• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • முதல் முறையாக சின்னத்திரையில் மாகாபா மனைவி- வைரலாகும் ப்ரோமோ!

முதல் முறையாக சின்னத்திரையில் மாகாபா மனைவி- வைரலாகும் ப்ரோமோ!

மாகாபா மற்றும் அவரது மனைவி

மாகாபா மற்றும் அவரது மனைவி

விஜய் டிவியில் ‘சவுண்ட் பார்ட்டி’ என்ற கலகலப்பான கேம் ஷோவை தற்போது மாகாபா ஆனந்த் தொகுத்து வழங்கி வருகிறார்.

  • Share this:
சின்னத்திரை சீரியல்கள், சீரியல்களின் நடிகை நடிகைகளைப் போலவே நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருப்பவர்களுக்கும் தனிப்பட்ட ரசிகர் கூட்டம் உள்ளது. சின்னத்திரை நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள் என்று நாம் நினைக்கும் போதே, கண்முன் வந்து போகும் முகங்களில் விஜய் டிவியின் தொகுப்பாளர் மாகாபா ஆனந்தும் ஒருவர். ஆனந்த என்றால் யார் என்று தெரியாது என்ற அளவுக்கு மாகாபா மற்றும் மாகாபா ஆனந்த் என்ற பெயர் நிலைத்துள்ளது.

ஒரு நிகழ்ச்சியை கலகலப்பாக கொண்டு செல்வதில் மாகாபாவின் பங்கு மிகவும் பெரியது. டிடியைப் போலவே கலகலப்பாக தொகுத்து வழங்கும் திறனும், டைமிங் காமெடி சென்சும், உடல் மொழியும் தனித்துவமானது. சூப்பர் சிங்கர், மிஸ்டர் அண்ட் மிசஸ் சின்னத்திரை, ஸ்டார்ட் மியூசிக் உள்ளிட்ட பல சூப்பர் திட் நிகழ்ச்சிகளில் மாகாபாவின் லூட்டிகள் கணக்கில்லாதவை.

நடிகர் சிவ கார்த்திகேயன் விஜய் டிவியில் தொகுப்பாளராக இருந்த காலத்தில், அவருக்கு இணையாக யார் இருப்பார் என்ற கேள்விக்கு பதிலாக ரசிகர்கள் மனதில் மிகப்பெரிய இடத்தைப் பிடித்தவர் மாகாபா. சின்னத்திரை மட்டுமின்றி, திரைப்படங்களிலும் மாகாபா ஆனந்த் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தன்னுடைய மனைவி மற்றும் குழந்தைகள் பற்றி அவ்வப்போது சில நிகழ்ச்சிகளில் நெகிழ்வாகப் பகிர்ந்து கொண்டுள்ளார் மாகாபா. ஒரு விருது வழங்கும் விழாவில் நெகிழ்ந்து, தன்னுடைய மனைவி தான் தன்னுடைய அதிர்ஷ்ட தேவதை என்று கண்ணீருடன் மனைவிக்கு நன்றி தெரிவித்திருந்தார்.

விஜய் டிவியில் ‘அது இது எது’ என்ற ஷோவின் மூலம் அறிமுகமாகி பிரபலமான தொகுப்பாளர் மாகாபா, விஜய் தொலைகாட்சியில் அறிமுகமாகி பத்து ஆண்டுகள் நிறைவேறியுள்ளது. இதைக் கொண்டாடும் விதமாக, முதன்முறையாக சின்னத்திரையில் மாகாபாவின் மனைவி சூசன் தோன்றியுள்ளார்.

விஜய் டிவியில் ‘சவுண்ட் பார்ட்டி’ என்ற கலகலப்பான கேம் ஷோவை தற்போது மாகாபா ஆனந்த் தொகுத்து வழங்கி வருகிறார். இதுவரை பொது நிகழ்ச்சிகளில் தலை காட்டாத மாகாபாவின் மனைவி முதன் முறையாக, சவுண்ட் பார்ட்டி நிகழ்ச்சியில் பங்கேற்று இருக்கிறார்.

Also read... வெப் தொடர் நாயகியாகிறார் ப்ரியா பவானி சங்கர்...!

விஜய் டிவியில் மாகாபாவின் பத்தாண்டு பயணம் சிறப்புக் கொண்டாட்டமாக, திருமதி சூசன் பங்கேற்ற புரோமோ, சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது.



‘எனக்கு கேமரா அப்படின்னாலே பயம்’ என்று சூசன் சொல்ல, 'இனி வீடு ஃபுல்லா கேமரா வெச்சிட வேண்டியது தான்' என்று பதிலுக்கு மாகாபா சொல்ல, நிகழ்ச்சி களைகட்டுகிறது. அதைத் தொடர்ந்து, நிகழ்ச்சி தொகுப்பாளர் மற்றும் நடிகரான தீபக், மாகாபா பற்றி தெரியாத ரகசியம் ஏதேனும் ஒன்றை பகிரும்படி சூசனிடம் கூறினார். அதற்கு சூசன் ‘தப்பே பண்ணலன்னாலும் காலில் விழுந்துடுவார்’ என்று சொல்ல அரங்கமே அதிர்ந்தது. அதைத்தொடர்ந்து, நெகிழ்ச்சியான காட்சிகளும் அரங்கேறியது.

சவுண்ட் பார்ட்டி நிகழ்ச்சியில் மாகாபா மற்றும் அவர் மனைவி சூசன் பங்கேற்ற புரோமோ இங்கே.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: