Home /News /entertainment /

பிரபல சீரியலில் இருந்து விலகிய நடிகை! குண்டானது ஒரு குத்தமா?

பிரபல சீரியலில் இருந்து விலகிய நடிகை! குண்டானது ஒரு குத்தமா?

அன்பே சிவம் ரக்ஷா

அன்பே சிவம் ரக்ஷா

ரக்ஷா இடையில் வெயிட் போட்டதால் தான் சேனல் தரப்பில் அவரை மாற்ற இருப்பதாகவும் இணையத்தில் தகவல்கள் கசிந்தன

    சின்னத்திரை ரசிகர்களை பெரிதும் கவர்ந்தவையாக அதில் ஒளிபரப்பப்படும் சீரியல்கள் இருந்து வருகின்றன. ரியாலிட்டி ஷோக்கள், காமெடி ஷோக்கள் , பழைய மற்றும் புத்தம் புதிய திரைப்படங்கள் என ரசிகர்களை மகிழ்விக்க டிவி சேனல்கள் பலவற்றை போட்டி போட்டு கொண்டு டெலிகாஸ்ட் செய்து வருகின்றன. கிட்டத்தட்ட 25 வருடங்களாக சின்னத்திரையை ஆக்கிரமித்து ஆட்சி செய்து வருகின்றன சீரியல்கள். சீரியல்களை பொறுத்த வரை ரசிகர்களின் ரசனைக்கேற்ப படு விறுவிறுப்பான மற்றும் வித்தியாசமான கதை களத்துடன் கூடிய மெகா சீரியல்களை டெலிகாஸ்ட் செய்து வருகின்றன பிரபல சேனல்கள்.

    எனவே வெள்ளித்திரை பிரபலங்களை போலவே சின்னத்திரை பிரபலங்கள் மக்கள் மத்தியில் பெயரும் புகழும் சம்பாதித்து வருகின்றனர். பெரும்பாலான சீரியல்களின் ஹீரோ மற்றும் ஹீரோயின்களை வெள்ளித்திரையை போலவே வெளிமாநிலங்களில் இருந்து களமிறக்குகின்றனர் சீரியல் தயாரிப்பு நிறுவனங்கள்.  பெரிய ஸ்கிரீனில் சென்னையை நோக்கி வெளிமாநில கலைஞர்கள் எப்படி படையெடுத்து வந்து திறமை காரணமாக மக்களின் மனங்களில் இடம் பிடித்து ஜொலிக்கிறார்களோ, அதே போன்ற நிலை தான் தற்போது சின்னத்திரையில் காணப்படுகிறது.

    இதையும் படிங்க.. செம்பருத்தி சீரியல் வில்லிக்கு இவ்வளவு பெரிய மகனா? ஆச்சரியத்தில் ரசிகர்கள்!

    பல முன்னணி ஹிட் சீரியல்களின் ஹீரோ மற்றும் ஹீரோயின்கள் வெளிமாநிலத்தவர்களாக இருக்கின்றனர். அந்த வகையில் விஜய் டிவி-யில் ஒளிபரப்பான நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலின் முதல் சீசனில் மிக முக்கிய கேரக்டரில் நடித்து தமிழ் சின்னத்திரை ரசிகர்களின் மனதில் தனி இடம் பிடித்தவர் பிரபல சீரியல் நடிகை ரக்ஷா ஹோலா (Raksha Holla).

    இதையும் படிங்க.. விஜய் டிவி போட்ட குறும்படம்.. பொய் என அடித்து பேசும் பிக் பாஸ் பாவ்னி!

    அண்டை மாநிலமான கர்நாடகாவின் பெங்களூரு நகரை சேர்ந்தவர் நடிகை ரக்ஷா ஹோலா. இவர் கன்னட மொழி திரைபடங்களில் நடித்து இருக்கிறார். அது மட்டுமின்றி கன்னட டிவி சேனல்களின் பல சூப்பர் ஹிட் சீரியல்களிலும் நடித்து புகழ் பெற்றவர் ஆவார். கொரோனா பரவல் காரணமாக சீரியல்களில் நடிக்காமல் சில மாதங்கள் ஒதுங்கி இருந்தார். பின்னர் தற்போது ஜீ தமிழில் டெலிகாஸ்ட் செய்யப்பட்டு வரும் அன்பே சிவம் சீரியலில் முக்கிய ரோலில் நடித்து வந்தார். இந்நிலையில் இவர் இந்த சீரியலில் இருந்து திடீரென விலகி இருப்பதாக தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது.



     




    View this post on Instagram





     

    A post shared by Tamil Serials (@tamilserialexpress)






    பல காரணங்களால் சூப்பர் ஹிட் சீரியல்களில் இருந்து லீட் ரோலில் நடிக்கும் நடிகர் மற்றும் நடிகைகள் விலகி வருவது தொடர் கதையாகி வரும் நிலையில், இந்த லேட்டஸ்ட் பட்டியலில் நடிகை ரக்ஷா ஹோலாவும் இணைந்திருப்பது அவரது மற்றும் அன்பே சிவம் சீரியல் ரசிகர்களை ஏமாற்றமடைய செய்து இருக்கிறது. என்ன காரணத்திற்காக ரக்ஷா அன்பேசிவம் சீரியலில் இருந்து விலகி இருக்கிறார் என்பது பற்றிய தகவல் இதுவரை தெரியவில்லை. இதனால் ரசிகர்கள் பலரும் ஏன் சீரியல் இருந்து விலகி விட்டீர்கள், என்ன காரணம் என சோஷியல் மீடியா மூலம் ரக்ஷாவிடம் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.இதற்கிடையில் ரக்ஷா இடையில் வெயிட் போட்டதால் தான் சேனல் தரப்பில் அவரை மாற்ற இருப்பதாகவும் இணையத்தில் தகவல்கள் கசிந்தன. ஆனால் எந்த தகவலும் இதுவரை உறுதி செய்யப்படவில்லை.

    ஜீ தமிழ் சேனலில் கடந்த அக்டோபர் 18, 2021 முதல் திங்கள் - சனி வரை இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது இந்த சீரியல் மூலம் சமீபத்தில் தான் மீண்டும் தமிழ் சேனலில் நடிகை ரக்ஷா தோன்றிய நிலையில், சில மாதங்களிலேயே அன்பே சிவம் சீரியலில் இருந்து இவர் வெளியேறி இருப்பது குறிப்பிடத்தக்கது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja
    First published:

    Tags: TV Serial, Zee tamil

    அடுத்த செய்தி