அம்மன் சீரியலில் முக்கிய ரோலில் நடிப்பதன் மூலம் முதல் முறையாக தமிழுக்கு வந்த கன்னட நடிகை!

ஷாந்தி எஸ் கவுடா

அம்மன் சீரியலில் தான் நடிக்கும் கெட்டப்பில் இருக்கும் சில போடோக்களை இன்ஸ்டாவில் ஷேர் செய்து

  • Share this:
பிரபல முன்னணி தமிழ் சேனல்கள் எல்லாவற்றிலும் திங்கள் முதல் சனி வரை பல சீரியல்கள் ஒளிபரப்படுகின்றன. வித்தியாசமான கதைகள் மற்றும் திறமையான நடிகர்களுடன் சீரியல்கள் வருவதால் சின்னத்திரை ரசிகர்களை சீரியல்கள் தொடர்ந்து கவர்ந்து வருகின்றன. முன்னணி சேனல்களில் ஒன்றாக இருந்து வரும் கலர்ஸ் தமிழ் சேனலில் பல சீரியல்கள் ஒளிபரப்பாகி வந்தாலும், ரசிகர்களை பெரிது ஈர்த்துள்ள பக்தி சீரியல் 'அம்மன்'. ரவி பிரியன் இயக்கத்தில் ஒளிபரப்பாகி வருகிறது பக்தி சீரியலான அம்மன்.

சக்தி என்ற முக்கிய கேரக்டரில் பவித்ரா கவுடா மற்றும் ஈஸ்வர் என்ற கேரக்டரில் நடிகர் அமல்ஜித், ஷாரதாவாக ஜெனிபர், தாமோதரனாக ஹரிஷங்கர் நாராயணன், மந்த்ராவாக நடிகை சந்திரிகா, காந்தாரியாக சுபா ரக்ஷா என முக்கிய கதாபாத்திரங்களில் பலர் நடித்து வருகின்றனர். தற்போது மாங்கல்ய சந்தோஷம் மற்றும் அம்மன் மகாசங்கமம் இரவு 7 மணி முதல் 8.30 வரை ஒளிப்பரப்பாகி கொண்டிருக்கிறது. மகாசங்கமம் என்பதால் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் கதை சென்று கொண்டிருக்கிறது. இதனிடையே அம்மன் சீரியலில் புதிதாக இணைந்துள்ளார் நடிகை ஷாந்தி எஸ் கவுடா. இதன் மூலம் முதல் முறையாக தமிழ் பொழுதுபோக்கு துறையில் ஷாந்தி எஸ் கவுடா அறிமுகமாகி உள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கர்நாடகாவின் பெங்களூரைச் சேர்ந்த ஷாந்தி கவுடா மாடல் மற்றும் நடிகை ஆவார். இவர் தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார். மிஸ்டர் & மிஸ் வேர்ல்ட் சவுத்இந்தியா ஷோ 2020-ல் வெற்றி பெற்றவர் ஷாந்தி கவுடா. இதனிடையே அம்மன் சீரியலில் ராஜாளி என்ற கேரக்டரில் முக்கிய எதிரி ரோலில் நடித்து உள்ளார். இவர் ராஜாளியாக நடிக்கும் எபிசோட்கள் தற்போது கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகி வரும் நிலையில், தனது இன்ஸ்டாவில் இது தொடர்பான தகவலை ஷாந்தி எஸ் கவுடா ஷேர் செய்துள்ளார்.
அம்மன் சீரியலில் தான் நடிக்கும் கெட்டப்பில் இருக்கும் சில போடோக்களை இன்ஸ்டாவில் ஷேர் செய்து, #Amman # Rajali #Eagle leader என்ற ஹேஷ் டேக் பயன்படுத்தி, இரவு 7.00 முதல் 8.30 வரை கலர்ஸ் தமிழில் தன்னை பார்க்கலாம் என்று ரசிகர்களுக்கு தகவல் தெரியவித்துள்ளார். கதைப்படி, ராஜாளி (ஷாந்தி) கழுகு குலத்தின் தலைவி. ராஜாளி மற்றும் அவளுடைய மூதாதையர்கள் அரச பட்டயத்தை (அரச வாள்) கைப்பற்ற பல ஆண்டுகளாக முயற்சி செய்கிறார்கள்.

Also read... Shoes of the Dead நாவலை விஜய்யை வைத்து படமாக்கும் வெற்றிமாறன்...?

ஆனால் இம்முயற்சியில் எப்போதும் அவர்கள் தோல்விகளை மட்டுமே சந்தித்துள்ளார்கள். எப்படியாவது அதை கைப்பற்றிவிட வேண்டும் என்ற முயற்சியில், தங்களது கழுகு குலத்தை சேர்ந்த மகேந்திர பூபதியை(சசிந்தர் புஷ்பலிங்கம்) அரச வாளை அபகரிக்கை ஜமீன்தார் குடும்பத்து உறுப்பினராக்கும் வேலைகளில் ஈடுபடுகிறார்கள். இதை தொடர்ந்து, ராஜாளி மற்றும் மகேந்திர பூபதி அரச வாளை எடுக்கும் முயற்சியில் வெற்றி பெறுவார்களா என்பதை வரவிருக்கும் எபிசோட்கள் மூலம் ரசிகர்கள் தெரிந்து கொள்ளலாம்.
Published by:Vinothini Aandisamy
First published: