Home /News /entertainment /

விஜய் டிவி சீரியல் நடிகை ஆனந்தி எடுத்த முடிவு... வரவேற்கும் ரசிகர்கள்!

விஜய் டிவி சீரியல் நடிகை ஆனந்தி எடுத்த முடிவு... வரவேற்கும் ரசிகர்கள்!

விஜய் டிவி ஆனந்தி

விஜய் டிவி ஆனந்தி

மானாட மயிலாட சீசன் 7 நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டுள்ளார். முக்கியமாக விஜய் டிவியின் ஜோடி நம்பர் நடன நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெற்றியாளராகவும் மாறினார்.

    மக்களின் பொழுதுபோக்கிற்காக பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் இருந்தாலும், சீரியல்களை விடவும் மக்களை மகிழ்விக்க கூடிய விஷயங்கள் வேறு இல்லை. அதனால் தான், பல காலமாக டிவி சீரியல்களுக்கு தனி இடம் இருந்து வருகிறது. அதே போன்று அவற்றில் நடிக்க கூடிய நடிகர் மற்றும் நடிகைகளுக்கும் மக்களின் மனதில் எப்போதும் தனி இடம் உண்டு. சில சீரியல்கள் நமது வாழ்க்கை முறையை கொண்டு எடுக்கப்பட்டிருக்கும். சில தொடர்களில் காதல் கதையை மையமாக வைத்து எடுப்பார்கள். அதே போன்று சில சீரியல்களில் ஆன்மீகத்தை கதைக்களமாக வைத்து எடுத்திருப்பார்கள்.

    அந்த வகையில் சமீப காலமாக கலர்ஸ் சேனலில் ஒளிபரப்பாகும் அம்மன் 2 தொடர் பலரின் வரவேற்பை பெற்று வருகிறது. அமல்ஜித், பவித்ரா கவுடா ஆகியோர் இந்த தொடரில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். தற்போது இந்த தொடர் பல புதிய மாற்றங்களுடனும், புதிய நடிகர்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது. இதனால் மற்ற டாப் தொடர்களை போன்றே இதுவும் சிறப்பாக ஒளிபரப்பாக தொடங்கியது. இந்நிலையில் பிரபல சீரியல் நடிகை நிவிஷா சமீபத்தில் தான் இந்த தொடரில் நடிக்க ஒப்பந்தமானார்.

    சுமார் 1000 எபிசோடுகளை கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகும் இந்த தொடரில் விஜய் டிவியின் பிரபல நடிகைகளில் ஒருவரான ஆனந்தி அஜய் நடிக்க உள்ளார். இவர் யாமினி என்கிற முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என்கிற அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது. இவரின் நடிப்பு பலருக்கும் பிடித்த நிலையில், இவர் அம்மன் 2 தொடரில் இணைந்துள்ளார் என்கிற செய்தி இல்லதரிசிகளுக்கு மகிழ்ச்சியான ஒன்றாக இருக்க கூடும்.

    இதையும் படிங்க.. கல்யாணத்தை பற்றி பேசிய யாஷிகா ஆனந்த்.. நிரூப் அவருக்கு என்ன உறவு தெரியுமா?

    விஜய் டிவியில் நடித்து வந்த நடிகர் மற்றும் நடிகைகள் சிலர் சமீப காலங்களில் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சிக்கு மாறி வருகின்றனர். ஆர் ஜே செந்தில், பரீனா ஆசாத் ஆகியோரை தொடர்ந்து தற்போது ஆனந்தி அஜயும் கலர்ஸ் தமிழில் நடிக்க உள்ளார். இந்த அம்மன் தொடர் தினமும் இரவு 7 மணிக்கு கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.



     




    View this post on Instagram





     

    A post shared by ActorAlagappan (@actor_alagappan)






    ஆனந்தி அஜய் 'தாரை தப்பட்டை' என்கிற தமிழ் படத்தின் மூலம் மிகவும் பிரபலமானார். இவர் தனது சினிமா கேரியரை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் தொகுப்பாளினியாக தொடங்கினார். அதன் பிறகு படிப்படியாக பல சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தார். கார்த்திகை பெண்கள் என்கிற சீரியல் மூலம் முதன்முதலில் சீரியல்களில் நடிக்க துவங்கினார்.

    இதையும் படிங்க.. பிக் பாஸ் 5 வீட்டில் நடந்தது இதுதான்.. சிபி, அமீர், பாவ்னி பற்றி புட்டு புட்டு வைக்கும் ராஜூ!

    அடுத்தாக கள்ளிக்காட்டு பள்ளிக்கூடம் மற்றும் கனாக்காணும் காலங்கள் ஆகிய தொடர்களிலும் நடித்து இருந்தார். மேலும் ரௌத்திரம், டமால் டுமீல், மீகாமன் ஆகிய திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவர் மானாட மயிலாட சீசன் 7 நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டுள்ளார். முக்கியமாக விஜய் டிவியின் ஜோடி நம்பர் நடன நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெற்றியாளராகவும் மாறினார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja
    First published:

    Tags: TV Serial, Vijay tv

    அடுத்த செய்தி