Home /News /entertainment /

ஒரே மேடையில் இந்து - முஸ்லீம் முறைப்படி திருமணம்.. ஷாக் கொடுத்த அமீர் - பாவ்னி!

ஒரே மேடையில் இந்து - முஸ்லீம் முறைப்படி திருமணம்.. ஷாக் கொடுத்த அமீர் - பாவ்னி!

அமீர் - பாவ்னி

அமீர் - பாவ்னி

பாவ்னியை பார்த்து காதலில் விழுகிறார் அமீர். இருவரும் காதலிக்கிறார்கள்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    அமீர் - பாவ்னி சேர்ந்து நடித்துள்ள செந்தாமரையே ஆல்பம் பாடல் யூடியூப்பில் வெளியாகி மில்லியன் பார்வையாளர்களை தட்டி சென்றுள்ளது.

    பிக் பாஸ் சீசன் 5ல் போட்டியாளர்களாக கலந்து கொண்ட அமீர் - பாவ்னி இப்போது இணையத்தில் சென்சேஷனல் ஜோடி. எந்த பக்கம் திரும்பினாலும் இவர்களின் காதல், கல்யாணம் குறித்த பேச்சு தான். பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போதே அமீர், பாவ்னியை காதலிப்பதாக கூறினார் வெளியே வந்தும் அதை எல்லா இடத்திலும் ரிஜிஸ்டர் செய்தார். இந்த ஜோடிக்கு ஏகப்பட்ட வரவேற்பு இருப்பதை பார்த்ததும் விஜய் டிவி இருவரையும் மறுபடியும் ஜோடி சேர்த்தது. பிபி ஜோடிகள் சீசன் 2வில் போட்டியாளர்களாக களம் இறக்கியது.

    பிரபல சீரியல் நடிகருக்கு ஒரே நேரத்தில் நடந்த சோகம்! ரசிகர்களும் ரொம்ப மிஸ் பண்ணுவாங்க!

    கிட்டத்தட்ட 4 மாதங்கள் நடந்த நிகழ்ச்சியில் இருவரின் கெமிஸ்ட்ரி இன்னும் ஸ்ட்ராங் ஆகியது. இருவரும் டைட்டில் அடித்தனர். இந்த நிகழ்ச்சியில் பலவகையில் தனது காதலை அமீர், பாவ்னியிடம் வெளிப்படுத்தினார். கடைசியில் ஒருவழியாக பாவ்னியும் அமீர் காதலை ஏற்றுக் கொண்டார். இப்படி இருக்கையில் சமீபத்தில் தான் இருவரும் சேர்ந்து புதியதாக ஆடி கார் ஒன்றை வாங்கினர். அடுத்து என்ன?  கல்யாணம் தான் என ரசிகர்கள் ஆர்பரிக்க மற்றொரு  சர்ப்ரைஸ் கொடுத்தனர் இருவரும்.



    மீண்டும் சீரியலுக்கு வரும் நடிகர் விஜய்யின் தோஸ்த் சஞ்சீவ்!

    அதாவது அமீர் - பாவ்னி இருவரும் சேர்ந்து ஆல்பம் பாடல் ஒன்றில்  நடித்துள்ளனர். ‘செந்தாமரையே’ என தொடங்கும் இந்த பாடல் நேற்று  மாலை யூடியூப்பில் வெளியாகி ஹிட் அடித்துள்ளது. பாவ்னியை பார்த்து காதலில் விழுகிறார் அமீர். இருவரும் காதலிக்கிறார்கள். கடைசியில் இவர்களின் காதல் திருமணத்தில் முடிகிறது. செம்ம க்யூட் ரொமாண்டிக் ஆல்பமாக வெளிவந்துள்ள இந்த செந்தாமரையே பாடல் அமீர் - பாவ்னி ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது. இதுவரை இந்த பாடல் யூடியூப்பில் மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.



    இந்த ஆல்பம் பாடலின் இறுதியில் அமீர் - பாவ்னி இருவரும் இந்து, முஸ்லீம் முறைப்படி ஒரே மேடையில் திருமணம் செய்துக் கொள்கின்றனர். மிகவும் அழகாக யோசித்து இந்த சீன் வைக்கப்பட்டுள்ளதாக ரசிகர்கள் கமெண்ட் பாக்ஸில் கூறி வருகின்றனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sreeja
    First published:

    Tags: Bigg Boss Tamil 5, Vijay tv, Youtube

    அடுத்த செய்தி