• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • பாண்டியன் ஸ்டோர்ஸ் போலவே சன் டிவி சீரியலிலும் நடிகை மாற்றம்.. ரசிகர்களுக்கு அடுத்தடுத்த ஏமாற்றம்!

பாண்டியன் ஸ்டோர்ஸ் போலவே சன் டிவி சீரியலிலும் நடிகை மாற்றம்.. ரசிகர்களுக்கு அடுத்தடுத்த ஏமாற்றம்!

அன்பே வா சீரியல்

அன்பே வா சீரியல்

காற்றுக்கென்ன வேலி சீரியலிலும் முக்கிய ரோலில் நடித்து வருகிறார்.

  • Share this:
    சின்னத்திரை ரசிகர்களை கவரும் வகையில் பல்வேறு டிவி சேனல்கள் விறுவிறுப்பான கதைக்களம் கொண்ட சீரியல்களை ஒளிபரப்பி வருகிறது

    தமிழகத்தின் பிரபல முன்னணி டிவி சேனலாக இருந்து வரும் சன் டிவி. சித்தி 2, மகராசி, திருமகள், பாண்டவர் இல்லம், சந்திரலேகா, தாலாட்டு, அபியும் நானும், வானத்தை போல, சுந்தரி உள்ளிட்ட பல ஹிட் சீரியல்களின் வரிசையில் ரசிகர்களை மிகவும் கவர்ந்த ஒரு சீரியலாக இருந்து வருகிறது அன்பே வா. கடந்த 2020 நவம்பர் 2ம் தேதி முதல் சன் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் அன்பே வா, தற்போது திங்கள் முதல் சனி வரை இரவு 9.30 மணிக்கு ரசிகர்களை மகிழ்வித்து வருகிறது.

    ராஜாஷ்ரி என் ராய் திரைக்கதையில், ரதி பாலா வசனத்தில், சிவா எம்பி இயக்கத்தில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் அன்பே வா சீரியல் பல ட்விஸ்ட்கள் மற்றும் விறுவிறுப்பு சம்பவங்கள் நிறைந்த எபிசோட்கள் மூலம் ரசிகர்களை பெரிதும் ஈர்த்துள்ளது. அன்பே வா சீரியலில் பூமிகா என்ற கேரக்டரில் நடிகை டெல்னா டேவிஸ் ஹீரோயினாக நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக கர்நாடகாவை சேர்ந்த விராட், ஹீரோவாக வருண் என்ற கேரக்டரில் நடித்து வருகிறார். இவர்களை தவிர நந்தன் லோகநாதன், பிர்லா பாஸ், வினயா பிரசாத், அகிரா, கன்யா பாரதி, ராஜலட்சுமி, பூஜா ஃபியா உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இந்த சீரியலில் திருமணத்திற்கு முன் நாயகி பூமிகா (நடிகை டெல்னா டேவிஸ்) தந்தை இல்லாமல் தாய் அன்னலட்சுமி மற்றும் கார்த்திகா, தீபிகா ஆகிய இரு சகோதசரிகளுடன் பூமிகா வசிப்பது போல காட்டப்பட்டது. பூமிகாவின் சகோதரி கார்த்திகாவாக நடிகை ப்ரீத்தா சுரேஷ் மற்றும் தீபிகாவாக நடிகை அக்ஷிதா அசோக் ஆகியோர் நடித்து வந்த நிலையில், அன்பே வா சீரியலில் ஆள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பூமிகாவின் சகோதரிகளில் ஒருவராக நடித்து வந்த நடிகை அக்ஷிதா அசோக் மாற்றப்பட்டு, அவருக்கு பதில் வேறு ஒரு நடிகை கொண்டு வரப்பட்டு உள்ளார். 2003ம் ஆண்டு ஏப்ரல் 25ம் தேதி பிறந்த நடிகை அக்ஷிதா அசோக், தனது அழகு மற்றும் நடிப்பு மூலம் ரசிகர்களை கவர்ந்துள்ளார்.



     




    Instagram இல் இந்த இடுகையை காட்டு





     

    SunTelevisions இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@suntvfanzclub_)






    காற்றுக்கென்ன வேலி சீரியலிலும் முக்கிய ரோலில் நடித்து வரும் நடிகை அக்ஷிதா அசோக், அன்பே வா சீரியலில் இருந்து வெளியேறி உள்ளது சன் டிவி ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. அண்மையில் தான் விஜய் டிவி பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஐஸ்வர்யா ரோல் மாற்றப்பட்டது. தற்போது சன் டிவியில் இளம் நடிகை மாற்றப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே சன் டிவி-யில் ஒளிபரப்பான சாக்லெட் சீரியலில், வைஷாலி என்றார் கேரக்டரிலும் நடித்துள்ளார். 2019 டிசம்பர் 16 முதல் 2020 மார்ச் 25 வரை ஒளிபரப்பான சாக்லெட் சீரியல், கொரோனாவின் முதல் அலையின் போது போடப்பட லாக்டவுன் காரணமாக முற்றிலும் நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: