எப்புடி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்... சீரியல் நடிகரின் இன்ஸ்டா பதிவு

அமித் பார்கவ்

அமித் தமிழ், கன்னடம், இந்தி மொழிகளில் திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சி மற்றும் சீரியல்களில் தோன்றியுள்ளார்.

 • Share this:
  பிரபல சின்னத்திரை நடிகரான அமித் பார்கவ். விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை, நெஞ்சம் மறப்பதில்லை உள்ளிட்ட சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகர் அமித் பார்கவ். இவரது மனைவி ஶ்ரீரஞ்சனி. இவரும் விஜய் டிவி-யில் பணியாற்றியவர்கள் தான். ஶ்ரீரஞ்சனி கலக்கப்போவது யாரு சாம்பியன்ஸ் நிகழ்ச்சியில் ஆங்கராக இருந்து தொகுத்து வழங்கினார். இந்நிலையில் இருவருக்கும் காதல் மலர்ந்ததை அடுத்து திருமண வாழ்வில் இணைந்தனர். அமித் தமிழ், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சி மற்றும் சீரியல்களில் தோன்றியுள்ளார். கன்னட தொலைக்காட்சித் தொடரான சீதேவில் இவர் ராமராக நடித்தார்.

  தமிழ் மொழியில் கல்யாணம் முதல் காதல் வரை சீரியலில் நடித்து பிரபலமடைந்த அமித் பார்கவ் அதன் பிறகு தொடர்ந்து பல்வேறு சீரியல்களில் நடித்து வருகிறார். தமிழை பொறுத்த வரை சின்னத்திரை மட்டுமின்றி வெள்ளித்திரையில் சில திரைப்படங்களிலும் தலைகாட்டி உள்ளார்.  விழி மூடி யோசித்தால், என்னமோ எதோ, என்னை அறிந்தால், எனக்குள் ஒருவன், மிருதன், குற்றம் 23, சார்லி சாப்ளின் 2, சக்ரா உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் சில திரைப்படங்களில் டப்பிங் ஆர்டிஸ்டாகவும் பணியாற்றி உள்ளார். தற்போது அவர் ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வரும் திருமதி ஹிட்லர் சீரியலில் நடித்து வருகிறார். சமீபத்தில் கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்ட மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜன் செறிவூட்டிகள் வாங்க நிதி திரட்டும் பணியில் அமித் பார்கவ் - ஶ்ரீரஞ்சனி ஜோடி ஈடுபட்டது அனைவரையும் நெகிழ வைத்தது.  இதனிடையே இதுநாள் வரை ஃபிட்னஸில் ஆர்வம் காட்டாமல் இருந்து வந்த அமித் பார்கவ் தனது இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ள புகைப்படம் மூலம் அவரது ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தி உள்ளார். கடந்த நவம்பர் முதல் இரண்டு மாதங்களுக்கு முன் வரை தனது உடல் ஃபிட்டாக மாறியுள்ளதற்கான ஃபோட்டோவை இன்ஸ்டாவில் ஷேர் செய்து ரசிகர்களின் பாரட்டை பெற்றுள்ளார் அமித். இது தொடர்பாக ஒரே பிரேமில் 2 ஃபோட்டோக்களை ஷேர் செய்துள்ள அவர், "இடது மற்றும் வலதுபுறத்தில் உள்ள ஃபோட்டோக்களுக்கு இடையிலான காலம் 6 மாதங்கள் என்றாலும், கடந்த 3 மாதங்களாக உண்மையிலேயே ஃபிட்டாக இருக்க ஒரு செறிவான முயற்சி இருந்தது" என்று குறிப்பிட்டுள்ளார்.

  Photos : ஜாக்குலின் பெர்னாண்டஸின் பேக்லெஸ் போட்டோ ஷூட்..  உச்சநிலை உடல் ஃபிட்னஸை அடைய இன்னும் நீண்ட தூரம் உள்ளது என்றாலும் எடை தொடர்பான பிரச்சனைகளுடன் போராடுபவர்களை எனது இந்த 2 ஃபோட்டோக்கள் ஊக்குவிக்கும் என்ற நம்பிக்கையில் இந்த தனிப்பட்ட ஃபோட்டோக்களை ஷேர் செய்திருப்பதாகவும் நடிகர் அமித் பார்கவ் தனது போஸ்ட்டில் கூறி உள்ளார். தனது உடலை ஃபிட்டாக மாற்றியுள்ளதற்கு நிலைத்தன்மை தவிர வேறு எந்த ரகசியமும் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Tamilmalar Natarajan
  First published: