பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் தாமரை செல்வி சொன்ன அந்த விஷயத்தால் ஆங்கர் பிரியங்கா கோபமடைந்தார் என்ற தகவலை நெட்டிசன்கள் இணையத்தில் வேகமாக பகிர்ந்து வருகின்றனர். அப்படி என்ன நடந்தது ? வாங்க பார்க்கலாம்.
பிக் பாஸ் சீசன் 5 ல் இருந்தே தாமரை vs பிரியங்கா பிரச்சனை தீராத ஒன்றாகவே ஓடிக் கொண்டிருக்கிறது. தாமரைக்கு ஆதரவாக சில குரல்களும், பிரியங்காவுக்கு எதிராக சில விமர்சனங்களும் அவ்வப்போது இணையத்தில் உலா வரும். அதே போல், சில சமயங்களில் தாமரையும் நெகடிவ் விமர்சங்களை பெற்றுள்ளார். ராஜூவுக்கு அடுத்தப்படியாக பிக் பாஸ் சீசன் 5 வெற்றிக்கு மிக முக்கியமான காரணம் பிரியங்கா, தாமரை செல்வியின் சண்டை என்றே கூறலாம். இப்போது இந்த காம்போ பிக் பாஸ் ஜோடிகள் சீசன் 2விலும் தொடர்கிறது.
ராஜூவுடன் சேர்ந்து பிரியங்கா ஆங்கரிங் செய்கிறார். ரியல் ஜோடிகளாக, தாமரை தனது கணவருடன் பிபி ஜோடிகள் 2வில் கலந்து கொண்டு பட்டையை கிளப்பி வருகிறார். போன வாரம், ஞாயிற்றுக்கிழமை ஒளிப்பரப்பான கிராமம் vs சிட்டி ரவுண்டில் ஜோடிகள் 2 குழுவாக பிரிந்து நடனம் ஆடினர். இதில் தாமரை செல்வி, சிட்டி கான்செப்டில் தனது கணவருடன் ரோபா போல் நடனமாடவுள்ளார். போன வாரம் ஐக்கி, பாவ்னி - அமீர், அபிஷேக் - நாடியா ஆகியோர் கிராமம் கான்செப்டில் தங்களது நடனத்தை முடித்துள்ளனர். இந்த எபிசோடியில் இடையே இடையே சில என்டர்டெயிண்மெண்ட் டாஸ்குகளும் வைக்கப்பட்டன. இதை பிரியங்காவும் ராஜூவும் சேர்ந்து நடத்தி வைத்தனர்.
அதில் ஒன்று தான் ரிங் போடுதல் டேபிளில் அடுக்கி வைத்திருந்த பொருட்கள் மீது போட்டியாளர்கள் ரிங்க் எறிந்து, அதில் கிடைக்கும் பொருளை தனது ஜோடி அல்லாமல் வேற ஒருவருக்கு டெடிகேட் செய்ய வேண்டும், அதற்கு ஒரு ரீசனும் தர வேண்டும் என கூறப்பட்டது. அப்போது தான் தாமரை செல்வி ரிங்க் எறிந்து கண்ணாடி வென்றார். அந்த கண்ணாடியை ஐக்கி பெர்ரிக்கு தரப்போவதாக சொன்னார்.
அதற்கு காரணமாக அவர் சொன்னது, “பிக் பாஸ் வீட்டில் இருந்து வந்த பின்பு என்னுடன் அதே மாதிரி அன்பாக பழகியவர் ஐக்கி தான். என்னை கடைக்கு அழைத்து சென்று எல்லா மேக்கப் பொருட்களையும் வாங்கி கொடுத்து, திரும்பி செல்லும் போது கையில் காசு கொடுத்து பஸ் ஏத்தி அனுப்பி வைத்தார். ஐக்கியை என் குடும்பத்தில் ஒருவராக தான் பார்க்கிறேன்” என்றார். இதை தாமரை சொல்லும் போதும் பிரியங்கா முகம் கடுப்பில் மாறியதாக நெட்டிசன்கள் கொளுத்தி போட்டுள்ளனர். அந்த கடுப்பில் தான் பிரியங்கா” ஐக்கிக்கு கண்ணாடி போட்டு அப்படியே உட்கார்ந்துக்கோ’ன்னு தாமரையை பார்த்து சொன்னதாக நெட்டிசன்கள் குறிப்பிட்டுள்ளனர்.
அதே போல் சில நேரம் கழித்து, பிரியங்கா தாமரையை பார்த்து “இங்கே பேசுவதெல்லாம் விளையாட்டு தான் பின்னாடி போய் நாமினேஷன் செய்யாத தாமரை” என்பார். அதற்கு தாமரை பதிலுக்கு, இது பிக் பாஸ் வீடு இல்லை, நேராகவே சொல்லலாம் ஏன் பின்னாடி போய் சொல்ல வேண்டும்” என ரிப்ளையும் கொடுத்தார். மொத்தத்தில் என்ன தான் இருவரும் டிவி, ரசிகர்களுக்காக சிரித்து சிரித்து பேசினாலும் உள்ளுக்குள் இருவரும் பழைய விஷயத்தை இன்னும் மறக்கவில்லை என்கின்றனர் ரசிகர்கள்.
இது உண்மையா? இல்லையா? என்பது அவர்கள் இருவருக்கும் தான் தெரியும்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Anchor Priyanka, Bigg Boss Tamil, Vijay tv