Home /News /entertainment /

எனக்கு அமீரை பிடிக்கும்.. மேடையில் போட்டுடைத்த பிக் பாஸ் பாவ்னி!

எனக்கு அமீரை பிடிக்கும்.. மேடையில் போட்டுடைத்த பிக் பாஸ் பாவ்னி!

அமீர் - பாவ்னி

அமீர் - பாவ்னி

பிக் பாஸ் அமீர் - பாவ்னி லவ் வதந்தி உண்மை தானா? வெளியானது அதிர்ச்சி புரமோ.

    சின்னத்திரை ரசிகர்களை குதுகலப்படுத்தும் வகையில் தமிழ் டிவி சேனல்கள் பல வித்தியாசமான மற்றும் சுவாரசியமான நிகழ்ச்சிகளை தயாரித்து டெலிகாஸ்ட் செய்து வருகின்றன. அந்த வகையில் ஸ்டார் விஜய் டிவி தற்போது பிபி ஜோடிகள் சீசன் 2 நிகழ்ச்சியை வார இறுதியில் ஒளிப்பரப்புகிறது. இதில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் தங்களது ரீல் மற்றும் ரியல் ஜோடிகளுடன் நடனம் ஆடி வருகின்றனர். இந்த நிகழ்ச்சியை ஆங்கர் பிரியங்கா மற்றும் பிக் பாஸ் 5 டைட்டில் வின்னர் ராஜூ தொகுத்து வழங்கி வருகின்றனர். நிகழ்ச்சி தொடங்கி 3 வாரங்கள் மட்டுமே ஆன நிலையில் ரசிகர்கள் மத்தியில் இந்த நிகழ்ச்சிக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

    தொடங்குகிறது பிக் பாஸ் சீசன் 6.. ஆங்கர் யார் தெரியுமா?

    அதிலும் குறிப்பாக இந்த நிகழ்ச்சியில் அமீர் - பாவ்னி ஜோடி சேர்ந்து இருப்பது தான் ஐகானிக்காக பார்க்கப்படுகிறது. பிக் பாஸ் 5ல் அமீரின் என்ட்ரிக்கு பிறகு மொத்த கேமும் தலைகீழாக மாறியது. சொல்லப்போனால் அமீரின் வாழ்க்கை அப்படியே மாறி இப்போது அமீருக்கு இன்ஸ்டாவில் தனி ஆர்மி பேட்ஜே உருவாக்கி இருக்கிறார்கள் ரசிகர்கள். பாவ்னியிடம் இவர் காதல் சொன்ன விதம் பலருக்கும் பிடித்த போக, இப்போது சோஷியல் மீடியா ட்ரெண்டிங் ஜோடி என்றால் அது அமீர் - பாவ்னி தான்.

    ராஜா ராணி 2 பார்வதி வாங்கிய காரின் விலை இத்தனை லட்சமா?

    பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்த பின்பும் எல்லா பேட்டிகளிலும் அமீர் பாவ்னியை காதலிப்பது நிஜம் என்றே கூறி வந்தார்.  பிக் பாஸ் அல்டிமேட்டில் பாவ்னி பற்றி அனிதா பேசிய சர்ச்சை கருத்துக்கு அமீர் சண்டைக்கு வந்தார். அதற்கு பாவ்னியும் ரியாக்ட் செய்து இருந்தார். சோஷியல் மீடியாவில் இவர்களின் ஜோடி பொருத்தம் சூப்பர் என்று ஒரு கூட்டம் கொண்டாடி வருகிறது. இதை கன்டெண்டாக மாற்ற பிளான் செய்த விஜய் டிவி பிபி ஜோடிகளில் இருவரையும் ஜோடி சேர்த்து போட்டியாளராக களம் இறக்கியுள்ளது.



    இந்நிலையில் இந்த வாரத்திற்காக பிபி ஜோடிகள் புரமோ தற்போது வெளியாகியுள்ளது. அதில் பாவ்னியிடம் அமீர் குறித்து கேள்வி கேட்கப்படுகிறது. அதில் பாவ்னி மிகவும் தைரியமாக அமீரை எனக்கு பிடிக்கும் என போல்டாக கூறியுள்ளார். அதே போல் இன்னும் கொஞ்சம் டைம் வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். அப்படி என்றால் அமீர் - பாவ்னி லவ் வதந்தி உண்மை தானா? என ரசிகர்கள் கேள்விகளை அடுக்கி வருகின்றனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sreeja
    First published:

    Tags: Bigg Boss Tamil, Bigg Boss Tamil 5, Vijay tv

    அடுத்த செய்தி