Home /News /entertainment /

சிரித்தப்படியே தலைகுனிந்த மொமண்ட்.. ரவீந்தர் -விஜே மகாலட்சுமி திருமண வீடியோ இதோ!

சிரித்தப்படியே தலைகுனிந்த மொமண்ட்.. ரவீந்தர் -விஜே மகாலட்சுமி திருமண வீடியோ இதோ!

 மகாலாட்சுமி - ரவீந்தர்

மகாலாட்சுமி - ரவீந்தர்

மகாலாட்சுமி - ரவீந்தர் இருவரும் தங்களது இன்ஸ்டா பக்கத்தில் திருமணம் புகைப்படங்களை வெளியிட்டனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    2வது திருமணம் செய்துக் கொண்ட மகாலட்சுமி - ரவீந்தர்  திருமண வீடியோ தற்போது இன்ஸ்டாவில் வெளியாகியுள்ளது.

    சன் மியூசிக் சேனலில் தொகுப்பாளினியாக இருந்து பட்டி தொட்டி எங்கும் ஃபேமஸ் ஆனவர் விஜே மகாலட்சுமி. சன் மியூசிக் சேனலில் இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் ஏகப்பட்ட வரவேற்பு. லேடிஸ் ஸ்பெஷல், ஹலோ, வாழ்த்துக்கள் போன்ற நிகழ்ச்சிகளை மகாலட்சுமி தொகுத்து வழங்கியுள்ளார். இது தவிர சின்னத்திரை பக்கமும் கவனத்தை செலுத்தினார்.சீரியல்களில் நடிக்க தொடங்கினார். வில்லி ரோல், லீட் ரோல் என இவரின் நடிப்பு விரிந்தது. ராதிகாவின் சித்தி 2 சீரியலிலும் முக்கிய ரோலில் நடித்து இருந்தார்.

    TN Awards : தமிழக அரசின் சிறந்த சீரியல்களுக்கான விருது வழங்கும் விழா அறிவிப்பு - எந்த சீரியல்களுக்கு தெரியுமா?

    இவருக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு அனில் என்பவருடன் திருமணமாகி  8 வயதில் மகன் இருக்கிறான். இந்நிலையில் மகாலட்சுமி சில வருடங்களுக்கு முன்னர் தனது கணவரை பிரிந்து விட்டார். விவாகரத்தும் வாங்கி கொண்டார். சிங்கிள் மதராக இருந்த இவர் தற்போது 2வது திருமணம் செய்து கொண்டார். லிப்ரா புரொடக்‌ஷன்ஸ் ரவீந்தர் சந்திரசேகரன் மகாலட்சுமி 2 வது திருமணம் செய்து கொண்டார்.

    தமிழக அரசின் விருதை பெறும் சீரியல் நடிகர், நடிகைகள் யார் தெரியுமா?

    நேற்று முன் தினம் இவர்களது திருமணம் திருப்பதியில் பெற்றோர் முன்னிலையில் நடந்தது. சென்னையில் பிரம்மாண்டமாக வரவேற்பு நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது. இதில் வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை பிரபலங்கள் கலந்து கொள்வார்கள் என தெரிகிறது. இது காதல் திருமணம் ஆகும்.



     




    View this post on Instagram





     

    A post shared by Pradeep R Chinna (@pradeeprchinna)






    திருமணம் முடிந்த பின்பு மகாலாட்சுமி - ரவீந்தர் இருவரும் தங்களது இன்ஸ்டா பக்கத்தில் திருமணம் புகைப்படங்களை வெளியிட்டனர். இந்நிலையில் தற்போது இருவரும் இன்ஸ்டாவில் மாறி மாறி காதல் மழையை பொழிகின்றனர். இந்நிலையில் இவர்கள் தங்களது திருமண வீடியோவை இன்ஸ்டாவில் ஷேர் செய்துள்ளனர். மகாலட்சுமி சிரித்தப்படியே தலைக்குனிந்து தாலியை வாங்கி கொள்கிறார். பின்பு இருவரும் பெரியவர்களிடம் ஆசிர்வாதம் வாங்கி கொள்கின்றனர். ரசிகர்கள் பலரும் இந்த ஜோடிக்கு வாழ்த்துக்களை கூறி வந்தாலும் ஒருபக்கம் 90ஸ் கிட்ஸ்களுக்கு இந்த திருமணம் அதிர்ச்சியாகவே உள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sreeja
    First published:

    Tags: Sun TV, TV Serial

    அடுத்த செய்தி