Home /News /entertainment /

மீண்டும் மைக்கை பிடிக்கும் நக்‌ஷத்ரா நாகேஷ்...அம்மணி பயங்கர ஹேப்பி!

மீண்டும் மைக்கை பிடிக்கும் நக்‌ஷத்ரா நாகேஷ்...அம்மணி பயங்கர ஹேப்பி!

நக்‌ஷத்ரா நாகேஷ்

நக்‌ஷத்ரா நாகேஷ்

மீண்டும் நக்‌ஷத்ரா ஆங்கரிங்கில் பிஸியாகி இருக்கிறார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    சீரியலில் பிஸியாக நடித்து வரும் நக்‌ஷத்ரா நாகேஷ் மீண்டும் மைக்கை பிடித்து ஆங்கரிங் பணிக்கு திரும்பியுள்ளார். இதுக் குறித்து அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் பூரிப்புடன் புகைப்படங்களை ஷேர் செய்து இருக்கிறார்.

    சன் டிவியில் தொகுப்பாளினியாக தன் திரைப்பயணத்தை தொடங்கிய நக்‌ஷத்ரா நாகேஷ், தற்போது சின்னத்திரையில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். அடிக்கடி வெள்ளித்திரையிலும் முகம் காட்டுகிறார். இவர் நடித்த குறும்படங்களும் பிரபலமானவை. இவருக்கு தனியாக ரசிகர்கள் பட்டாளம் வேற . இவரின் பேச்சு ஏற்கெனவே எல்லோருக்கும் பிடித்து போக இவரின் நடிப்பும் எல்லோருக்கு ஃபேவரெட் ஆனது.

    படபடவென பேசுவது தான் நக்‌ஷத்ராவின் தனித்துவம். தொகுப்பாளினியாக அவர் வெற்றிபெற காரணமும் அதுதான். தற்போது விஜய் டிவியின் பிரைம் டைம் சீரியலான ’தமிழும் சரஸ்வதி’’ தொடரில் சரஸ்வதி என்னும் கேரக்டர் மூலமாக மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளார். அதே போல் முதன் முதலில் குஷ்பு உடன் இவர் சேர்ந்து நடித்த லட்சுமி ஸ்டோர்ஸ் சீரியல் சூப்பர் டூப்பர் ஹிட். அதன் பின்பு நாயகி சீரியலின்  2 ஆம் பாகத்தில் இவர் லீட் ரோலில் நடிக்க  தொடங்கினார். அந்த சீரியலிலும் இவரின் கதாபாத்திரம் நன்கு பேசப்பட்டது.




    நக்‌ஷத்ரா நாகேஷ், தனது திறமையான பேச்சால் தான் முதன் முதலில் மக்களிடம் அறிமுகம் ஆனார். அவருக்கு ஆங்கரிங் என்றால் அவ்வளவு பிடிக்குமாம். இதை பல இடங்களில் நக்‌ஷத்ரா பதிவு செய்துள்ளார். சன் டிவியில் இருந்த சமயத்தில் பல நிகழ்ச்சிகளை நக்‌ஷத்ரா தொகுத்து வழங்கி இருக்கிறார். சன் சிங்கர், சன் குடும்ப விருதுகள் உள்ளிட்ட டாப் ரேட்டிங் நிகழ்ச்சிகளையும் நக்‌ஷத்ரா தொகுத்து வழங்கியிருக்கிறார்.




    இந்நிலையில் இப்போது மீண்டும் நக்‌ஷத்ரா ஆங்கரிங்கில் பிஸியாகி இருக்கிறார். தென்னிந்திய சர்வதேசத் திரைப்பட விருதுகள் (SIIMA விருதுகள்) நிகழ்ச்சியில் நக்‌ஷத்ராவும் ஹோஸ்ட். இந்த விஷயத்தை புகைப்படத்துடன் நக்‌ஷத்ரா ரசிகர்களுக்கு தெரியப்படுத்தியுள்ளார். ”மிகவும் பிடித்தமான வேலைக்கு திரும்பியுள்ளேன்” என அந்த புகைப்படத்தில் நக்‌ஷத்ரா கூறியுள்ளார். இந்த விருது நிகழ்ச்சி எந்த சேனலில் ஒளிப்பரப்பாகவுள்ளது என்ற தகவல் இதுவரை வெளியாகவில்லை.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sreeja
    First published:

    Tags: Sun TV, TV Serial, Vijay tv

    அடுத்த செய்தி