டெல்டா மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜன் செறிவூட்டிகள் வாங்க நிதி திரட்டும் சின்னத்திரை ஜோடி!

அமித் பார்கவ் - ஸ்ரீரஞ்சனி

இருவருக்கும் காதல் மலர்ந்ததையடுத்து, சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டனர். பிரபல ஜோடிகளில் ஒரு ஜோடியாக இருக்கும் இவர்களுக்கு பல ரசிகர்கள் உள்ளனர்.

  • Share this:
கொரோனா பெருந்தொற்று காரணமாக ஏராளமான உயிர்கள் பலியாகி கொண்டிருக்கும் இந்த நெருக்கடியான நேரத்தில், நிதி உதவி வழங்குவது, அடிப்படை மருத்துவ வசதிகளை வாங்க உதவுவது அல்லது மன நலன் சார்ந்த கருத்துக்களை பேசி உற்சாகப்படுத்துவது என பல பிரபலங்கள், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர். இந்த பட்டியலில் பிரபல தொலைக்காட்சி ஜோடியான அமித் பார்கவ் - ஸ்ரீரஞ்சனி தம்பதி புதிதாக சேர்ந்துள்ளனர்.

விஜய் டிவி-யில் ஒளிபரப்பான நெஞ்சம் மறப்பதில்லை சீரியலில் நடித்த நடிகர் அமித் பார்கவ், அதே சேனலில் "கலக்கப்போவது யாரு சாம்பியன்ஸ்" நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய ஸ்ரீரஞ்சனி இருவருக்கும் காதல் மலர்ந்ததையடுத்து, சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டனர். பிரபல ஜோடிகளில் ஒரு ஜோடியாக இருக்கும் இவர்களுக்கு பல ரசிகர்கள் உள்ளனர்.

இந்நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு சிகிச்சைக்கு முக்கியமாக தேவைப்படும் ஆக்சிஜன் செறிவூட்டிகளை வாங்கி தரும் உன்னத சேவையை பிரபலங்களான அமித்பார்கவ் - ஸ்ரீரஞ்சனி ஜோடி முன்னெடுத்துள்ளது. இவர்கள் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைகளுக்கு ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை பெறுவதற்கான நிதியை சேகரிக்கும் முயற்சியை, கிரவுட் ஃபண்டிங் (Crowd funding) முறையில் தொடங்கி உள்ளனர். இதற்காக இவர்கள் தஞ்சை மற்றும் புதுக்கோட்டை பகுதிகளை தேர்வு செய்துள்ளனர். மேற்காணும் மாவட்டத்திலுள்ள பல மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடும், மருத்துவ உபகரணங்கள் தட்டுப்பாடும், ஆம்புலன்ஸ் தேவையும் உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இது தொடர்பாக பேசிய ஸ்ரீரஞ்சனி, கடந்த ஆண்டு லாக்டவுன் துவங்கியதில் இருந்து உணவு தேவைப்படுவோருக்கு உணவு, மாணவர்களுக்கு உதவி தொகை வழங்குவது உள்ளிட்ட தங்களால் முடிந்த சிறிய அளவிலான உதவிகளை தேவைப்படுவோருக்கு செய்து வருவதாக குறிப்பிட்டார். இந்த முறை உயிர் காக்கும் முயற்சிக்கு உதவி செய்ய முடிவெடுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்த யோசனை எப்படி வந்தது என்பது குறித்தும் ஸ்ரீரஞ்சனி தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார். அதன் படி “தஞ்சாவூர் டெல்டா பகுதிகளில் தன்னார்வத் தொண்டு செய்யும் சுற்றுச்சூழல் ஆர்வலர் நிமல் ராகவன், அங்குள்ள மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் மற்றும் ஆம்புலன்ஸ்கள் பற்றாக்குறை எந்த அளவிற்கு உள்ளது என்பதை பற்றி விரிவாக கூறினார். இதனை அடுத்து சோஷியல் மீடியாவின் பவரை நன்மைக்காக பயன்படுத்த முடிவு செய்தோம். பொதுவாக செய்திகளில் சென்னை, கோவை மற்றும் மதுரை உள்ளிட்ட பல பெருநகரங்களில் உள்ள நிலைமைகள் அதிகம் காட்டப்படுகின்றன.

ஆனால் தஞ்சை மற்றும் புதுக்கோட்டை பகுதிகளில் தொற்றின் தாக்கம் எப்படி இருக்கிறது மற்றும் மருத்துவ வசதிகளின் நிலைமை வெளிவருவதில்லை. எனவே இந்த டெல்டா பகுதிகளில் இந்த நெருக்கடி நேரத்தில் என்ன நடக்கிறது என்பது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த விரும்பினோம். 20 ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை வாங்க Milaap மூலம் நிதி திரட்டுகிறோம். இது ஒரே நேரத்தில் 40 நோயாளிகளுக்கு உதவ கூடும்" என்று தெரிவித்துள்ளார்.

மேலும் பேசிய ஸ்ரீரஞ்சனி, "ஏற்கனவே 4 ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை வாங்கி பேராவூரணி பட்டுகோட்டை, அறந்தாங்கி, மற்றும் ஆலங்குடி ஆகிய மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. நாங்கள் விழிப்புணர்வையும் நன்கொடையையும் ஆன்லைனில் செலுத்துகிறோம், எங்களுடன் தொடர்பில் இருக்கும் கலெக்டர் சரியான நபர்களுடன் பேசி மெஷின்களை பெறுகிறார்," என்றார்.உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Shalini C
First published: