ஆனந்த கண்ணனின் கடைசி ஆசையை நிறைவேற்றிய அவரது மனைவி - அது என்ன தெரியுமா?

மனைவியுடன் ஆனந்த கண்ணன்

மரணப்படுக்கையில் இருந்த ஆனந்த கண்ணன், தான் இறந்து விட்டால், தனது குடும்பத்தினர் யாரும் அழ வேண்டாம் என்று கேட்டுக் கொண்டாராம்.

  • Share this:
    மறைந்த வி.ஜே.ஆனந்த கண்ணனின் கடைசி ஆசையை அவரது மனைவி நிறைவேற்றியிருக்கிறார்.

    சன் டிவியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய பிரபல வி.ஜே.ஆனந்த கண்ணன் அப்போது மிகவும் பிரபலமாக இருந்தார். 2008-ஆம் ஆண்டு வெளிவந்த வெங்கட் பிரபுவின் 'சரோஜா' திரைப்படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்தார். புற்றுநோயுடன் போராடி வந்த அவர், ஆகஸ்ட் 16-ஆம் தேதி தனது சொந்த நாடான சிங்கப்பூரில் காலமானார். 48 வயதில் ஆனந்த கண்ணன் மறைந்த செய்தியை கேட்டு ரசிகர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இதையறிந்த அவரது ரசிகர்களும், சின்னத்திரை நண்பர்களும் தங்களது இரங்கலை தெரிவித்தனர். மரண செய்தியை அறிந்த ஆனந்த கண்ணனின் தொலைக்காட்சி நண்பர்கள் உடைந்து அழுதனர்.

    மரணப்படுக்கையில் இருந்த ஆனந்த கண்ணன், தான் இறந்து விட்டால், தனது குடும்பத்தினர் யாரும் அழ வேண்டாம் என்றும், தன்னை மகிழ்ச்சியாக அனுப்பும்படியும் கேட்டுக் கொண்டாராம். ஆனந்த கண்ணனின் மனைவி ராணியும், அவரது குடும்பத்தினரும் இதை அப்படியே செய்திருக்கிறார்கள்.

    இந்தியா திரும்பி, படங்களில் நடிக்க விரும்பிய ஆனந்த கண்ணன், புற்றுநோய்க்கு பலியானதை தாங்கிக் கொள்ள முடியாமல் தவிக்கிறார்கள் அவரது ரசிகர்கள்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: