விஜய் தொலைக்காட்சியில் ஏராளமான சீரியல்கள் ஒளிபரப்பாகி வந்தாலும் 2018ம் ஆண்டு முதல் இன்று வரை ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’. மற்ற தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் குடும்பத்தை பிரிப்பது, கணவன் - மனைவி உறவை கலைப்பது போன்ற வழக்கமான விஷயங்கள் இல்லாமல், 4 அண்ணன் - தம்பிகளையும் அவர்களது கூட்டு குடும்பத்தை பற்றியும் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த தொடரில் ஸ்டாலின், சுஜிதா, குமரன் தங்கராஜன், வெங்கட் ரங்கநாதன், காவ்யா, ஹேமா ராஜ்குமார், சரவணன் விக்ரம் மற்றும் பலரும் நடித்து வருகின்றனர்.
மளிகை கடை நடத்தி வரும் அண்ணன் - தம்பிகள் 4 பேரும் ஒற்றுமையாக வாழ்வதை காதல், பாசம், அன்பு, நேசம் மற்றும் சின்ன சின்ன சண்டைகளுடன் ‘குடும்பம் என்றால் இப்படி இருக்கனும்’ என ரசிகர்கள் புகழும் அளவிற்கு பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. குடும்பத்தில் மீனா, கண்ணன் ஆகியோரால் பிரச்னைகள் வெடித்து வந்த நிலையில், தற்போது முல்லை பற்றிய விறுவிறுப்பான, திருப்பங்கள் நிறைந்த காட்சிகள் ஒளிபரப்பாகி வருகின்றன.
பாண்டியன் ஸ்டோர்ஸ் வீட்டில் மூத்த மருமகள் தனம் பல ஆண்டுகளாக குழந்தை இல்லாமல் இருந்து தற்போது தாயாகியுள்ளார். இரண்டாவது மருமகள் மீனாவிற்கும் அழகிய பெண்குழந்தை பிறந்துவிட்டது. ஆனால் முல்லை - கதிர் ஜோடிக்கு மட்டும் குழந்தை பிறக்காதது குடும்பத்தினரை வாட்டிவதைத்தது. அப்போது தான் முல்லையை மருத்துவரிடம் பரிசோதித்த போது அவருக்கு குழந்தையே பிறக்காது என்ற உண்மை தெரியவருகிறது. இதனால் ஒட்டுமொத்த குடும்பமும் நொறுக்கிப் போனது.
இருப்பினும் மூத்த அண்ணனின் அறிவுரைப்படி லட்சக்கணக்கில் செலவழித்து முல்லைக்கு குழந்தை பிறப்பதற்காக சிகிச்சை பார்க்கிறார்கள். ஆனால் அதுவும் தற்போது தோல்வியை தழுவியுள்ளது. அடுத்தது முல்லை - கதிர் தம்பதி என்ன செய்யப்போகிறார்கள். ஏற்கனவே மனமுடைந்து போன முல்லை என்ன மாதிரியான முடிவெடுப்பார் என விறுவிறுப்பாக சீரியல் சென்றுகொண்டிருக்கிறது.
Also Read : ''தமிழ் சினிமாவில் 2 டான்கள் உள்ளனர்'' - உதயநிதி ஸ்டாலின் பேச்சு
இந்நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் ரசிகர்கள் தலையில் இடியை இறக்கியது போல், அதிர்ச்சியான தகவல் ஒன்று கசித்துள்ளது. அதாவது பாண்டியன் ஸ்டோர்ஸில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வரும் காவ்யா விரைவில் சீரியலை விட்டு விலக உள்ளதாக கூறப்படுகிறது. காவ்யாவிற்கு சினிமா வாய்ப்புகள் அதிகரித்து வருவதால், அவர் சீரியலை விட்டு விலக முடிவெடுத்துள்ளதாக சோசியல் மீடியாக்களில் தகவல் பரவி வருகிறது.
இதற்கு முன்னதாக முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வந்த சித்ரா திடீரென மரணமடைந்ததை அடுத்து, அவருக்கு பதிலாக காவ்யாவை சீரியல் டீம் நடிக்க வைத்தனர். ஆரம்பத்தில் சித்ராவுக்கு பதிலாக காவ்யாவை ஏற்க மறுத்த ரசிகர்கள் பலவாறாக விமர்சித்தனர். ஆனால் போகப் போக காவ்யாவின் நடிப்பு பிடித்துப் போக அவரை முல்லையாக ஏற்றுக்கொண்டனர். இந்நிலையில் திடீரென காவ்யா சீரியலை விட்டு விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
Also Read : கோட் சூட்டில் கலக்கும் சாணி காயிதம் நடிகை கீர்த்தி சுரேஷ் - வைரல் போட்டோஸ்
மேலும் காவ்யாவிற்கு பதிலாக முல்லை கதாபாத்திரத்தில் ஆல்யா மானசா நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஏனெனில் இரண்டாவது முறையாக குழந்தை பெற்ற ஆல்யா மானசா, மீண்டும் ‘ராஜா ராணி சீசன் 2’ சீரியலுக்கு வரப்போவதில்லை என அறிவித்திருந்தார். இதையெல்லாம் கணக்கு போட்டு, ஆல்யா தான் அடுத்த முல்லை என்ற கணிப்புகளும் உலவி வருகிறது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.