Home /News /entertainment /

ஆல்யா மானசா கர்ப்பம் தான்.. அதுக்காக ராஜா ராணி சீரியலே இப்படி மாத்திடுவீங்களா?

ஆல்யா மானசா கர்ப்பம் தான்.. அதுக்காக ராஜா ராணி சீரியலே இப்படி மாத்திடுவீங்களா?

ஆல்யா மானசா

ஆல்யா மானசா

ஆல்யா கர்ப்பமாக இருப்பது உறுதியானது முதல் அடுத்த சர்ச்சை அவரை துரத்த ஆரம்பித்தது. கர்ப்பமாக இருப்பதால் சிரியலில் தொடர முடியாது.

    ஆல்யா மானசா கர்ப்பமாக இருப்பது எற்கெனவே உறுதியான நிலையில் தற்போது ஆல்யா நடிக்கும் சீரியலான ராஜா ராணி 2வில் என்ன மாற்றம் நிகழ போகிறது? என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

    விஜய் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஓடிய சீரியல்களில் ஒன்று தான் ராஜா ராணி. இந்த சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் தான் நடிகை ஆல்யா மானசா. இவரை பற்றிய அறிமுகமே சின்னத்திரை ரசிகர்களுக்கு தேவைப்படாது.
    17 வயதில் மாடலாக தனது வாழ்க்கை பயணத்த தொடங்கிய மானசா இன்று அடைந்திருக்கும் புகழ் மிகப் பெரியது.
    ராஜா ராணி தொடரில் நடிப்பதற்கு முன்பாகவே ஆல்யா மானசா கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘மானாட மயிலாட’ நடன நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கு பெற்றுள்ளார்.

    அதன் பின்பு தான் அவருக்கு விஜய் டிவியில் ராஜா ராணி சீரியல் வாய்ப்பு கிடைத்தது.அந்த சீரியலில் தனக்கு ஜோடியாக நடித்து வந்த சஞ்சீவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.திருமணத்திற்கு பிறகு கர்ப்பமானதால் சீரியல், சின்னத்திரையில்  இருந்து விலகினார். குழந்தை பெற்று 6 மாதம் ஆன நிலையில் மீண்டும் கம்பேக் கொடுத்தார். ராஜா ராணி 2 சிரியலில் லீட் ரோலில் நடிக்க ஒப்பந்தம் ஆனார். இவருக்கு ஜோடியாக சித்து நடித்து வருகிறார். இந்த சீரியலின் இயக்குனர் பிரவீன்..

    ஆரம்பத்தில் இந்த சீரியல் பல்வேறு விமர்சனங்களை சந்தித்தது. அதன் பிறகு சந்தியாவாக, ஆல்யாவின் நடிப்பு ரசிகர்களை கவர வழக்கம் போல் சீரியல் நல்ல ரேட்டிங்கில் பயணிக்க தொடங்கியது. இந்த சீரியலின் மிகப் பெரிய பலமே ஆல்யா மானசா எனலாம். இந்நிலையில் தற்போது ஆல்யா இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருக்கிறார். இந்த தகவலை அவரே உறுதி செய்தார். 4 மாதம் கர்ப்பம், ஹாஸ்பிடல் செக்கப் என்ற தனி வீடியோ விலாகையும் அண்மையில் வெளியிட்டு இருந்தார். ஆல்யா கர்ப்பமாக இருப்பது உறுதியானது முதல் அடுத்த சர்ச்சை அவரை துரத்த ஆரம்பித்தது. கர்ப்பமாக இருப்பதால் சீரியலில் தொடர முடியாது, அப்ப சீரியலில் இருந்து ஆல்யா மானசா விலகுகிறாரா? யார் அடுத்த சந்தியா? என ஏகப்பட்ட கேள்விகள் எழுந்தன.



    இவை அனைத்திற்கும் பதில் சொல்லும் விதமாக ஆல்யா வீடியோவில் விளக்கமும் அளித்துள்ளார். அதாவது, ஆல்யா கர்ப்பமாக இருப்பதால் ராஜா ராண் 2 சீரியலில் கதைகளத்தில் வேறு மாற்றம் கொண்டு வரலாம் ஆனால் ஆல்யாவுக்கு பதில் வேறு ஒருவர் இல்லை என இயக்குனர் கூறியதாக நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். கதைப்படி சிரியலில் ஆல்யாவுக்கு ஐ.பி.எஸ் ஆக வேண்டும் என்பது தான் கனவு. அடிக்கடி சண்டை காட்சிகளில் கூட ஈடுபடுவார். இதை எல்லாம் தவிர்த்து சீரியலில் வேறு கோணத்தில் கொண்டு போகலாம் கவலை வேண்டாம் என ஆல்யாவிடம் இயக்குனர் கூறியிருக்கிறராம்.

    ஆல்யாவுக்காக கதை எல்லாம் மாற்றுவது ஓகே தான். அப்ப இத்தனை நாள் இதுதான் கதைன்னு பார்த்த ரசிகர்களை பற்றி சீரியல் குழு யோசிக்கவில்லையா?



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja Sreeja
    First published:

    Tags: Vijay tv

    அடுத்த செய்தி