• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • 3 வருடங்கள் காணாமல் போன காரணம்... அன்பே வா சீரியல் பூமிகா சீக்ரெட்ஸ்!

3 வருடங்கள் காணாமல் போன காரணம்... அன்பே வா சீரியல் பூமிகா சீக்ரெட்ஸ்!

அன்பே வா சீரியல் பூமிகா

அன்பே வா சீரியல் பூமிகா

ஒரு சில தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்தார். ஆனாலும் அவருக்கு நினைத்த வெற்றி கிட்டவில்லை.

  • Share this:
    சன் டிவியில் ஒளிப்பரப்பாகும் அன்பே வா சீரியலில் பூமிகா ரோலில் நடிக்கும் நடிகை டெல்னா டேவிஸ் பற்றி பலருக்கும் தெரியாதவை.

    சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு பறந்த நடிகைகள் போய் இப்போது வெள்ளித்திரையில் இருந்து சின்னத்திரைக்கு வந்து ரசிகர்களை கவர்ந்த வருகின்றனர் சில யங் ஹீரோயின்கள். அந்த வரிசையில் முதலிடத்தில் இருப்பவர் டெல்னா டேவிஸ். சன் டிவியில் ஒளிப்பரப்பாகும் அன்பே வா சீரியல் மூலம் சின்னத்திரைக்கு அறிமுமாகியுள்ளார். முதல் சீரியலிலே ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்றுவிட்டார். இவருக்காவே இந்த சீரியலை பார்க்கும் ரசிகர்கள் தனி கூட்டம். அதுமட்டுமில்லை இவருக்கும் வருணுக்குமான ரொமான்ஸ் சீன்கள் சோஷியல் மீடியாவில் படு வைரல். வெள்ளித்திரையில் இருந்து சின்னத்திரைக்கு டெல்னா வர பல காரணங்கள் உள்ளது.

    முறைப்படி பரதநாட்டியம் கற்றுக் கொண்ட இவருக்கு அவரின் நடன திறமை மூலம் தான் நடிக்க வாய்ப்பே கிடைத்தது. கேரளாவில் நடைப்பெற்ற இவரின் அரங்கேற்றத்தைப் பார்த்து பிரபல மாடலிங் ஷூட் நிறுவனம் இவரை ஹோம்லி லுக்கில் வைத்து ஃபோட்டோ ஷூட் நடத்தினர். அந்த புகைப்படம் சினிமா இயக்குனர்களுக்கு கிடைக்க அதன் மூலமே குரங்கு பொம்மை திரைப்பட வாய்ப்பு கிடைத்தது. அதன் பிறகு கவுண்டர்மணி ஹீரோவாக நடித்த படத்திலும் டெல்னா அவரின் தங்கையாக நடித்திருந்தார். அப்படியே வந்த வாய்ப்பை எல்லாம் பயன்படுத்திக் கொண்டு ஒரு சில தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்தார். ஆனாலும் அவருக்கு நினைத்த வெற்றி கிட்டவில்லை.

    அன்பே வா சீரியல்


    அதனால் தான் திடீரென்று சினிமாவை விட்டு விலகி சட்டம் படிக்க சென்றார். 3 ஆண்டுகள் பிஎல் படிப்பை தொடர்ந்தார். படிப்பை நிறைவு செய்த உடனே லாக்டவுண் சூழலை எதிர்கொண்டார். அந்த நேரத்தில் எந்த துறையை தேர்வு செய்து கவனம் செலுத்தலாம் என குழம்பி கொண்டிருந்த டெல்னாவுக்கு அன்பே வா சீரியல் வாய்ப்பு தேடி வந்தது. நம்பி இறங்கியவர் இன்று இறுதியாக நினைத்து பார்த்த வெற்றியை அடைந்துவிட்டார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இப்போது இவரின் நடிப்புக்கு ஏகப்பட்ட ரசிகர்கள். இவரும் வருணும் சேர்ந்து செய்யும் இன்ஸ்டா ரீல்ஸ்களுக்கு லைக்ஸ்கள் குவிகிறது. தனக்கு சின்னத்திரை மிகச்சிறந்த அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்திருப்பதாக டெல்னா மகிழ்ச்சியுடன் இருக்கிறது. தொடர்ந்து வித விதமான ஃபோட்டோ ஷூட்டுகளை நடத்தி இன்ஸ்டா மற்றும் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: