Home /News /entertainment /

கல்யாணத்துக்கு முன்னாடி அமீர் - பாவ்னி வாழ்க்கையில் இப்படியொரு நல்ல விஷயமா!

கல்யாணத்துக்கு முன்னாடி அமீர் - பாவ்னி வாழ்க்கையில் இப்படியொரு நல்ல விஷயமா!

அமீர் - பாவ்னி

அமீர் - பாவ்னி

இருவருக்கும் தனது வாழ்த்துக்களை கூறி மென்மேலும் வளர வேண்டும் எனவும் வாழ்த்தியுள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    அமீர் - பாவ்னி இருவரும் சேர்ந்து திருமணத்திற்கு முன்பு ஆடி கார் வாங்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படத்தை அமீரின் கார்டியன் அஷ்ரப் தனது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.

    பிக் பாஸ் சீசன் 5ல் தொடங்கிய அமீரின் ஒருதலைக்காதல் இன்று கிட்டத்தட்ட திருமணம் வரை நெருங்கி விட்டது. அமீரின் காதலை பாவ்னி ஏற்றுக் கொண்டதில் அவரின் ரசிகர்கள் பயங்கர ஹேப்பி. பிக் பாஸ் சீசன் 5ல் வீட்டில் இருந்த நாட்கள் தொடங்கி வெளியே வந்த பின்பும்  பாவ்னி மீது தனக்கு இருக்கும் காதல் உண்மை என்றே அமீர் கூறி வந்தார். பின்பு இருவரும் ஒன்றாக சேர்ந்து பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டனர். பிபி ஜோடிகள் முழுவதும் இவர்களின் நடனம் பலரின் பாராட்டுக்களை பெற்றது.

    இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே.. ஒரே படத்தில் அறிமுகமாகும் சீரியல் நடிகைகள்!

    அதற்கு பரிசாக அமீர் - பாவ்னி பிபி ஜோடிகள் சீசன் 2 டைட்டில் வின்னர் பட்டத்தை பெற்றனர். அமீரின் காதலையும் பாவ்னி ஏற்றுக் கொண்டார். சமீபகாலமாக இவர்கள் இருவரும் கூடிய விரைவில் திருமணம் செய்ய இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஆனால் இதை இதுவரை அமீர் - பாவ்னி இருவரும் உறுதி செய்யவில்லை. இப்படி இருக்கையில் தற்போது அமீர் - பாவ்னி இருவரும் இணைந்து ஆடி கார் ஒன்றை வாங்கியுள்ளனர்.

     



     




    View this post on Instagram





     

    A post shared by Ashref Ash (@ashref_ash)




     

     

    புதிய காருடன் இவர்கள் இருவரும் இருக்கும் புகைப்படத்தை அமீரின் கார்டியனான அஷ்ரப் தனது இன்ஸ்டாவில் ஷேர் செய்து இருவருக்கும் தனது வாழ்த்துக்களை கூறி மென்மேலும் வளர வேண்டும் எனவும் வாழ்த்தியுள்ளார்.




     

     

    அதுமட்டுமில்லை அமீர் - பாவ்னி வாங்கிய புதிய காருடன் அமீரின் செல்ல தங்கை அலேனாவும் சேர்ந்து புகைப்படம் எடுத்துள்ளார். காரின் நம்பரை முன் எச்சரிக்கையாக மறைத்து புகைப்படத்தை அஷ்ரப் ஷேர் செய்துள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sreeja
    First published:

    Tags: Bigg Boss Tamil, Bigg Boss Tamil 5, Vijay tv

    அடுத்த செய்தி