Home /News /entertainment /

தமிழ் புத்தாண்டில் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்திய பிரபல சீரியல் நடிகர்!

தமிழ் புத்தாண்டில் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்திய பிரபல சீரியல் நடிகர்!

சீரியல் நடிகர் அழகப்பன்

சீரியல் நடிகர் அழகப்பன்

Serial Actor Azhagappan: தமிழ் புத்தாண்டை முன்னிட்டு அம்மன் கோயிலில் பால் குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தியுள்ளார் சீரியல் நடிகர் அழகப்பன்.

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் பிரபல சீரியல்களில் நடித்து வரும் அழகப்பன் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தியுள்ள போட்டோஸ் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

சின்னத்திரையில் தொகுப்பாளர் மற்றும் சீரியல் நடிகர் என இரட்டை குதிரையில் சவாரி செய்வது என்பது ஈசியான விஷயம் கிடையாது. ஆனால் ஆங்கராகவும், சின்னத்திரையில் பிரபல காமெடி நடிகராகவும் வலம் வருகிறார் அழகப்பன். கலைஞர் டி.வியில் ‘பட்டாசு பாய்ஸ், மத்தாப்பு கேர்ள்ஸ்’, ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ‘கலாட்டா பொங்கல்’ ஆகிய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். சமீபத்தில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ஜூனியர் சூப்பர் ஸ்டார்ஸ் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற அழகப்பன், தெருக்கூத்து கலைஞராக செய்த பெர்பாமன்ஸ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

அதேபோல் ஜீ தமிழ் தொலைக்காட்சியின் ரோமியோ ஜூலியட் என்ற நிகழ்ச்சியிலும் மனைவியுடன் பங்கேற்று அசத்தியுள்ளார். ‘கானா காணும் காலங்கள்’ சீரியலில் காலேஜ் பேட்ஜில் காமெடி நடிகராக நடித்தார். அதன் பின்னர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘சின்னத்தம்பி’ சீரியலில் நடித்தார். அதன் பின்னர் ஜீ தமிழில் ‘ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி’, ‘செம்பருத்தி’ ஆகிய சீரியல்கள் மூலமாக சிறுசு முதல் பெரிசு வரை அனைவருக்கும் பிடித்த நடிகராக மாறினார்.

 



தற்போது கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ‘அம்மன் 3’, ‘உடன்பிறப்பே’ ஆகிய சீரியல்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். சினிமாவை போல் அல்லாமல் சீரியலில் காமெடி நடிகர்களுக்கான தேவை என்பது மிகக்குறைவு, அப்படியிருக்க தனது திறமையால் பிரதான சீரியல்கள் பலவற்றிலும் அழகப்பன் கலக்கி வருகிறார். சோசியல் மீடியாவிலும் செம்ம ஆக்டிவாக வலம் வரும் அழகப்பன், இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வீடியோ மூலமாக ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

also read : ராஜா ராணி 2 பிரபலமா இது? வைரலாகும் பழைய போட்டோ.. ஆச்சரியத்தில் ரசிகர்கள்!



லேட்டஸ்ட் பாடலுக்கு நடனமாடுவது, பிரபலமான காமெடி சீசனுக்கு சக சீரியல் நடிகர், நடிகைகளுடன் இணைந்து ரீல்ஸ் செய்வது என இன்ஸ்டாகிராமில் படு ஆக்டிவாக வலம் வருகிறார். மேலும் தனது ஷோ மற்றும் பர்ஷனல் அப்டேட்களையும் ரசிகர்களுடன் சோசியல் மீடியா மூலமாகவே பகிர்ந்து கொள்கிறார். அழகப்பனின் ரீல்ஸ் வீடியோவை பார்ப்பதற்கு என்றே தனி ரசிகர்கள் பட்டாளம் உண்டு, எனவே தான் ஒவ்வொரு வீடியோவும் லைக்குகளை வாரிக்குவித்து வருகின்றனர்.

also read : ஏழை மாணவர்களை தேர்ந்தெடுத்து இலவச கல்வி வழங்கும் திட்டத்தை தொடங்கிய நடிகர் மோகன்லால்

நேற்று தமிழ் புத்தாண்டான சித்திரை 1ம் தேதியை முன்னிட்டு அழகப்பன் இன்ஸ்டாகிராமில் வாழ்த்துச் செய்தியுடன் பகிர்ந்துள்ள புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. வழக்கமாக புத்தாண்டு போன்ற ஸ்பெஷல் தினத்திற்கு வாழ்த்துச் சொல்லும் நடிகர், நடிகைகள் புது கெட்டப்பில் செம்ம ஸ்டைலாக போஸ் கொடுத்தபடி இருக்கும் போட்டோவையோ அல்லது ஷூட்டிங்கில் இருக்கும் போட்டோவையோ பகிர்ந்து வாழ்த்து சொல்வார்கள். ஆனால் அழகப்பன் படு யதார்த்தமாக பகிர்ந்துள்ள போட்டோ ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

 



 




View this post on Instagram





 

A post shared by ActorAlagappan (@actor_alagappan)





பெரும்பாலும் சீரியல்களில் கிராமத்து ரோலில் நடித்து வரும் அழகப்பன், தமிழ் புத்தாண்டை முன்னிட்டு அம்மன் கோயிலில் பால் குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தியுள்ளார். தலையில் பால்குடத்துடன் இருக்கும் போட்டோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ள அழகப்பன், “அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.. எல்லா வளமும் நலமும் பெற்று நாம் அனைவரும் சிறப்புற வாழ்வோம்” என பாசிட்டிவாக பதிவிட்டு லைக்குகளை அள்ளி வருகிறார்.

 
Published by:Tamilmalar Natarajan
First published:

Tags: TV Serial

அடுத்த செய்தி