• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • கலர்ஸ் தமிழ் சீரியல் மூலம் சின்னத்திரைக்கு என்ட்ரி கொடுத்துள்ள Mr,Chennai பிரபலம்.. எந்த சீரியல் தெரியுமா?

கலர்ஸ் தமிழ் சீரியல் மூலம் சின்னத்திரைக்கு என்ட்ரி கொடுத்துள்ள Mr,Chennai பிரபலம்.. எந்த சீரியல் தெரியுமா?

நரேஷ் ராஜ்

நரேஷ் ராஜ்

அம்மன் சீரியலில் வரும் கபிலன் என்ற கதாபாத்திரத்தில் நரேஷ் நடித்து வருகிறார். மேலும் அவர் நடித்த எபிசோட்கள் ஏற்கனவே கலர்ஸ் தமிழ் சேனலில் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன.

  • Share this:
கலர்ஸ் தமிழ் சேனலில் ஒளிபரப்பப்படும் சீரியல் நிகழ்ச்சி ஒன்றில் புதிதாக Mr.Chennai பிரபலம் ஒருவர் என்ட்ரி கொடுத்துள்ளார். அவரது பெயர் நரேஷ் ராஜ். இவர் தற்போது அம்மன் சீரியலின் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த நிகழ்ச்சியின் மூலம் இவர் தமிழ் தொலைக்காட்சியில் புதுமுகமாக அறிமுகமாகியுள்ளார். அம்மன் சீரியலில் வரும் கபிலன் என்ற கதாபாத்திரத்தில் நரேஷ் நடித்து வருகிறார். மேலும் அவர் நடித்த எபிசோட்கள் ஏற்கனவே கலர்ஸ் தமிழ் சேனலில் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன.

இது குறித்த செய்தியை அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் படப்பிடிப்பு தலத்தில் எடுத்த BTS படம் ஒன்றையும் அவர் பகிர்ந்துள்ளார். அதில், சக கலைகர்களுடன் நின்றபடி இவர் போஸ் கொடுத்துள்ளார. மேலும் அந்த பதிவில் அவர்களை டேக் செய்து , " #serial #amman #treditional #class #photolovers #friendship #hope #happiness #smile @deepa15081990 @sasindhar.p @naresh141_official (sic)." என்று பதிவிட்டுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.




மேலும் மற்றொரு புகைப்படத்தை பகிர்ந்த Mr.chennai பிரபலம், " இன்று இரவு 7.00 மணி முதல் இரவு 8.30 வரை நான் நடிக்கும் சீரியலை பாருங்கள். நான் #கபிலன் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். தயவுசெய்து பாருங்கள். சீரியலுக்கு சப்போர்ட் பண்ணுங்க. #serial #handsomeboy #white #explorar #tamilmemes #stylist #lovestory #followme #instagood #mass (sic) ”என்று குறிப்பிட்டிருந்தார்.




கதையின் படி, மதுபோதைக்கு அடிமையான கபிலன் என்ற கதாபாத்திரத்தில் நரேஷ் ராஜ் நடித்து வருகிறார். மேலும் கபிலன் சக்தியை (பவித்ரா) காதலிக்கிறார். அவளுடன் நெருங்கி பழக விரும்புகிறார். இதைத் தொடர்ந்து, அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பது வரவிருக்கும் எபிசோட்களில் தெரியும். மேலும், சீரியலின் கதை மிக விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.

ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த நரேஷ், அவரது தொழில் வாழ்க்கையின் ஆரம்ப கட்டத்தில் உடற்கல்வி ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார். பின்னர், அவர் ஒரு மாடலாக தன்னை அடையாளம் காட்டினார். இதையடுத்து நரேஷ் கடந்த 2013ம் ஆண்டு மிஸ்டர் சென்னை மற்றும் 2019ம் ஆண்டில் மிஸ்டர் பேஷன் ஐகான் போன்ற பட்டங்களை வென்றுள்ளார். பின்னர், அவர் ஒரு சில தெலுங்கு நிகழ்ச்சிகளிலும் நடித்துள்ளார். நடிப்பைத் தவிர, அவர் ஒரு செர்டிஃபைட் உடற்பயிற்சி பயிற்சியாளராகவும் இருக்கிறார்.

Also read... ரசிகர்களை மகிழ்விக்க வரும் செப்டம்பர் மாத ஓடிடி வெளியீடுகள்!

தற்போது அம்மன் சீரியலில் கபிலனாக நரேஷ் ராஜ், ஈஸ்வராக அமல்ஜித், சக்தியாக பவித்ரா கவுடா, துர்காவாக நிவிஷா, ராஜராஜேஸ்வரியாக தீபா, மந்திராவாக சந்திரிகா ஆகியோர் நடித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: