ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

கையில் வாக்கிங் ஸ்டிக்.. நடக்கவே கஷ்டம்! என்ன ஆச்சு ஆங்கர் டிடிக்கு?

கையில் வாக்கிங் ஸ்டிக்.. நடக்கவே கஷ்டம்! என்ன ஆச்சு ஆங்கர் டிடிக்கு?

ஆங்கர் டிடி

ஆங்கர் டிடி

டிடி வாக்கிங் ஸ்டிக் உதவியுடன் நடந்து சென்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  விஜய் டிவி டிடி, வாக்கிங் ஸ்டிக் பிடித்தப்படியே நடந்த போன வீடியோ வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

  தமிழ் சின்னத்திரையில் பிரபல தொகுப்பாளராக இருப்பவர் டிடி என்று அழைக்கப்படும் திவ்யதர்ஷினி. விஜய் டிவி-யில் தனது ஆங்கரிங் கரியரை ஆரம்பித்த அவருக்கு சின்னத்திரையில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். காபி வித் டிடி, ஜோடி நம்பர் ஒன் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.தற்போது சினிமாவில் கவனம் செலுத்தி வரும் டிடி துருவ நட்சத்திரம், ஜோஸ்வா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். சமீபகாலமாக  டிவி-யில் தோன்றாத டிடி இன்ஸ்டாவில் மட்டும் புகைப்படங்களை ஷேர் செய்து வந்தார். இந்நிலையில் நீண்ட இடைவெளிக்ககு பிறகு டிடியை விக்ரம் படத்தின் ஆடியோ லான்ஞ்சில் பார்க்க முடிந்தது.

  கதாநாயகனாக... குணச்சித்திர நடிகராக... வில்லனாக... தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகர் எஸ்.ஜே.சூர்யா!

  அதனைத்தொடர்ந்து கலாட்டா விருது நிகழ்ச்சியையும் டிடி தொகுத்து வழங்கி இருந்தார். டிடி ஏற்கெனவே வீல் சேரில் இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் தீயாய் பரவியது. இதனைப் பார்த்த ரசிகர்கள் டிடி-க்கு என்ன ஆச்சு? என்று கேள்வி எழுப்பினர். ஃபோட்டோ குறித்து குறிப்பிட்டிருந்த டிடி, தனக்கு முடக்கு வாதம் இருப்பதால், நீண்ட தூரம் நடக்க முடியாது எனத் தெரிவித்திருந்தர்.

  ' isDesktop="true" id="752958" youtubeid="prt7gtjpqyk" category="television">

  இப்படி இருக்கையில் 2 நாட்களுக்கு முன்பு சென்னையில் பிரம்மாண்டமாக அரங்கேறிய லெஜண்ட் படத்தின் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழாவை டிடி மற்றும் பிக் பாஸ் அர்ச்சனா சேர்ந்து தொகுத்து வழங்கினர். இந்த நிகழ்ச்சி கூடிய விரைவில் டிவியிலும் டெலிகாஸ்ட் ஆக உள்ளது. இப்படி இருக்கையில் இந்த நிகழ்ச்சிக்கு டிடி வாக்கிங் ஸ்டிக் உதவியுடன் நடந்து சென்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

  உடம்புக்கு முடியாத போதும் டிடி அவருடைய வேலையை விரும்பி செய்வதும், அவரின் டெடிகேஷனும் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Published by:Sreeja
  First published:

  Tags: Dhivyadharshini, Television, Vijay tv