விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் நீயா நானா இந்த வார நிகழ்ச்சியில் அனிதா சம்பத் மற்றும் அறந்தாங்கி நிஷா ஆகியோர் கலந்து கொள்கின்றனர். இதுக் குறித்த புரமோ தற்போது வெளியாகியுள்ளது.
சின்னத்திரை வட்டாரத்தில் சக்சஸ்ஃபுல் பெண்களாக வலம் வந்து கொண்டிருப்பவர்கள் அனிதா சம்பத் மற்றும் அறந்தாங்கி நிஷா. அனிதா, நியூஸ் ரீடராக தனது பயணத்தை தொடங்கியர் விஜய் டிவி பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சின்னத்திரை பிரபலம் ஆனார். அதன் பின்பு வெள்ளித்திரையில் முகம் காட்டியவர் இன்று அடுத்தடுத்த படங்களில் முக்கிய ரோலில் நடித்து வருகிறார். சமீபத்தில் சொந்த வீட்டு கட்டி குடி புகுந்த அனிதாவுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் வாழ்த்துக்கள் குவிந்தன. அனிதா அடிக்கடி சொல்லும் ஒரே தாரக மந்திரம் பிரபா. அவரின் காதல் கணவர் பிரபா பற்றி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கூட அனிதா அதிகமாக பேசி இருப்பார்.
Exclusive : ‘பத்தல பத்தல’ பாடல் வரிகள் குறித்து கமல் ஓபன் டாக்
அதே போல தான் விஜய் டிவி அறந்தாங்கி நிஷாவும். மேடை பேச்சாளராக தனது பயணத்தை தொடங்கியவர், கலக்க போவது யாரு மூலம் காமெடி கலைஞரானார். பின்பு பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சென்றவர் நிறைய நெகடிவ் கமெண்டுகளுடன் வெளியே வந்தார். ஆனால் முயற்சியை தொடர்ந்து கைவிடாத நிஷா, யூடியூப் சேனல் தொடங்கி கலக்கி கொண்டிருக்கிறார். அதுமட்டுமில்லை வெள்ளித்திரையிலும் நகைச்சுவை நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவரின் வெற்றிக்கு மிகப் பெரிய துணை அவரின் கணவர் தான்.
மகா வில்லன் மன்சூர் அலிகான் தமிழ் சினிமாவில் உருவான கதை!
இப்படி இருக்கையில் இவர்கள் இருவரும் தங்களது கணவர்களுடன் இந்த வார நீயா நானா நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்கள். இவர்கள் மட்டுமில்லை சின்னத்திரையில் ஜொலிக்கும் பல பிரபலங்கள் தங்களது கண்வருடன் இந்த வார நிகழ்ச்சிக்கு வந்துள்ளனர். அதுக்குறித்த புரமோ தற்போது வெளியாகியுள்ளது. முதல் புரமோவில் நிஷாவின் கணவர் பேசுகிறார். அதில் அவர் மிகவும் வருத்தத்துடன் ஒரு விஷயத்தை பதிவு செய்கிறார். அதாவது செலிபிரிட்டியின் கணவராக இருப்பதால் டீக்கடையில் கூட நிம்மதியாக டீ குடிக்க முடியவில்லை. நீங்கலாம் இந்த டீக்கடையில் குடிக்கலாமா? என கேட்கின்றனர். நானும் மனிஷன் தானே என்கிறார் நிஷாவின் செல்ல கணவர் கட்டத்துரை
தொடர்ந்து பேசும் அனிதாவின் கணவர் பிரபா, காதலிக்கும் போது பைக்கில் அதிகம் வெளியே செல்வோம். ஆனால் இப்போது காரில் தான் செல்ல வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கோம். ஆனால் அனிதா அடிக்கடி பைக்கில் வெளியே போகலாமா என்று கேட்பார். நான் அழைத்து செல்ல மாட்டேன். ஆனால் உண்மையில் நானும் அந்த பயணத்தை நிறைய மிஸ் செய்கிறேன் என்கிறார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.