பொதுவாகவே சமூக வலைத்தளங்களில் திரைத்துறை மற்றும் சின்னத்திரை பிரபலங்கள் பதிவிடும் எல்லா புகைப்படங்கள் அல்லது வீடியோக்களுக்கு எல்லாருமே வரவேற்பு கொடுக்கிறார்கள் என்று கூற முடியாது. எவ்வளவு ரசிகர்கள் இருந்தாலும் ஒரு சிலர் முறைகேடான கமென்ட்களை பதிவு செய்வார்கள். அந்த வகையில் சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் மிகப்பெரிய பஞ்சாயத்து ஒன்று நடந்தது. சமூக வலை தளத்தில் மிகவும் ஆக்டிவாக செயல்பட்டு வரும் நடிகை மற்றும் பன்முக கலைஞரான விஜயலக்ஷ்மி பகிர்ந்த ஒரு டான்ஸ் வீடியோ சம்பந்தமாக ஒரு பிரச்சனையில் அனிதா மூக்கை நுழைத்து கமெண்ட் செய்துள்ளார்.
திரைப்படங்களில் அறிமுகமான நடிகை விஜயலட்சுமி அதற்கு பிறகு ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்று பல ரசிகர்களின் மனதில் மனதை கவர்ந்தார். மிகவும் தைரியமான மற்றும் போல்டான பெண் என்ற பட்டத்தையும் அவர் பெற்றார்.
இதையும் படிங்க.. விஜய் டிவி சீரியலால் சூர்யா படத்திற்கு வந்த சோதனை.. கண்டுப்பிடித்த நெட்டிசன்கள்!
ஜீ தமிழில் ஒளிபரப்பான சர்வைவர் போட்டியில் கலந்து கொண்டு வெற்றியும் பெற்றார். இணையத்தளத்தில் தேவையில்லாமல் யாராவது விமர்சித்தால் அதற்கு தகுந்த பதிலடியை உடனடியாக கொடுத்து விடுவார். அதுமட்டுமின்றி பேட்டிகளில் கூட மிகவும் தைரியமாகத்தான் பதில் சொல்வார். அதே போலவே சமீபத்தில் தனது வீடியோவிற்கு முறையற்ற கமெண்ட் செய்த ஒரு யூசரை சரமாரியாக விளாசி பதில் அளித்துள்ளார் விஜயலட்சுமி
விஜயலக்ஷ்மி தன் பள்ளி பருவ நண்பரைத் திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. இவர் இன்ஸ்டாகிராமில் ஒரு குத்தாட்டம் டான்ஸ் ஒன்றை பகிர்ந்துள்ளார் அதற்கு ‘ஒரு யூசர் இந்த வயசுல இந்த ஆட்ட ம் தேவையா என்று கமென்ட் செய்திருந்தார்.
“கல்யாணம் ஆகி குழந்தை பொறந்துட்டா அய்யோ அம்மான்னு நானும் மூலைல உக்காந்து தியாகி பட்டம் வாங்கனுமா, அப்படி வேணும்னா அதை நீ செய், எனக்கு அப்படி அவசியம் இல்லை . குழந்தை பொறந்துட்டா அம்மாக்களுக்கு வாழ்க்கையே கிடையாதா எல்லாருக்கும் எல்லா பெண்களுக்கும் அம்மாவாக இருந்தாலும் அவர்களுக்கு வாழ்க்கை இருக்கு, நீங்க குடும்ப குத்துவிளக்கா, இல்ல உங்கள மாதிரி இப்படியெல்லாம் பண்ண முடியலையே அப்படின்ற பொறாமையில் கமெண்ட் பண்ணி இருக்கீங்களான்னு எனக்கு தெரியல. உங்க அட்வைஸ் எல்லாம் நீங்களே வச்சுக்கோங்க, தேவையில்லாத ஆஜர் ஆகாதீங்க” என்று விஜயலட்சுமி தெரிவித்திருந்தார் .
விஜயி பதிவில் யாரோ ஒரு யூசர் தவறான கமெண்ட்களை பதிவு செய்து அதற்கு விஜயலட்சுமியும் தக்க பதிலடி கொடுத்துவிட்டார். ஆனால், இந்த விஷயத்தில் அனிதா சம்பத் தேவையில்லாமல் மூக்கை நுழைத்து இருக்கிறார்.
பெண்களுக்காக குரல் கொடுப்பேன் என்று எப்போதுமே கூறி வரும் அனிதா சம்பத் விஜயலக்ஷ்மி பகிர்ந்த பதிலை ஸ்கிரீன்ஷாட் எடுத்து தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் ஸ்டேட்டஸாக வைத்து, ‘இது அம்மாக்களுக்கு மட்டுமல்ல திருமணமான எல்லா பெண்களுக்கும் இப்படித்தான் நடக்கின்றது. தங்களுக்கு கிடைக்காத சுதந்திரம், இவர்களுக்கு மட்டும் எப்படி இருக்கிறது என்ற பொறாமை தான் இதற்கு காரணம் என்று பதிவிட்டிருந்தார்.’
சில நாட்களுக்கு முன்புதான் புதிய வீடு கட்டி கிரகப்பிரவேசம் செய்த புகைப்படங்கள் வைரலாக பரவியது. அதற்கு முன்னர் பிக்பாஸ் அல்டிமேட்டில் இருந்து பெயரை தாறுமாறாகக் கெடுத்துக் கொண்ட அனிதா சம்பத் முன்பு போல இன்னும் முழு ஆக்டிவாக செயல்படவில்லை.
பிக்பாஸ் பற்றி பேசுவதையை முழுவதுமாக தவிர்த்து வருகிறார். அதைப்பற்றிய கேள்விகள் கேட்டபோது கூட, மேலோட்டமாக மழுப்பி, தவறு செய்வது இயல்புதான் அதை நான் கடந்து வந்துவிட்டேன், அதை பற்றி நீங்கள் நினைவுப்படுத்த வேண்டாம் என்று கூறியிருந்தார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Anitha sampath, Bigg Boss Tamil, Vijay tv, Zee tamil