சின்னத்திரையில் ஜோடிகளிலேயே மிகவும் பிரபலமான ஜோடி என்றால் அது ஆல்யா மான்சா - சஞ்சீவ் ஜோடியை சொல்லலாம். இந்த இருவரும் சீரியலில் ரீல் ஜோடிகளாக நடித்து பின்பு காதலால் ரியல் ஜோடி ஆனார்கள்.ராஜா ராணி சீரியலில் செம்பா என்ற ரோலில் நடித்து ரசிகர்களின் மனதில் ஆழமாக பதிந்தார் நடிகை ஆல்யா. அதே போல சஞ்சீவும். வெள்ளித்திரையில் இருந்து சின்னத்திரைக்கு வந்தவர் இப்போது மக்களின் கதாநாயகனாக வலம் வருகிறார். இருவருக்கும் 2019 ஆம் ஆண்டு திருமணம் நடைப்பெற்றது.
இந்த மாதிரி ஆண்கள் தான் காரணம்.. நடிகை குஷ்புவின் கோபத்துக்கு என்ன காரணம்?
பின்பு ஆல்யாவுக்கு ஐலா என்ற பெண் குழந்தை பிறந்தது. . குழந்தை பிறந்த பிறகு சீரியலில் இருந்து பிரேக் எடுத்த ஆல்யா யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கி ஐலாவுடன் விளையாடுவது, ஷாப்பிங் செல்வது போன்ற விஷயங்களை பதிவிட்டு வந்தார். அதன் பின்னர் கடந்த ஆண்டு ராஜா ராணி சீசன் 2 சீரியலில் சந்தியா கதாபாத்திரத்தின் மூலம் டீ எண்ட்ரி கொடுத்தார். ஆல்யாவை ரசிகர்கள் உற்சாகத்துடன் வரவேற்று மீண்டும் ஒரு வெற்றியை தந்தனர். சந்தியா ரோல் மூலம் மீண்டும் ஹிட் அடித்தார் ஆல்யா.
அஜித்குமார் பிறந்த நாள் அன்று வலிமை... ஜீ தமிழின் சூப்பர் அப்டேட்!
ராஜா ராணி 2 சீரியலும் நல்ல ரேட்டிங்கில் சென்றுக் கொண்டிருந்தது. இதற்கிடையில் மீண்டும் இரண்டாவது முறை கர்ப்பமான ஆல்யா, சீரியலில் தொடர்ந்து நடித்து வந்தார். முதல் குழந்தையின் பிறந்த நாளோடு ஆல்யா மானசாவின் வளைகாப்பும் நடந்தது.அதன் பின்னர் பிரசவத்திற்காக பிரேக் எடுப்பதாக அறிவித்தார். அடுத்த சில நாட்களில் ஆல்யா நிரந்தரமாக சீரியலை விட்டு விலகிய விஷயம் தெரிய வந்தது. ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர், ஆல்யாவுக்கு அர்ஷ் என்ற ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் பிரசவத்திற்கு பின்பு வீட்டுக்கு வந்த ஆல்யா முழுமையாக் ரெஸ்ட் எடுத்து வருகிறார். இடையில் தங்களுடைய யூடியூப்புக்கு கன்டெண்டும் கொடுத்து வருகிறார். அந்த வகையில் ஆல்யா, 2 குழந்தைகளை பார்த்துக் கொண்டு, வீட்டில் ஸ்வீட் அல்வா செய்து மாமியாருக்கு கொடுக்கும் வீடியோவை அவரின் கணவர் சஞ்சீவ் வெளியிட்டுள்ளார். நீண்ட இடைவெளிக்கு பிறகு ஆல்யாவை பார்த்ததில் ரசிகர்கள் செம்ம ஹாப்பி.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Alya Manasa, TV Serial, Vijay tv