ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

விஜய் டிவி ஆங்கர் பிரியங்கா பற்றி பரவிய அந்த தகவல்..கடைசியில் தெரிய வந்த உண்மை!

விஜய் டிவி ஆங்கர் பிரியங்கா பற்றி பரவிய அந்த தகவல்..கடைசியில் தெரிய வந்த உண்மை!

ஆங்கர் பிரியங்கா

ஆங்கர் பிரியங்கா

பிரியங்கா தனது இன்ஸ்டாகிராமில் உடல் எடை குறைத்து ஒல்லியான தோற்றத்தில் நடத்திய ஃபோட்டோ ஷூட் படங்களை வெளியிட்டார்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  விஜய் டிவி ஆங்கர் பிரியங்கா பற்றி பரவிய வதந்தியின் உண்மை காரணம் தற்போது தெரிந்து விட்டது. இதுக் குறித்த புகைப்படமும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

  விஜய் டிவி சூப்பர் சிங்கர் ஆங்கர் பிரியங்கா பற்றி சின்னத்திரை ரசிகர்களுக்கு அறிமுகம் தேவைப்படாது. தன்னுடைய பாணியில் ஆங்கரிங்கில் கலக்கிக் கொண்டிருந்த பிரியங்கா பிக் பாஸ் 5ல் போட்டியாளராகவும் கலந்துக் கொண்டார். அதில் அவர் பாசிடிவ் நெகடிவ் என கலவையான விமர்சனங்களையும் பெற்றார். பிக் பாஸ் சீசன் 5 ரன்னர் அப் பிரியூ தான். அவருக்கு வலைத்தளங்களில் ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளமும் இருக்கிறது. பிக் பாஸ் வீட்டில் இருந்து பிரியங்கா வந்த பின்பு ரசிகர்களுடன் லைவிலும் உரையாடினார். சின்ன பிரேக் எடுத்துக் கொண்டு மீண்டும், சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு வந்தார்.

  இடையில் ஹதராபாத் டூரூமும் சென்று வந்தார். இதனால் மைனா நந்தினி மா.கா.பாவுடன் சேர்ந்து சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார். இதுக் குறித்து ஏகப்பட்ட சர்ச்சைகள் இணையத்தில் உலா வந்தன. அதாவது பிரியங்கா சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இருந்து விலகி விட்டதாக இணையத்தில் வேகமாக தகவல்கள் பரவின. ஆனால் கசையில் ஹதராபாத்தில் இருந்து வந்த பின்பு மீண்டும் பிரியங்கா தான் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

  சத்யாவா இப்படி ஒரு காரியத்தை செய்தார்? ஷாக்கில் வருண்!

  இப்படி இருக்கையில் கடந்த வாரம் பிரியங்கா தனது இன்ஸ்டாகிராமில் உடல் எடை குறைத்து ஒல்லியான தோற்றத்தில் நடத்திய ஃபோட்டோ ஷூட் படங்களை வெளியிட்டார். கூடவே பிரியங்கா விஜய் டிவி சீரியலில் நடிக்க இருப்பதாகவும் அதனால் தான் உடல் எடையை குறைத்ததாகவும், விஜய் டிவி மிர்ச்சி செந்தில் உடன் தான் பிரியங்கா சீரியலில் நடிக்க போவதாக தகவல்கள் இணையத்தில் வெளியாகின.
   
  View this post on Instagram

   

  A post shared by Tamil Serials (@tamilserialexpress)  கோபி மீது பயங்கர கோபத்தில் ஈஸ்வரி அம்மா... சுயநலமாக யோசிக்கும் ராதிகா!

  ஆனால் உண்மை அது இல்லை. பிரியங்கா உடல் எடை குறைத்த விவகாரம் அவருக்கு மட்டும் தான் தெரியும். ஆனால் மிர்ச்சி செந்திலுடன் பிரியங்கா நடிக்க இருப்பது சீரியலில் இல்லை. அது ஒரு விளம்பர ஷூட். இந்த விளம்பரத்தில் பிரியங்கா நாம் இருவர் நமக்கு இருவர் மாயனான மிர்ச்சி செந்தில், தமிழும் சரஸ்வதியும் கோதை அம்மாவுடன் சேர்ந்து நடிக்கிறார். இந்த புகைப்படமும் தற்போது வெளியாகியுள்ளது.

  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  Published by:Sreeja
  First published:

  Tags: Anchor Priyanka, Bigg Boss Tamil 5, TV Serial, Vijay tv