சின்னத்திரையில் ரசிகர்களால் மிகவும் ரசிக்கப்பட்ட ஜோடி என்றால் அது ராஜா ராணி சீரியல் ஆல்யா மானசா - சஞ்சீவ் ஜோடிதான். சீரியலில் ரீல் ஜோடிகளாக இருந்து ரியல் ஜோடிகளானவர்கள் . ஆல்யாவிற்கு அவ்வப்போது ஸ்பெஷல் சர்ப்ரைஸ் கிப்ட் கொடுப்பதை சஞ்சீவ் வழக்கமாக வைத்திருப்பது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. அந்த வகையில் ஆல்யா மீது தனக்கு இருக்கும் காதலை மீண்டும் ஒருமுறை நிரூபித்து காட்டி இருக்கிறார் சஞ்சீவ். அதற்காக அவர் என்ன செய்தார் தெரியுமா?
நடிகர் சஞ்சீவ் மற்றும் நடிகை ஆல்யா மானசா விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியலில் ஜோடியாக நடித்தனர். இந்த சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும்போதே, இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர்.இதையடுத்து, ஆல்யா கர்ப்பமானார். ஆல்யாவுக்கு பெண் குழந்தை பிறந்தது. இருவரும் தங்கள் குழந்தைக்கு அய்லா என்று பெயர் வைத்தனர். திருமணத்துக்கு பிறகு, சஞ்சீவ் கார்த்திக், விஜய் டிவியில் காற்றின் மொழி சீரியலில் நடித்து வந்தார். அந்த சீரியல் முடிந்த பிறகு, சன் டிவியில் அண்மையில் தொடங்கப்பட்ட புதிய சீரியலான கயல் சீரியலில் நடித்து வருகிறார்.ஆல்யாவும் திருமணத்துக்கு பிறகு, விஜய் டிவியில் ராஜா ராணி சீசன் 2 சீரியலில் நடித்து வந்தார்.
17 அரியர்.. பாதியில் விட்ட படிப்பு! ஆல்யா மானசாவின் கல்லூரி வாழ்க்கை இதுதான்!
இந்நிலையில், ஆல்யா மானசா, மீண்டும் கர்ப்பமடைந்தார். 9 மாதம் நிறைமாத கர்ப்பிணியாக சீரியலில் நடித்து விட்டு பின்னர் பிரேக் எடுத்து சென்று விட்டார். அவருக்கு பதில் ரியா தற்போது ராஜா ராணி 2 சீரியலில் நடித்து வருகிறார். ஆல்யாவுக்கு 2 மாதத்துக்கு முன்பு தான் பெண் ஆண் குழந்தை பிறந்தது. இப்போது ஆல்யா ,குழந்தை, கணவர் மற்றும் குடும்பத்துடன் தனது நேரத்தை செலவழித்து வருகிறார். அதே நேரம் சமூகவலைத்தளங்களில் பயங்கர ஆக்டிவாக இருக்கிறார். போன வருடம் ஆல்யா பர்த்டே, அய்லா பர்த்டே என சஞ்சீவ் தனது மனைவி ஆல்யாவுக்கு சொகுசு கார் வாங்கி பரிசளித்து மகிழ்வித்திருக்கிறார்.
இந்த முறை ஆல்யாவுக்கு அடுத்த சர்ப்பிரஸை தந்து இருக்கிறார் சஞ்சீவ். 3 தினங்களுக்கு முன்பு ஆல்யா மானசா தனது பிறந்த நாளை கொண்டாடினார். அப்போது அவருக்கு சர்ப்பிரைஸாக மொட்டை மாடியில் பிரம்மாண்டமாக செட் போட்டு அசத்தியுள்ளார் சஞ்சீவ். அதுமட்டுமில்லை இரவு 12 மணிக்கு ஃபோன் செய்து மொத்த குடும்பத்தை வர வழைத்து ஆல்யாவுக்கு கேக் கட்டிங்கும் செய்துள்ளார். இந்த வீடியோவை யூடியூப் சேனலில் சஞ்சீவ் பகிர்ந்துள்ளார். அதற்கு லைக்ஸ் குவிந்து வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Alya Manasa, Sun TV, Vijay tv