ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

7 பக்கத்திற்கு கடிதம்.. மகளால் உடைந்து அழுத விஜய் டிவி ஆங்கர் அர்ச்சனா!

7 பக்கத்திற்கு கடிதம்.. மகளால் உடைந்து அழுத விஜய் டிவி ஆங்கர் அர்ச்சனா!

அர்ச்சனா

அர்ச்சனா

அர்ச்சனாவுக்கு லட்டர் ஒன்றை கொடுத்து இருக்கிறார் அவரின் மகள் ஜாரா.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

அர்ச்சனாவின் 40வது பிறந்த நாளன்று அவரது செல்ல மகள் ஜாரா 7 பக்கத்திற்கு கடிதம் ஒன்றை எழுதி அதை அர்ச்சனாவிற்கு தந்துள்ளார். அதை படித்து விட்டு தேம்பி தேம்பி அழுகிறார் அர்ச்சனா. இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

நம்மில் பலருக்கும் சின்னத்திரை தொகுப்பாளினி அர்ச்சனாவை பற்றிய அறிமுகமே தேவைப்படாது. நகைச்சுவை நடிகர் சிட்டி பாபுவுடன் இணைந்து "காமெடி டைம்" என்கிற சன் டிவி நிகழ்ச்சி மூலம் அறிமுகமான அர்ச்சனா இப்போது சின்னத்திரையின் சீனியர் ஆங்கர். ரஜினி, கமல் என தமிழ் சினிமா சூப்பர் ஸ்டார்களையும் பேட்டி எடுத்து விட்டார். சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் என முன்னணி சேனல்களிலும் பணியாற்றிவிட்டார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்பு முழுக்க முழுக்க விஜய் டிவி நிகழ்ச்சிகளை மட்டும் தொகுத்து வழங்கி வரும் அர்ச்சனா யூடியூப்பிலும் பயங்கர பிஸி.

கோபி கன்னத்தில் பளார் விட்ட ஈஸ்வரி அம்மா.. ஆடிப்போன பாக்கியா!

கொரோனா லாக்டவுனில் தனியாக யூடியூப் சேனல் தொடங்கி  அதில் பல வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இதில் அர்ச்சனாவுக்கு துணையாக இருப்பவர் அவரின் மகள் ஜாரா. இவரும் சோஷியல் மீடியாவில் பயங்கர ஆக்டிவ். அர்ச்சனாவும் ஜாராவும் சேர்ந்து ஜீ தமிழ் மற்றும் விஜய் டிவியில் குழந்தைகள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்கள். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு அன்பு கேங்கால் அர்ச்சனாவுக்கு நிறைய நெகட்டிவ் கமெண்டுகள். அதிலிருந்து அம்மாவை மீட்டு, அவருக்கு எல்லா விஷயத்திலும் சப்போர்ட் செய்தவர் ஜாரா தான்.

இத்தனை லட்சமா? சூப்பர் சிங்கர் பிரபலம் வாங்கிய புதிய கார்!

இவர்களின் அம்மா - மகள் உறவை ரசிகர்கள் பலமுறை வியந்து பேசியுள்ளனர். இந்நிலையில் 2 தினங்களுக்கு முன்பு அர்ச்சனா தனது 40வது பிறந்த நாளை கொண்டாடி இருக்கிறார். அதற்காக மொத்த குடும்பமும் சேர்ந்து அர்ச்சனாவுக்கு சர்ப்ரைஸ் பிளான் செய்து இருக்கிறார்கள். அதில் ஜாரா தனியாக அர்ச்சனாவுக்கு பல சர்ப்ரைஸ் கிஃப்டுகளை கொடுத்துள்ளார்.


அந்த வகையில் 7 பக்கத்திற்கு கடிதம் எழுதி, அதில் பல எமோஷனல் விஷயங்களை பதிவு செய்து, அர்ச்சனாவுக்கு லட்டர் ஒன்றை கொடுத்து இருக்கிறார் ஜாரா. அந்த கடிதத்தை படித்து விட்டு மகளை கட்டிப்பிடித்து அழுகிறார் அர்ச்சனா. அதுமட்டுமில்லை அர்ச்சனாவுக்கு மோதிரம் ஒன்றையும் பரிசாக ஜாரா கொடுக்கிறார். இந்த நெகிழ்ச்சியான தருணத்தில் எமோஷனல் ஆகி அர்ச்சனா தேம்பி தேம்பி அழுகிறார். இந்த அழகான தருணத்தை வீடியோவாக அர்ச்சனா தனது இன்ஸ்டாவிலும் பகிர்ந்துள்ளார்.

இதைப் பார்த்த ரசிகர்கள் அர்ச்சனாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் கூறிய கையோடு மகள் ஜாராவையும் புகழ்ந்து தள்ளியுள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Archana biggboss, Television, Vijay tv