ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

கணவர் குறித்து முதன் முதலாக பேசிய விஜய் டிவி ஆங்கர் பிரியங்கா! விவாகரத்து வதந்தி உண்மையா?

கணவர் குறித்து முதன் முதலாக பேசிய விஜய் டிவி ஆங்கர் பிரியங்கா! விவாகரத்து வதந்தி உண்மையா?

ஆங்கர் பிரியங்கா

ஆங்கர் பிரியங்கா

தன்னுடைய கணவர் குறித்து பிரியங்கா பெருமையாக கூறுகிறாரா? அல்லது விரக்தியில் இப்படி ஒரு பதிலை தந்து இருக்கிறாரா ?

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

விஜய் டிவி ஆங்கர் பிரியங்கா முதன் முறையாக தனது கணவர் குறித்து பேசியுள்ளார். ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு இந்த பதிலை தந்துள்ளார் பிரியங்கா தேஷ்பாண்டே.

விஜய் டிவி பிரியங்கா குறித்த அறிமுகவே தேவையில்லை. சின்னத்திரை டாப் ஆங்கராக கலக்கி கொண்டிருப்பவர் தற்போது சூப்பர் சிங்கர் மற்றும் பிக் பாஸ் ஜோடிகள் சீசன் 2 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஆங்கரிங்கில் டிடிக்கு பிறகு மிகப் பெரிய ரசிகர்கள் கூட்டத்தை சம்பாதித்து இருக்கிறார் பிரியங்கா. அதற்கு அவரின் ஆங்கரிங் திறன் மட்டும் காரணமில்லை அவரின் இயல்பான பேச்சும், டைமிங் காமெடியும் தான். தன்னை தானே கலாய்த்து கொண்டு மக்களை சிரிக்க வைத்துக் கொண்டிருந்தவர் ,பிக் பாஸில் நிறையவே அழுது விட்டார். மற்றவர்களையும் அழ வைத்தார்.

இந்த விஷயம் ரஜினிக்கு தெரியுமா? படையப்பா சீனை பயன்படுத்திய ஜீ தமிழ் சீரியல்

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பிரியங்காவின் பெயர் டேமேஜ் ஆனது, ஆனால் அடுத்த சில மாதங்களிலே அதை சரி செய்து மீண்டும் ஃபாமூக்கு திரும்பினார். பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போது சரி, பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வந்த பின்பும் சரி ரசிகர்கள் அதிகம் கேட்ட கேள்வி அவரின் கணவர் பிரவீன் குறித்து தான். காரணம், வீட்டில் எந்த இடத்திலும் பிரியங்கா பிரவீன் குறித்து பேசவில்லை. ஃபிரீஸ் டாஸ்கில் அவரின் அம்மா மற்றும் தம்பி தான் உள்ளே வந்தனர்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர் வீட்டில் விசேஷம்.. திரண்டு சென்ற சின்னத்திரை பிரபலங்கள்!

இந்நிலையில் தான் பிரவீனுக்கும் பிரியங்காவுக்கும் விவாகரத்து ஆகிவிட்டதாக வதந்திகள் பரவ தொடங்கின. இதற்கு பிரியங்கா லைவில் சொன்ன   பதில் நேரம் வரும் போது கண்டிப்பாக என்னுடைய திருமண வாழ்க்கை குறித்து பேசுகிறேன் என்றார். இந்நிலையில் சமீபத்தில் பிரியங்காவின் தம்பிக்கு பெண் குழந்தை பிறந்தது. குழந்தையின் புகைப்படத்தை பயங்கர சந்தோஷத்துடன் பிரியங்கா இன்ஸ்டாவில் ஷேர் செய்து இருந்தார். இந்த பதிவு வைரலானது. இந்நிலையில் இன்ஸ்டாவில் பயங்கர ஆக்டிவாக இருக்கும் பிரியங்காவிடம் ரசிகர் ஒருவர், “கல்யாணத்திற்கு பிறகும் எப்படி எல்லாவற்றையும் சாதாரணமாக எடுத்து கொள்கிறீர்கள்?” என கேள்வி எழுப்பி இருக்கிறார்.


அதற்கு பதில் அளித்துள்ள பிரியங்கா “உங்களை புரிந்து கொள்ளும்படியான கணவர் இருந்தால் அவருக்கு நீங்கள் விசுவாசமாக இருந்தால் அனைத்தும் சாத்தியமாகும்” என கூறியுள்ளார். பிரியங்காவின் இந்த பதில் ரசிகர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த பதில் மூலம் தன்னுடைய கணவர் குறித்து பிரியங்கா பெருமையாக கூறுகிறாரா? அல்லது விரக்தியில் இப்படி ஒரு பதிலை தந்து இருக்கிறாரா? என ரசிகர்கள் குழம்பி போயுள்ளனர். இந்த சர்ச்சைக்கு எல்லாம் பிரியங்கா கூடிய விரைவில் முற்றுப்புள்ளி வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Anchor Priyanka, Vijay tv