ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

பாவ்னியை பற்றி அப்படி என்ன பேசினார் அனிதா.. சண்டைக்கு வந்த பிக் பாஸ் அமீர்!

பாவ்னியை பற்றி அப்படி என்ன பேசினார் அனிதா.. சண்டைக்கு வந்த பிக் பாஸ் அமீர்!

பிக் பாஸ் அனிதா - அமீர்

பிக் பாஸ் அனிதா - அமீர்

”’பிக் பாஸ் சீசன் 5ல் நிரூப் மூன்றாவது இடத்தில் வந்து இருக்கலாம். பாவ்னி வந்தது சுத்தமாக ஏற்று கொள்ள முடியவில்லை”

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் பாவ்னி பற்றி அனிதா சம்பத் பேசிய வார்த்தைகள் தான் இப்போது பாவ்னி ரசிகர்களை அதிக கோபமடைய செய்து இருக்கிறது. இதற்கு அமீரும் தனது எதிர்ப்பை தெரிவித்து இருக்கிறார். என்ன விஷயம் அது வாங்க பார்க்கலாம்.

  இந்தியில் மிகப் பெரிய ஹிட் அடித்த பிக் பாஸ் நிகழ்ச்சியை தமிழில் அறிமுகப்படுத்தியது ஸ்டார் விஜய்.தமிழில் முதல் சீசன் நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு வெற்றி. டி.ஆர்.பியில் கலக்கியது. ஜூலி, ஓவியா, சினேகன் போன்றவர்களால் நிகழ்ச்சி மேலும் சுவாரசியமானது. தொடர்ந்து 5 சீசன்களை வெற்றிக்கரமாக ஒளிப்பரப்பி முடித்தது. இதன் அடுத்த சகாப்தமாக பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை ஓடிடியில் ஒளிப்பரப்ப தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் மற்ற 5 சீசன்களில் கலந்து கொண்டு வெற்றி பெறாத போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். சினேகன், பாலாஜி, வனிதா, அனிதா, ஸ்ருதி, நிரூப், அபிநய், ஷாரிக், பாலாஜி, தாமரை , சுரேஷ் சக்கரவர்த்தி என ஒரு படையே களம் இறங்கியது.

  இதையும் படிங்க.. எல்லாத்துக்கும் அம்மா தான் காரணம்.. அபி டெய்லர் சீரியல் ரேஷ்மா சொன்ன விஷயம்!

  இதில் வனிதா பாதியிலே நிகழ்ச்சி விட்டு சென்று விட்டார். முறையாக நடந்த எலிமினேஷன் படி சுரேஷ் தாத்தா, அபிநய், ஷாரிக், சுஜா ஆகியோர் வெளியேறினர். இந்த வாரம் முதல் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை கமலுக்கு பதிலாக நடிகர் சிம்பு தொகுத்து வழங்கி வருகிறார். அவரின் வருகைக்கு பிறகு பிக் பாஸ் அல்டிமேட்டின் டி.ஆர்.பியும் எகிறியுள்ளது. வைல்டு கார்டு எண்ட்ரியாக விஜய் டிவி சதீஷ் மற்றும் சுரேஷ் தாத்தா பிக் பாஸ் அல்டிமேட் வீட்டுக்குள் சென்றுள்ளனர்.

  இதையும் படிங்க.. திரும்ப திரும்ப தப்பு செய்யும் வெற்றி… அபி உனக்கு இது தேவையாம்மா?

  இந்நிலையில் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள போட்டியாளர்கள் அனைவரும் மற்ற சீசன்களில் நடந்ததை பற்றி பேசவே அதிக நேரத்தை செலவழித்து வருகின்றனர். குறிப்பாக அனிதா சம்பத். வந்த முதல் நாளில் இருந்து எங்க சீசனில் அது நடந்தது, இது நடந்தது, உங்க சீசன்ல கேம் ஈஸி என ஒரே பழைய கதையை பேசி ரசிகர்களை கடுப்பாக்கி வந்தார். அப்படி இருக்கையில் சில தினங்களுக்கு முன்பு அனிதா,  பாவ்னி மற்றும் அமீரை பற்றி பேசி இருந்தார்.

  ’பிக் பாஸ் சீசன் 5ல் நிரூப் மூன்றாவது இடத்தில் வந்து இருக்கலாம். பாவ்னி வந்தது சுத்தமாக ஏற்று கொள்ள முடியவில்லை. அவர் காதல் விளையாட்டு விளையாடியது போல தானே எங்களுக்கு காட்டப்பட்டது. அமீர், பாவ்னி எதுமே செய்யாமல் ஃபைனலிஸ்ட் ஆகிவிட்டனர்” என்றார். இதற்கு பாவ்னி ரசிகர்கள் கடும் எதிர்ப்பை சமூகவலைத்தளங்கலில் பதிவு செய்து வருகின்றனர். குறிப்பாக பாவ்னிக்கு ஆதரவாக அமீரும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் “யாரும் எதும் செய்யாமல் பிக் பாஸ் 5 ஃபைனலிஸ்ட இடத்திற்கு வரவில்லை. பாவ்னி தனியாக நின்று தன்னுடைய கேம்மை முழுமையாக விளையாடினார்” என்று கூறியுள்ளார்.

  இந்த பதிவுக்கு பாவ்னி நன்றியும் தெரிவித்துள்ளார். நிகழ்ச்சி முடிந்த பிறகும் பாவ்னிக்கு ஒரு பிரச்சனை என்று வந்ததும் முதலில் ஓடி வந்தது அமீர் தான் என வழக்கம் போல் ரசிகர்கள் கொண்டார்டி வருகின்றனர்.

  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  Published by:Sreeja
  First published:

  Tags: Bigg Boss Tamil, Bigg Boss Tamil 5, Vijay tv