Home /News /entertainment /

ஒருவழியா பாவ்னி - அமீர் வாழ்க்கையில் அது நடக்க போகுது.. குவியும் வாழ்த்துக்கள்!

ஒருவழியா பாவ்னி - அமீர் வாழ்க்கையில் அது நடக்க போகுது.. குவியும் வாழ்த்துக்கள்!

அமீர் - பாவ்னி

அமீர் - பாவ்னி

பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் பாவ்னியிடம் ஓப்பனாக தனது காதலை மீண்டும் தெரிவிக்கிறார் அமீர்.

    இதுவரை விஜய் டிவியில் 5 பிக் பாஸ் சீசன்கள் ஒளிப்பரப்பாகியுள்ளன. இந்த 5 சீசனிலும் பல்வேறு லவ் ட்ராக்குகள் இடம்பெற்றுள்ளன. ஆனால் மற்ற 4 சீசன்களில் காதலித்த ஜோடிகள் வெளியே வந்த பின்பு அது வெறும் அட்ராக்‌ஷன் தான் என விளக்கம் கொடுத்து விட்டு பிரிந்து விட்டனர். அதிலும் லாஸ்லியா - கவின் ஜோடி திருமணத்தில் சேர்வார்கள் என கவின் ஆர்மி, லாஸ்லியா ஆர்மி ஆவலாக இருந்தனர். ஆனால் இருவருக்கும் பிரேக்கப் ஆகி விட்டது. இதை லாஸ்லியாவே ஒரு பேட்டியில் கூறி இருந்தார். இந்நிலையில், பிக் பாஸ் சீசன் 5ல் தொடங்கிய அமீரின் ஒருதலை காதல் இன்று கிட்டத்தட்ட கிளைமேக்ஸை நெருங்கி விட்டது. பாவ்னியின் முடிவுக்காக தான் ரசிகர்கள் வெயிட்டிங்.

    பிக் பாஸ் 5 சீசனில் உள்ளே போன அமீர், பாவ்னியை காதலிப்பதாக  கூறினார். இதனால் பாவ்னி - அமீர்  இருவரின் பெயரும் அதிகளவில் டேமேஜ் ஆனது. பலரும் இது அமீரின் கேம் பிளான் என்றனர். கடைசியில் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த பின்பும் அமீர் அதை தொடர்ந்தார். எல்லா பேட்டியிலும் பாவ்னியை காதலிப்பது உண்மை என்றார். அதன் பின்பு இந்த ஜோடிக்கு லைக்ஸ் குவிய தொடங்கியது .சமூக வலைத்தளத்தில் மிகப் பெரிய வரவேற்பும்  கிடைக்க ஆரம்பித்தது.

    பாக்கியாவுக்கு இப்படியொரு நிலையா! கதறி துடிக்கும் செல்வி அக்கா

    தொடர்ந்து இருவரும் எல்லா இடங்களிலும் ஜோடியாக கலந்து கொள்ள தொடங்கினர். அதன் பின்பு பிக் பாஸ் ஜோடிகள் சீசன் 2 வில் ஜோடியாக கலந்து கொண்டு நடனம் ஆடி வருகின்றனர், சொல்லப்போனால் இந்த நிகழ்ச்சிக்கு பிறகு இருவரின் நெருக்கமும் அதிகம் ஆனது. இந்த ஜோடிக்காகவே இந்த நிகழ்ச்சியை மிஸ் செய்யாமல் ரசிகர்கள் பார்த்து வருகின்றனர். சமீபத்தில் நடந்த பிரபல யூடியூப் சேனலின் விருது  நிகழ்ச்சியிலும் இருவரும் ஜோடியாக சேர்ந்து நடனம் ஆடி பலரின் கவனத்தையும் பெற்றனர்.

    வருணுடன் சேர்ந்த சக்திக்கு இப்படியொரு சோகமா! கதறி அழும் மல்லிகா



    வாழ்க்கையில் நிறைய கஷ்டங்களை சந்தித்த இருவரும் ஒன்றாக சேர்ந்தால்  நன்றாக இருக்கும் என்றனர் ரசிகர்கள். இந்நிலையில் இந்த வார பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் பாவ்னியிடம் ஓப்பனாக தனது காதலை மீண்டும் தெரிவிக்கிறார் அமீர். பாவ்னிக்கு தெரியாமல் மிகப் பெரிய அளவில் சர்ப்ரைஸ் பிளான் செய்து, வைர மோதிரத்தை கிஃப்டாக கொடுத்து காதலை சொல்கிறார். பாவ்னி கண்ணீரில் நனைகிறார். இதுக் குறித்த புரமோ தற்போது வெளியாகியுள்ளது. அமீருக்கு பாவ்னி என்ன பதில் சொன்னார்? என்பதை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் வெயிட்டிங்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sreeja
    First published:

    Tags: Bigg Boss Tamil, Television, Vijay tv

    அடுத்த செய்தி