Home /News /entertainment /

Anitha Sampath: திருநங்கைகளுக்காக அனிதா சம்பத் செய்த விஷயம்... பாராட்டும் நெட்டிசன்கள்!

Anitha Sampath: திருநங்கைகளுக்காக அனிதா சம்பத் செய்த விஷயம்... பாராட்டும் நெட்டிசன்கள்!

அனிதா சம்பத்

அனிதா சம்பத்

அனிதா சம்பத் மேக்கப் செமினாரில் பிக் பாஸ் நமீதா மாரிமுத்து, நடிகை ஷகிலாவின் வளர்ப்பு மகள் மிளா ஆகியோர் மாடல்களாக கலந்துக் கொண்டனர்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India
  பிக் பாஸ் அனிதா சம்பத் திருநங்கைகளுக்கு இலவச மேக்கப் மற்றும் ஹேர் ஸ்டைல் செமினார் எடுத்துள்ளார்.

  செய்தி வாசிப்பாளராக இருந்து சினிமா என பயணத்தை நீட்டித்தவர்களில் அனிதா சம்பத்தும் ஒருவர். சன் டிவியில் செய்தி வாசிப்பாளராக பிரபலமான அவர் சில படங்களிலும் செய்தி வாசிப்பாளராக நடித்துள்ளார். சூர்யா நடிப்பில் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் வெளியான காப்பான் படத்தில் டிவி தொகுப்பாளராக நடித்திருந்தார்.

  பிரபாகரன் என்பவரை காதலித்து திருமணம் செய்துக் கொண்ட அனிதாவுக்கு சமூக வலைதளத்தில் நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள். இதற்கிடையே செய்தி வாசிப்பாளர் பணியை துறந்து பிக் பாஸ் வீட்டில் போட்டியாளராகக் களம் இறங்கினார். கலந்து கொண்ட ஓரிரு நாட்களிலேயே ரசிகர்கள் மத்தியில் கொஞ்சம் அதிருப்தியை ஏற்படுத்திய அவர் பல்வேரு சர்ச்சைகளிலும் சிக்கினார். இதையடுத்து பிக் பாஸ் அல்டிமேட்டிலும் பங்கேற்பாளராக கலந்துக் கொண்டார் அனிதா.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இதற்கிடையே சில மாதங்களுக்கு முன்பு புதிய வீட்டை வாங்கிய அனிதா, அது குறித்து தனது யூ-ட்யூப் சேனலில் பதிவிட்டிருந்தார். ”வீடு எப்போதுமே எங்க ரெண்டு பேருக்கும் மிக பெரிய கனவு. வாடகை வீட்டுலயே நல்ல வீடு கிடைக்காதா... பெட்ரூம் வச்ச வீட்டுக்கு போக மாட்டோமானு ஏங்குன காலம் எல்லாம் இருக்கு. ஓட்டு வீட்ல பிறந்து வளர்ந்த பிரபாக்கும் அதே தான். இன்னக்கி எங்களுக்கு பிடிச்ச மாதிரி எங்களுக்காக ஒரு வீடு” எனக் குறிப்பிட்டு புதிய வீட்டு கிரகப் பிரவேசத்தின் படங்களை பகிர்ந்திருந்தார்.   
  View this post on Instagram

   

  A post shared by Namitha Marimuthu (@namithamarimuthu)


  அஜித்தின் ஏகே62 படத்தில் ஐஸ்வர்யா ராய்?

  இந்நிலையில் சமீபத்தில் அவர் திருநங்கைகளுக்கு இலவச மேக்கப் மற்றும் ஹேர் ஸ்டைல் செமினார் எடுத்திருக்கிறார். அதில் பிக் பாஸ் நமீதா மாரிமுத்து, நடிகை ஷகிலாவின் வளர்ப்பு மகள் மிளா உள்ளிட்ட திருநங்கைகள் கலந்துக் கொண்டனர். அதன் படங்களைப் பகிர்ந்து, “திருநங்கைகளுக்காக நான் நடத்திய "TRANS-FORM” - FREE ONEDAY MAKEUP & HAIRSTYLE SEMINAR” வெற்றிகரமாக முடிந்தது. பலரின் உதவியோடு மட்டுமே இது சாத்தியம் ஆச்சு. அவங்க எல்லாருக்கும் என் பெரிய நன்றிகள். இதை தொடர்ச்சியா செய்யணும், மேலும் பல திருநங்கைகளுக்கு இது உதவணும்ங்குறது தான் எங்க எல்லாருடைய ஆசையும்.
  திருநங்கைகளில் நேர்மையா உழைச்சு சம்பாதிச்சு சுயமா வாழ நினைக்கும் எத்தனையோ பேர் இருக்காங்க. அவங்களுக்கு ஒரு வாய்ப்பு ஏற்படுத்திக்கொடுக்கணும்ங்கறதுதான் இந்த TRANS- FORM உடைய நோக்கம்😇
  மதுரை, திருநெல்வேலி, திருவள்ளூர்,கோவை-னு பல வெளியூர்கள்ல இருந்தும் நிறைய பேரு கலந்துக்கிட்டாங்க🥰 இதுல சில பேரு வெற்றிகரமா மேக்கப் கலைஞர்களா ஜெயிச்சாலும் அத விட பெரிய சந்தோஷம் வேற எதுவும் இல்ல” என்று தெரிவித்துள்ளார்.
  Published by:Shalini C
  First published:

  Tags: Vijay tv

  அடுத்த செய்தி