Home /News /entertainment /

விஜய் டிவி கொடுத்த அதிர்ச்சி.. அழுது தீர்த்த ஆங்கர் பிரியங்கா!

விஜய் டிவி கொடுத்த அதிர்ச்சி.. அழுது தீர்த்த ஆங்கர் பிரியங்கா!

பிரியங்கா தேஷ்பாண்டே

பிரியங்கா தேஷ்பாண்டே

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் எல்லா ரியாலிட்டி நிகழ்ச்சியிலும் பிரியங்கா மற்றும் மாகாபாவை மட்டுமே ஆங்கராக பார்க்க முடிகிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    விஜய் டிவி கொடுத்த இன்ப அதிர்ச்சியால் ஆங்கர் பிரியங்கா தேம்பி தேம்பி அழுகிறார். இதுக் குறித்த வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

    விஜய் டிவியில் இப்போது ஒளிப்பரப்பாகும் அனைத்து ரியாலிட்டி நிகழ்ச்சிகளும் பிரியங்கா மற்றும் மாகாபாவை நம்பி தான் உள்ளது. இதற்கு முன்பு ரம்யா, பாவனா, டிடி, ஜெகன் என ஏகப்பட்ட ஆங்கர்கள் விஜய் டிவியில் கலக்கி கொண்டிருந்தனர். இப்போது அவர்கள் பல்வேறு காரணங்களால் விஜய் டிவியில் எந்த நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்குவது இல்லை. தேவைப்பட்டால் முக்கியமான படங்களின் ஆடியோ லான்ச், பண்டிகை கால சிறப்பு நிகழ்ச்சிகளை மட்டுமே தொகுத்து வழங்கி வருகிறார்கள். அதனால் விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் எல்லா ரியாலிட்டி நிகழ்ச்சியிலும் பிரியங்கா மற்றும் மாகாபாவை மட்டுமே பார்க்க முடிகிறது.

    எதிர் நீச்சல் சீரியலில் அடுத்து நடக்க போவது இதுதான்..கெஸ் செய்ய முடியாத ட்விஸ்ட்!

    ஆனால் ரசிகர்களுக்கு இவர்களின் ஆங்கரிங் துளியும் போர் அடிக்கவில்லை. சூப்பர் சிங்கரின் அடுத்த சீசன் தொடங்கினாலும் அதிலும் இருவரும் ஆங்கராக ஆஜர்  ஆகிவிடுவார்கள். வழக்கம் போல் இவர்களுக்காவே ரசிகர்களும்  நிகழ்ச்சியை பார்க்க தொடங்கி விடுவார்கள். அந்த அளவுக்கு தனக்கென தனி ரசிகர்கள் கூட்டத்தை மாகாபா - பிரியங்கா சம்பாதித்துள்ளனர்.  அதிலும் டாப் ஆங்கராக வலம் வரும் பிரியங்கா பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்பு அடுத்த லெவலுக்கு சென்று விட்டார்.

    சினிமாவை மிஞ்சிய லவ் சீன்.. காற்றுக்கென்ன வேலியில் காதலை சொன்ன வெண்ணிலா!

    ஆங்கரிங்கில் டிடிக்கு பிறகு மிகப் பெரிய ரசிகர்கள் கூட்டத்தை சம்பாதித்து இருக்கிறார் பிரியங்கா. அதற்கு அவரின் ஆங்கரிங் திறன் மட்டும் காரணமில்லை அவரின் இயல்பான பேச்சும், டைமிங் காமெடியும் , பாசிடிவ் எனர்ஜியும் முக்கியமான ஒன்று. தன்னை பற்றி ஆயிரம் விமர்சனங்கள் வந்தாலும் அதை ஓரமாக வைத்துவிட்டு தொடர்ந்து தனது பணியை செய்து வருகிறார். இந்நிலையில் விஜய் டிவியில் ஆங்கராக நுழைந்து பிரியங்கா தேஷ்பாண்டே  10 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார்.



    இந்த தருணத்தை பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் விஜய் டிவி குழு கொண்டாடியுள்ளது. ஸ்பெஷல் வீடியோ, கேக் கட்டிங், பிரியங்காவின் நண்பர்கள் ஸ்பெஷல் என்ட்ரி என நிறைய சர்ப்ரைஸ்கள் பிரியங்காவுக்கு கொடுக்கப்படுகின்றன. இதை சற்றும்  எதிர்பார்க்காதவர் கண்கலங்கி தேம்பி தேம்பி அழுகிறார். இதுக் குறித்த புரமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. முழு நிகழ்ச்சியை வரும் ஞாயிறன்று விஜய் டிவியில் பார்க்கலாம்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sreeja
    First published:

    Tags: Anchor Priyanka, Bigg Boss Tamil, Vijay tv

    அடுத்த செய்தி