ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

அவசர அவசரமாக ஐதராபாத் சென்ற சூப்பர் சிங்கர் பிரியங்கா.. இதுதான் காரணமா?

அவசர அவசரமாக ஐதராபாத் சென்ற சூப்பர் சிங்கர் பிரியங்கா.. இதுதான் காரணமா?

 விஜய் டிவி பிரியங்கா

விஜய் டிவி பிரியங்கா

சென்னை விமான நிலையத்தை அடைந்த பிரியங்காவுடன் அவரின் பிக் பாஸ் சீசன் 5 நண்பர்களான மதுமிதா, பாவனி ரெட்டி மற்றும் அபிஷேக் ராஜா இணைந்தனர்.

 • Trending Desk
 • 2 minute read
 • Last Updated :

  விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளினி பிரியங்கா தனது யூடியூப் சேனலில் பகிர்ந்துள்ள ஒரு டிராவல் வ்லோக் (Travel Vlog) வீடியோவில் "ஐ யம் பேக்" என்பதை நிரூபிக்கும் வண்ணம் பல மேட்டர்களை செய்துள்ளார். சுவாரசியமான விடயம் என்னவென்றால் பிரியங்காவின் இந்த பயணத்தில் சக பிக் பாஸ் போட்டியாளர்களான மதுமிதா, பாவனி ரெட்டி மற்றும் அபிஷேக் ராஜா ஆகியோரும் இணைந்துள்ளனர்.

  வெளியான வீடியோவில், "எவ்ளோதான் முயற்சி செஞ்சாலும் அந்த பிக் பாஸ் வீட்டுக்குள்ள இருந்து வெளிய வரவே முடியல... காலையில் எழும் போதெல்லாம் அந்த வேக் அப் சாங் போட மாட்டாங்களா? மைக் சரியா இருக்கானு செக் பண்ண வேண்டாமா? நாமிநேஷன் பண்ண சொல்ல மாட்டாங்களா? ஸ்டோர் ரூமிற்கு வாங்கனு கூப்பிட மாட்டாங்களா? இப்படி பல விஷயங்கள் மண்டைக்குள்ள ஓடிட்டே இருக்கு.. இதெல்லாம் எப்போ சரி ஆகும்? எப்படி சரி ஆகும்னு எனக்கு தெரியல.. அதுக்கு தான் நீங்க இருக்கீங்க!" என்று வேகமாக காரில் சென்றபடியே பேசுகிறார் பிரியங்கா.

  சென்னை விமான நிலையத்தை அடைந்த பிரியங்காவுடன் அவரின் பிக் பாஸ் சீசன் 5 நண்பர்களான மதுமிதா, பாவனி ரெட்டி மற்றும் அபிஷேக் ராஜா இணைந்தனர், பின் அவர்கள் அனைவரும் ஹைதராபாத்திற்கு ஊர் சுற்றிப்பார்க்க செல்வதாகவும் அறிவித்தனர்.

  இதையும் படிங்க.. தாமரையுடன் பேசினாரா சிவகார்த்திகேயன்? பிக் பாஸ் அல்டிமேட்டில் தெரிய வரும் அடுத்தடுத்த உண்மைகள்!

  ஒருபக்கம் "நாங்க கோங்குரா கேங்" என்று அபிஷேக் 'ஃபன்' பண்ண, மறுபக்கம் "எங்க எல்லாருக்குமே கொஞ்சம் முத்தி போச்சு" என்று பிரியங்கா 'ஓப்பன் ஸ்டேட்மென்ட்' கொடுக்க, விமானமும், விமான நிலையமே கலகலத்து போகும்படி செய்து, ஒருவழியாக நால்வரும் ஹைத்ராபாத்தை வந்து சேர்ந்தனர் ஹைத்ராபாத் வந்ததுமே, கேக் வெட்டி கொண்டாடிய நால்வரும் ஒருவருக்கு ஒருவர் மாற்றி மாற்றி கேக்கை ஊட்டிவிட்டும் கொண்டனர்.

  இதையும் படிங்க.. பாசிப்பருப்பை வைத்து இப்படியொரு ஸ்வீட்டா? முன்னாடியே தெரிஞ்சு இருந்தா அடிக்கடி செஞ்சிருக்கலாம்!

  பிறகு அடுத்த நாள் ஹோட்டலில், பிரியங்கா, மது மற்றும் பாவனி ஆகிய மூவரும் பிக் பாஸ் வீட்டில் பிளே செய்யப்படுவதை போலவே வேக் அப் சாங் ஒன்றை போட்டு அமர்க்களம் செய்தபடியே கட்டிலில் கட்டி புரண்டு விளையாடி பின் எழுகின்றனர். பிறகு அனைவரும் உணவருந்திவிட்டு வெளியே ஊர் சுற்ற கிளம்புகின்றனர்.

  ' isDesktop="true" id="703673" youtubeid="EWWklvsQyz0" category="television">

  முதல் இடமாக ஹைத்ராபாத்தில் உள்ள பிரபல ஹோட்டல்களில் ஒன்றான ஷா ஹோஸ் பிரியாணிக்கு சென்றனர். பிறகு ஹைத்ராபாத்தின் பிரபல சுற்றுலா தளங்களில் ஒன்றான ஷில்பாராமமிற்கு வந்து சேர்ந்தனர். அங்கே ஷாப்பிங், ஊஞ்சல், பொம்மலாட்டம் என முடிந்த வரை 'ஃபன்' செய்தனர்.

  பிறகு இரண்டாவது நாளில் ஹைத்ராபாத்தில் ஊர் சுற்றிய போது அவர்கள் என்னென்ன செய்தார்கள்? எங்கெல்லாம் சென்றார்கள்? என்னென்ன சாப்பிட்டார்கள்? காரை எங்கே நிறுத்தினோம் என்று தெரியாமல் நால்வரும் தெருத்தெருவாக அலைவது போன்றவைகளை உள்ளடக்கிய பார்ட்-2 ப்ரோமோ வீடியோ ஒன்றுடன் பிரியங்கா தனது சேனலில் வெளியிட்ட டிராவல் வ்லோக் வீடியோ முடிவடைகிறது

  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  Published by:Sreeja
  First published:

  Tags: Anchor Priyanka, Bigg Boss Tamil, Vijay tv