Home /News /entertainment /

பிக் பாஸ் அமீர் இப்படிப்பட்டவரா? வீடியோவால் தெரிய வந்த உண்மை! கண்ணீரில் ரசிகர்கள் கூட்டம்

பிக் பாஸ் அமீர் இப்படிப்பட்டவரா? வீடியோவால் தெரிய வந்த உண்மை! கண்ணீரில் ரசிகர்கள் கூட்டம்

அமீர் பிக் பா வீட்டில் அடிக்கடி குறிப்பிடும் பெயர் அலெனா. இவர் அஷ்ரப் – ஷைஜியின் இரண்டாவது மகள்

அமீர் பிக் பா வீட்டில் அடிக்கடி குறிப்பிடும் பெயர் அலெனா. இவர் அஷ்ரப் – ஷைஜியின் இரண்டாவது மகள்

அமீர் பிக் பா வீட்டில் அடிக்கடி குறிப்பிடும் பெயர் அலெனா. இவர் அஷ்ரப் – ஷைஜியின் இரண்டாவது மகள்

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
  பிக் பாஸ் 5ல் ‘டிக்கெட் டு ஃபினாலே’ மூலம் டாஸ்க் மூலம் பிக் பாஸ் இறுதி போட்டிக்கு சென்ற டான்ஸ் மாஸ்டர் அமீர் பற்றிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் கண்ணீருடன் அமீரை வாழ்த்தி வருகின்றனர்.

  2021 ஆம் ஆண்டு சின்னத்திரைய்ல் மிகவும் எதிர்பார்க்கபட்ட நிகழ்ச்சி பிக் பாஸ் சீசன் 5. கடந்த அக்டோபர் மாதம் விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி பெரும் எதிர்பார்ப்புகளுடன் தொடங்கியது. 16 போட்டியாளர்கள் வரிசைக்கட்டி வந்தனர். ஆரம்பத்தில் கலவையான விமர்சனங்களை பெற்ற பிக் பாஸ் 5, தாமரை , பிரியங்கா, ராஜூவால் சூடுப்பிடிக்க தொடங்கியது. 50 நாட்களுக்கு பின்பு டி.ஆர்.பி ரேட்டிங்கிலும் நல்ல இடத்தை பிடித்தது. அப்போது தான் வைல்ட் கார்டு என்ட்ரியாக டான்ஸ் மாஸ்டர் அமீர் மற்றும் நடிகர் சஞ்சீவ் உள்ளே வந்தனர்.

  இதையும் படிங்க.. சிம்பு படத்தில் பிக் பாஸ் சீசன் 5 பிரபலம்? தீயாய் பரவும் புகைப்படம்!

  இதில் சஞ்சீவ் கடந்த வாரம் வெளியேறினார். டிக்கெட் டு ஃபினாலே டாஸ்கில் வெற்றி பெற்று டான்ஸ் மாஸ்டர் அமீர் நேரடியாக இறுதி சுற்றுக்கு சென்றார். வைலட் கார்டு என்ட்ரியாக உள்ளே வந்த அமீர் முதல் 2 வாரம் இருக்குற இடம் தெரியாமல் இருந்தார். ஆனால் கடந்து வந்த பாதை சுற்றுக்கு பின்பு அவர் குறித்த உண்மை போட்டியாளர்களுக்கும் சரி ,பிக் பாஸ் ரசிகர்களுக்கும் சரி அதிர்ச்சியுடன் தெரிய வந்தது. அந்த எபிசோடு டெலிகாஸ்ட் ஆன பிறகு அமீர் மக்கள் மனதில் ஸ்பெஷல் இடத்தை பிடித்தார். அவரின் அம்மா மரணமும், அவர் வளர்ந்த விதமும், கஷ்டப்பட்டு ஜெயித்த கதையும் பலருக்கும் தன்னம்பிக்கையை தந்தது.

  இதையும் படிங்க.. பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மா மீண்டும் கர்ப்பமா? தெறித்து ஓடும் ரசிகர்கள்!

  இதில் முக்கியமாக குறிப்பிட வேண்டியது அமீரை தத்தெடுத்த அஷ்ரப் – ஷைஜி குடும்பம். இவர்களை பிக் பாஸ் வீட்டுக்குள் செல்லும்படி பொதுமக்கள் பலரும் சமூகவலைத்தளங்களில் கோரிக்கை வைத்திருந்தனர். உள்ளே சென்ற ஷைஜி  அவரின் 2 மகள்கள், அமீருக்கு சர்ப்ரைஸ் தந்து, அட்வைஸ்களையும் செய்து வந்தனர்.  அவர்களின் வருகைக்கு பின்பு அமீர் பிக் பாஸ் கேமில் கவனம் செலுத்த தொடங்கினார். அதன் பலனால் இன்று நேரடியாக பிக் பாஸ் இறுதி சுற்றுக்கும் சென்று விட்டார். அமீர் பிக் பாஸ் வீட்டில் அடிக்கடி குறிப்பிடும் பெயர் அலெனா. இவர் அஷ்ரப் – ஷைஜியின் இரண்டாவது மகள்.இவர் மீது அமீர் வைத்திருக்கும் அன்பு பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. அதுமட்டுமில்லை அமீர், அலெனாவுக்கு தாயாக, தந்தையாக, அண்ணனாக மாறி அவரை பார்த்துக் கொண்ட விதம் வீடியோவாக இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த பலரும் கண்ணீருடன் இந்த உறவு என்றும் அமீருக்கு நீடிக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.  ரத்த சொந்த இல்லாமல், அடைக்கலம் கொடுத்தவர்களை குடும்பமாக ஏற்றுக் கொண்டு இந்த காலத்தில் இப்படி வாழ்வது மிக மிக அரிது. அமீரின் உண்மை குணம், பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்களுக்கு தெரியவில்லை எனவும் ரசிகர்கள் கருத்தை பதிவு செய்து வருகின்றனர்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Sreeja
  First published:

  Tags: Bigg Boss Tamil, Bigg Boss Tamil 5, Vijay tv

  அடுத்த செய்தி