேர்மையுடன் விளையாடி ஆதரவையும் பெற்றார்.

  நிகழ்ச்சியிலிருந்து எலிமினேட் ஆகி வெளியே வந்த அனிதாவுக்கு தொடர்ந்து வாய்ப்புகள் குவிந்தன. ஒருபக்கம் கணவருடன் சேர்ந்து யூடியூப் சேனலில் பிஸியாக வீடியோக்களை வெளியிடுவார்.

  தல தீபாவளி கொண்டாடிய ஷபானா - ஆர்யன் ஜோடியை அரவணைத்த நடிகர் எம்.எஸ் பாஸ்கர்!

  அதே போல் பிக் பாஸ் ஜோடிகள் சீசன் 1ல் கலந்து கொண்டு கடுமையாக ஆடி டைட்டில் வின்னர் பட்டத்தை அடித்தார். இதற்கு இடையில் அவருக்கு வெள்ளித்திரையில் இருந்தும் அழைப்புகள் வந்தன. அதை ஏற்று விமல் படத்திலு நடித்து முடித்து விட்டார். நடுவில் பட்டிமன்ற பேச்சாளராகவும் அனிதாவை பார்க்க முடிந்தது. இப்படி செம்ம பிஸியாக வலம் வரும் அனிதா அடுத்து சீரியலிலும் நடிக்க தொடங்கி விட்டார். கலர்ஸ் தமிழில் ஒளிப்பரப்பாகும் மந்திர புன்னகை தொடரில் அனிதா ஹீரோயின் தோழியாக என்ட்ரி கொடுத்துள்ளார்.
   
  View this post on Instagram

   

  A post shared by Colors Tamil (@colorstvtamil)  அதுவும் அவரின் சொந்த பெயரான அனிதாவாகவே இந்த சீரியலில் அனிதா சம்பத் நடித்து வருகிறார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பலரின் வாழ்க்கையும் மாறி போனது. குறிப்பாக வனிதா விஜயகுமார். பிக் பாஸ் மூலம் அவருக்கு கிடைத்த ரீச் இன்று வெள்ளித்திரை, சின்னத்திரை என கலக்குகிறார். அவருக்கு அடுத்தப்படியாக அனிதா சம்பத்தும் சீரியல், ரியாலிட்டி ஷோ என பிஸியாக வலம் வருகிறார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Published by:Sreeja
  First published:

  Tags: Anitha sampath, Colors Tamil | கலர்ஸ் தமிழ், TV Serial, Vijay tv