Home /News /entertainment /

மகனுக்காக பிரியாணி விருந்து போட்ட ஆல்யா - சஞ்சீவ் ஜோடி!

மகனுக்காக பிரியாணி விருந்து போட்ட ஆல்யா - சஞ்சீவ் ஜோடி!

ஆல்யா - சஞ்சீவ்

ஆல்யா - சஞ்சீவ்

பிரியாணி விருந்து போட்டு சஞ்சீவ் தனது மகனின் முதல் மொட்டையை சிறப்பாக கொண்டாடி முடித்துள்ளார்.

    ஆல்யா மானசா - சஞ்சீவ் வீட்டில் அடுத்த விசேஷம் களைக்கட்டியுள்ளது. பிரியாணி வைத்து விருந்து போட்ட வீடியோவை ஆல்யா - சஞ்சீவ் ஜோடி யூடியூப்பில் வெளியிட்டுள்ளனர்.

    சின்னத்திரை பிரபலமான ஆல்யா - சஞ்சீவ் ஜோடி தனியாக யூடியூப் சேனல் தொடங்கி அதில் வீடியோக்கள் வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளனர். கொரோனா லாக்டவுனில் யூடியூப் சேனல் தொடங்கிய இவர்கள் கார் வாங்கியதில் இருந்து, ஐலா பிறந்த நாள், ஆல்யா வளைக்காப்பு, அர்ஷ் பிறந்தது என அனைத்து நிகழ்வுகளையும் வீடியோவாக வெளியிட்டு உள்ளனர். இவர்கள்  வெளியிடும் வீடியோக்கள் மில்லியன் கணக்கில் வியூஸ்களை பெறுகின்றன. அதுமட்டுமில்லை இந்த வீடியோவில் சஞ்சீவின் மொத்த குடும்பமும் என்ட்ரி கொடுக்கிறார்கள். அவர்களை பார்ப்பதற்கே தனி கூட்டம் இணையத்தில் உள்ளது.

    காற்றுக்கென்ன வேலி சீரியலில் இப்படியொரு ட்விஸ்டா!

    அந்த வகையில் கடைசியாக ஆல்யாவின் பிறந்த நாள் வீடியோ வெளியாகியிருந்த நிலையில் தற்போது அர்ஷ்-க்கு மொட்டை அடிக்கும் நிகழ்வை சஞ்சீவ் வீடியோவாக வெளியிட்டுள்ளார். ஆல்யா - சஞ்சீவ் ஜோடிக்கு 3 மாதங்களுக்கு முன்பு தான் ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு அர்ஷ் என்று பெயர் வைத்துள்ளனர். இந்நிலையில், அர்ஷூக்கு முறைப்படி மொட்டை அடிக்கும் விழாவை இருவரும் சிறப்பாக செய்து முடித்துள்ளனர்.



    மொத்த குடும்பத்தையும் வீட்டுக்கு வரவழைத்து  பிரியாணி விருந்து போட்டு சஞ்சீவ் தனது மகனின் முதல் மொட்டையை சிறப்பாக கொண்டாடி முடித்துள்ளார். இந்த வீடியோவில் ஆல்யா, சஞ்சீவ், அவரின் அக்கா தங்கைகள், அம்மா, அண்ணன் என மொத்த குடும்பமும் இடம் பெற்றுள்ளனர். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் ஆல்யா - சஞ்சீவ் ஜோடிக்கு தங்களது வாழ்த்துக்களை ஷேர் செய்து வருகின்றனர். அதுமட்டுமில்லை இந்த  வீடியோ வெளியான  4 நாட்களில் மில்லியன் கணக்கில் பார்வையாளர்களை பெற்றுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sreeja
    First published:

    Tags: Alya Manasa, Vijay tv

    அடுத்த செய்தி