தான் ராஜா ராணி சீரியலில் மீண்டும் ரீ-எண்ட்ரி ஆகப்போறது இல்லை என்றும், சந்தியா கதாபாத்திரத்தில் புது நடிகை ரியாவே தொடர்ந்து நடிப்பார் என்றும் தெரிவித்துள்ளார் நடிகை ஆல்யா மானசா.
விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி 2 சீரியலில் சந்தியாவாக நடித்து வந்தவர் ஆல்யா மானசா. அடிப்படையில் டான்சரான ஆல்யா, ராஜா ராணி முதல் பாகத்தில் நடிகையாக அறிமுகமானார். செம்பா என்ற கதாப்பாத்திரத்தில் நடித்திருந்த அவர், தன்னுடன் நடித்த சஞ்சீவை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார்.
பின்னர் இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்தது. ஆல்யாவும் சஞ்சீவும் தங்கள் மகளுக்கு அய்லா சையத் எனப் பெயரிட்டனர். குழந்தை பிறந்து சிறிது இடைவெளி எடுத்துக் கொண்ட ஆல்யா, பின்னர் விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி 2 சீரியலில் ஒப்பந்தமானார். காற்றின் மொழி சீரியலில் நடித்து வந்த சஞ்சீவ், அந்த சீரியல் முடிந்துவிடவே சன் டிவி-யில் ’கயல்’ என்ற சீரியலில் நடித்து வருகிறார்.
Thalapathy Vijay: நீண்ட இடைவெளிக்குப் பிறகு டிவி-யில் தோன்றும் விஜய்... எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!
இதற்கிடையே மீண்டும் கர்ப்பமானார் ஆல்யா. ஆனாலும் கடந்த வாரம் வரை தொடர்ந்து ராஜா ராணி 2 சீரியலில் சந்தியாவாக நடித்தார் ஆல்யா. பின்னர் பிரசவ தேதி நெருங்கியதைத் தொடர்ந்து சீரியலில் இருந்து விலகினார். இதனால் தற்போது சந்தியா கதாபாத்திரத்தில் ரியா என்பவர் நடித்து வருகிறார். இதையடுத்து ராஜா ராணி 2 சீரியலில் இருந்து ஆல்யா மானசா தற்காலிகமாக விலகியதாகவும், சிறிது இடைவெளிக்குப் பிறகு மீண்டும் அவர் ரீ-எண்ட்ரி கொடுப்பார் எனவும் கூறப்பட்டது.

ஆல்யா மானசா பதில்
விஜய்யை விட நான் பெரிய நடிகன் இல்லை - வியக்க வைத்த கே.ஜி.எஃப் 2 யாஷ்!
தற்போது இதற்கு விளக்கமளித்துள்ளார் ஆல்யா மானசா. இன்ஸ்டாகிராமில் ரசிகர்களுடன் உரையாடிய அவரிடம், ரசிகர் ஒருவர், ‘எப்போது ராஜா ராணி 2 சீரியலுக்கு திரும்பி வருவீர்கள்? உங்களை ரொம்ப மிஸ் பண்றோம்’ என்று கேட்டிருந்தார். அதற்கு பதிலளித்த ஆல்யா மனசா, ’நான் திரும்பவும் ராஜா ராணி 2-ல் ரீ எண்ட்ரி ஆகப்போவதில்லை. சந்தியா கதாபாத்திரத்தில் புதிய ஹீரோயினே தொடர்ந்து நடிப்பார்’ எனத் தெரிவித்துள்ளார். இதையறிந்த ஆல்யா ரசிகர்கள் தற்போது வருத்தத்தில் ஆழ்ந்துள்ளனர்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.