முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் இந்த வாரம் ஒளிபரப்பாகும் அதர்வாவின் கணிதன்!

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் இந்த வாரம் ஒளிபரப்பாகும் அதர்வாவின் கணிதன்!

அதர்வா

அதர்வா

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி வரும் ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 29 அன்று, பிரபல நடிகர் அதர்வா மற்றும் நடிகை கேத்தரின் தெரசா ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்த கனிதன் திரைப்படத்தை ஒளிபரப்ப உள்ளது.

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

உலகத் தொலைக்காட்சியில் முதல் முறையாக சுவாரசியமான த்ரில்லர் திரைப்படமான கணிதன் திரைப்படம் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது.

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி வரும் ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 29 அன்று, பிரபல நடிகர் அதர்வா மற்றும் நடிகை கேத்தரின் தெரசா ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்த கணிதன் திரைப்படத்தை ஒளிபரப்ப உள்ளது. அடுத்தடுத்து நடக்கும் சுவாரஸ்யமான பல புதிர்களைத் தீர்க்கும் நிகழ்வின் பயணத்தை நேர்த்தியாக சித்தரிக்கப்பட்ட இந்த திரைப்படத்தை கண்டு மகிழ கலர்ஸ் தமிழை ஜனவரி 29, மதியம் 2 மணிக்கு ட்யூன் செய்யுங்கள்.

இயக்குநர் சந்தோஷ் எழுதி இயக்கி, கலைப்புலி.எஸ். தாணு தயாரிப்பில் வெளிவந்த இந்த திரைப்படத்திற்கு சிவமணி இசையமைத்திருக்கிறார். மேலும் இப்படத்தில் தமிழ் சினிமாவின் பிரபலங்களான கே.பாக்யராஜ், ஆடுகளம் நரேன், மனோபாலா மற்றும் கருணாகரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் துணை நடிகர்களாக நடித்துள்ளனர். பிரபல நடிகர் தருண் அரோராவின் வில்லன் கதாபாத்திரம் மிகவும் சுவாரஸ்யமாக்குகிறது.

தொலைக்காட்சி ஊடகத்தில் பெரிய இடத்தைப் பிடிக்க வேண்டும் என்ற லட்சியத்துடன், நடிகர் கௌதம் (அதர்வா), பிபிசியில் வேலைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது போலி ஆவணங்களைச் சமர்ப்பித்ததற்காக கைது செய்யப்படுகிறார். ஒரு சிறிய டிவி சேனலில் பணிபுரியும் கௌதம், தனது கல்விச் சான்றிதழ்கள் போலியானவை என்பதை அறிந்ததும், சில மர்மமான புதிர்களைத் தீர்க்க வழிவகுத்தது. தனிநபர்களுக்கு தீங்கிழைக்கும் நெட்வொர்க் கும்பலிடம் இருந்து கதாநாயகன் எப்படி வில்லனுக்கு செக்மேட் கொடுக்கச் செல்கிறான் என்பது கதையின் மையக்கருவாக அமைகிறது.

இத்திரைப்படத்தின் உலக தொலைக்காட்சி பிரீமியர் குறித்து பேசிய இயக்குநர் டி.என்.சந்தோஷ், “படம் வெளியானபோது பார்வையாளர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. திரைக்கதையில் இதுபோன்ற இருண்ட உண்மைகளை மக்களுக்கு மத்தியில் வெளிக்கொணர்வது சவாலானது ஆகும். சில சுவாரஸ்யமான துப்புகளுக்கு வழிவகுக்கும் எலியும் பூனையுமாக துரத்தி கொண்டு செல்வது பார்வையாளர்கள் மிகுந்த ஆர்வத்துடன் ரசிப்பார்கள் என்று நான் நம்புகிறேன். இந்த ஜனவரி 29, ஞாயிற்றுக்கிழமை மதியம் 2:00 மணிக்கு கலர்ஸ் தமிழில் கணிதன் திரைப்படத்தை உங்கள் குடும்பத்தினருடன் இணைந்து கண்டு மகிழுங்கள்.

இது குறித்து நடிகர் அதர்வா கூறுகையில், "கணிதன் நிச்சயமாக பொழுதுபோக்கு மற்றும் அனைத்து வணிகக் கூறுகளுடன் சுவாரசியமான கதைக்களத்தை கொண்டுள்ளது. இயக்குநர் டி.என். சந்தோஷின் இறுக்கமான திரைக்கதை, தமிழ்த் திரைப்படத்தை உருவாக்குவதற்கான ஃபார்முலா வழியில் இதை உருவாக்கியிருப்பது கண்டிப்பாக பார்வையாளர்கள் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும் என்றார்.

Also read... இந்த பிரபல இசையமைப்பாளருடன் வேலை செய்ய வேண்டும்... பிக்பாஸ் ஏடிகே போட்ட ட்வீட்!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Actor Atharvaa, Colors Tamil | கலர்ஸ் தமிழ்