Home /News /entertainment /

சூர்யா மீது க்ரஷ்.. சிம்புவையும் பிடிக்கும்! ஓப்பனாக பதிலளித்த நடிகை அமலா பால்

சூர்யா மீது க்ரஷ்.. சிம்புவையும் பிடிக்கும்! ஓப்பனாக பதிலளித்த நடிகை அமலா பால்

அமலா பால் - சிம்பு

அமலா பால் - சிம்பு

சினிமாவில்  எந்த நடிகர் மீது க்ரஷ்? என்று அமலா பாலிடம் பிரியங்கா கேட்கிறார்.

    சூர்யா மீது க்ரஷ், நடிகர் சிம்புவையும் பிடிக்கும் என்று நடிகை அமால் பால் கூறியுள்ளார். விஜய் டிவியில் அவர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் ஓப்பனாக பதிலளித்து அசர வைக்கிறார் அமலா பால்.

    குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த டிவி சேனலாக இருந்து வருகிறது  விஜய் டிவி. இதில் ஒளிப்பரப்பாகும் அனைத்து நிகழ்ச்சிகளும் காமெடி கலந்த நிகழ்ச்சியாகவே இருக்கிறது. இதனால் இதில் ஒளிப்பரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களும் ரசிகர்கள் மத்தியில் ஈர்ப்பை ஏற்படுத்திவிடுகின்றன. அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிப்பரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சி சூப்பர் டூப்பர் ஹிட். இந்த நிகழ்ச்சியின் 3 சீசன்கள் வெற்றிக்கரமாக நடந்து முடிந்துள்ளன. அதே போல் விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியும் பயங்கர ஹிட். 5 சீசன்கள் முடிவடைந்துள்ள நிலையில் ரசிகர்கள் 6வது சீசனுக்காக வெயிட்டிங்.

    5 வயதில் சீரியலில் நடித்த விஜய் டிவி நடிகை.. யாருன்னு கெஸ் பண்ணுங்க!

    இந்நிலையில் விஜய் டிவியில் சமீபத்தில் தொடங்கப்பட்ட கலர்ஃபுல் காமெடி நிகழ்ச்சி ’ராஜூ வுட்ல பார்ட்டி’. இந்த ஷோவில் பிக்பாஸ்  ராஜூ தனது டீம்முடன் சேர்ந்து  கெஸ்ட்டாக வரும் செலிபிரிட்டியை கலாய்கிறார். அவருடன் சூப்பர் சிங்கர் பிரியங்காவும் கைக்கோர்த்துள்ளார். மாகாபா - பிரியங்கா ஜோடிக்கு பிறகு ஆங்கரிங்கில் ராஜூ - பிரியங்கா ஜோடி செம்ம வைரல். போன வாரம் இந்த நிகழ்ச்சியில் ஈரமான ரோஜாவே கேப்ரியல்லா, பாக்கியலட்சுமி ரேஷ்மா ஆகியோர் பங்கேற்றனர்.



    இந்நிலையில் இந்த வாரம் ராஜூ வுட்ல பார்ட்டி நிகழ்ச்சியில் நடிகை அமலா பால் பங்கேற்றுள்ளார். இது தொடர்பான புரமோ தற்போது வெளியாகியுள்ளது. இதில் மதுரை முத்து, முல்லை, கோதண்டம், தீபா, ஆகியோர் செய்யும் அலப்பறைகள் புரமோவிலே வயிறு குலுங்க ரசிகர்களை சிரிக்க வைக்கிறது. அது மட்டுமில்லை மைனா புகழ் அமலா பால் நீண்ட இடைவெளிக்கு பிறகு சின்னத்திரையில் என்ட்ரி கொடுக்கிறார். அவருக்கு அந்நியன் படத்தில் வரும் லவ் டெஸ்ட் டாஸ்க் கொடுக்கப்படுகிறது. சினிமாவில்  எந்த நடிகர் மீது க்ரஷ்? என்று அமலா பாலிடம் பிரியங்கா கேட்கிறார்.

    கோபியின் காதலி ராதிகாவிடம் அப்படியொரு கேள்வி.. சும்மா விடுவாரா!

    அதற்கு அவர் சூர்யா என பதில் சொல்கிறார். லவ் டெஸ்ட் கிட் நகரவே இல்லை, பின்பு அவரே ஜோதிகா மேம் ஏதோ செய்து விட்டார் என நகைச்சுவையாக பதில் கூறிவிட்டு நெகஸ்ட் சிம்பு என்கிறார். லவ் டெஸ்ட் கிட் எகிறி செல்கிறது. பார்வையாளர்கள் ஆராவாரம் செய்கின்றனர். இந்த நிகழ்ச்சியின் முழு எபிசோடை வரும் ஞாயிறு இரவு 9.30 மணிக்கு விஜய் டிவியில் கண்டுக்களிக்கலாம்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sreeja
    First published:

    Tags: Anchor Priyanka, Television, Vijay tv

    அடுத்த செய்தி