ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

பிக்பாஸ் அமீரின் வாழ்க்கையில் இப்படியொரு சோகமா? சிறுவனாக இருந்தபோதே கொலை செய்யப்பட்ட தாய்!

பிக்பாஸ் அமீரின் வாழ்க்கையில் இப்படியொரு சோகமா? சிறுவனாக இருந்தபோதே கொலை செய்யப்பட்ட தாய்!

பிக் பாஸ் அமீர்

பிக் பாஸ் அமீர்

பிக் பாஸ் அமீர் தனது சகோதரருடன், அனாதை ஆசிரமத்தில் வளர்ந்து வந்தாராம் . சிறு வயதில் அமீர் பட்ட இந்த கஷ்டங்கள், பலரின் மனதை உலுக்கியுள்ளது.

 • Trending Desk
 • 2 minute read
 • Last Updated :

  பிக்பாஸின் 5-ஆம் சீசன் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. கடந்த அக்டோபர் 3-ம் தேதி ஆரம்பித்த பிக்பாஸ் சீசன் 5, மொத்தமாக 18 போட்டியாளர்களுடன் துவங்கியது. பிக்பாஸ் சீசன் 5 துவங்கிய போது இசை வாணி, ராஜு, மதுமிதா, பிரபல யூடியூபர் அபிஷேக் ராஜா, திருநங்கை நமிதா மாரிமுத்து, மலேசிய தமிழ் பெண் நாடியா சாங், விஜய் டிவி-யின் பிரபல ஆங்கர் பிரியங்கா தேஷ்பாண்டே, மறைந்த நடிகர் ஜெமினி கணேசன் - சாவித்திரி ஆகியோரது பேரன் அபிநய், அக்‌ஷரா, ஐசரி வருண், இமான் அண்ணாச்சி, தாமரைச் செல்வி, ஸ்ருதி, பாவனி ரெட்டி, நிரூப், ஐக்கி, சிபி, சின்னப்பொண்ணு உள்ளிட்ட 18 போட்டியாளர்கள் இருந்தார்கள்.

  50 நாட்களை கடந்த பின்பு, பல எலிமினேஷனை கடந்து நிரூப், தாமரை, பிரியங்கா, ராஜு,சிபி,வரும் ,அக்ஷரா,பாவனி,  உள்ளிட்டோர் எஞ்சியிருந்தனர். இந்த நிலையில் தான் வீட்டிற்குள் வைல்ட் கார்டு போட்டியாளர்கள் நுழைந்தனர். அதில், ஏற்கனவே எலிமினேட் செய்யப்பட்ட அபிஷேக் வீட்டிற்குள் நுழைந்தார். பின்னர், இரு தினங்களிலேயே டான்ஸ் மாஸ்டர் அமீர் வீட்டிற்குள் நுழைந்தார். பின்னர், சஞ்சீவ் வெங்கட் என்ட்ரி கொடுத்தார். தற்போது, இந்த சீசன் 70 நாட்களை கடந்து சென்று கொண்டிருக்கிறது. வீட்டிற்குள் வைல்ட் கார்டு என்ட்ரி கொடுத்தவர்களை பற்றி ரசிகர்களுக்கு தெரிந்திருந்தாலும், அமீர் பற்றி பலருக்கு தெரியாமலேயே இருந்தது. மேலும் இவரை யார் என்ற தகவல்களும் இணையத்தில் பரவ ஆரம்பித்தது.

  செம்பருத்தி பார்வதி - ஆர்யன் ஜோடிக்கு என்ன ஆச்சு? காதல் திருமணத்தில் புயலை கிளப்பும் பிரச்சனை!

  இவர் ஒரு டான்ஸ் கோரியோகிராஃபர் ஆவார். மேலும் டான்ஸ் அகாடமி வைத்து நடத்தி வருகிறார். விஜய் டிவியில் ஒளிபரப்பான ஜோடி, டான்ஸ் Vs டான்ஸ், டான்ஸ் ஜோடி டான்ஸ், கிங்ஸ் ஆஃப் டான்ஸ், பிக்பாஸ் ஜோடிகள் உள்ளிட்ட பல டான்ஸ் ஷோக்களில் கோரியோகிராஃபராக இருந்திருக்கிறார். பல திரைப்படங்களுக்கும் அமீர் கோரியோகிராஃப் செய்திருக்கிறார் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.

  மேலும், பிக்பாஸ் வீட்டில் அவர் எல்லோரிடமும் மனதில் பட்டத்தை வெளிப்படையாக சொல்லி வந்ததால், இவர் மீது ரசிகர்களுக்கு கவனம் திரும்பியது. மேலும், 50 நாட்கள் கழித்து வந்ததால் தன் விளையாட்டை நன்றாக காண்பிக்க வேண்டும் என்பதற்காக அனைத்து டாஸ்குகளிலும் ஆர்வத்துடன் பங்கெடுத்து வருகிறார். இந்த நிலையில், இவரை பற்றி தெரியாத மற்றொரு தகவல் தற்போது வெளியாகியிருக்கிறது. இவரது வாழ்க்கையில் இவ்வளவு சோகமான சம்பவங்கள் நடந்துள்ளதா என்று அமீரின் ரசிகர்கள் மிகுந்த அதிர்ச்சியடைந்துள்ளனர்.
   
  View this post on Instagram

   

  A post shared by @amir__ads  அமீருக்கு ஒரு வயது இருக்கும்போதே தனது தந்தையை இழந்துவிட்டாராம். மேலும் அமீர் 10ஆம் வகுப்பு படிக்கும் பொழுது, அவர் தாய் கொலை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ஆதரவின்றி தவித்த அமீர் தனது சகோதரருடன், அனாதை ஆசிரமத்தில் வளர்ந்து வந்தாராம் .

  விஜய் டிவியின் மிகப் பெரிய ஹிட் சீரியலின் 2வது பாகம் தயார்! ஹீரோ ஹீரோயின் இவர்கள் தான்

  சிறு வயதில் அமீர் பட்ட இந்த கஷ்டங்கள், பலரின் மனதை உலுக்கியுள்ளது. மேலும், அமீர் சிறுவயதில் இருந்தே நன்றாக டான்ஸ் ஆடுவாராம். அதனை கண்ட அவரது தாய் நீ கட்டாயம் நடனத்தில் சாதிக்க வேண்டும் என்று கூறுவாராம். தனது தாய்காகவே இவர் நடன இயக்குனராக தற்போது உருவெடுத்துள்ளார்.

  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  Published by:Sreeja
  First published:

  Tags: Bigg Boss Tamil 5, TV Serial, Vijay tv