முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / அந்த கேள்விக்கு கடைசி வரை பதில் சொல்லாமல் எஸ்கேப் ஆன ஆல்யா - சஞ்சீவ்

அந்த கேள்விக்கு கடைசி வரை பதில் சொல்லாமல் எஸ்கேப் ஆன ஆல்யா - சஞ்சீவ்

ஆல்யா - சஞ்சீவ்

ஆல்யா - சஞ்சீவ்

ஆல்யா - சஞ்சீவ் ஜோடி , டிஜிட்டல் மூலம் ஏகப்பட்ட ரசிகர்களை சொந்தமாக்கியுள்ளனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

ரசிகர்கள் தொடர்ந்து கேட்ட கேள்விக்கு கடைசி வரை பதில் சொல்லாமல் சாமர்த்தியமாக எஸ்கேப் ஆகிவிட்டனர் சின்னத்திரை ஜோடி ஆல்யா - சஞ்சீவ்.

சின்னத்திரையின் டாப் ஜோடிகளான ஆல்யா - சஞ்சீவ் யூடியூப்பில் வேற லெவலில் கலக்கி கொண்டிருக்கின்றனர். சீரியல்கள் மூலம் இவர்களுக்கு கிடைத்த ரசிகர்கள் ஒரு பக்கம் இருந்தாலும், டிஜிட்டல் மூலம் ஏகப்பட்ட ரசிகர்களை இருவரும் சொந்தமாக்கியுள்ளனர். அதற்கு காரணம் யூடியூப்பில் இவர்கள் வெளியிடும் வீடியோக்கள். ஆல்யா 2வது குழந்தைக்காக சீரியலை விட்டு விலகிவிட்டார். ஆனால் அவரின் யூடியூப் சேனலில் அவரை  ரசிகர்கள் தொடர்ந்து பார்க்கலாம்.

கணவன் - மனைவி இனி ஒரே சேனலில்... ஷபானா - ஆர்யன் ஃபேன்ஸ் பயங்கர ஹேப்பி!

அதே போல் சஞ்சீவ் கயல் சீரியலில் தொடர்ந்து பிசியாக நடித்து வந்தாலும் தவறாமல்  யூடியூபில் வித்தியாசமான வீடியோக்களை வெளியிட்டு லைக்ஸ் பார்த்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் இவர் தனது மகன் அர்ஷ் முகத்தை முதன்முறையாக ரசிகர்களுக்கு காட்டியுள்ளார். ஆல்யா - சஞ்சீவ் யூடியூப் சேனலில் அர்ஷ் என்ட்ரி கொடுக்கும் முதல் தருணத்தை அப்படியே வீடியோவாக மாற்றி அதை யூடியூப்பில் வெளியிட்டுள்ளார்.

டெலிகாஸ்ட் ஆன கொஞ்ச நாளிலே ‘சிப்பிக்குள் முத்து’ சீரியலுக்கு இப்படியொரு சோதனையா!

வெறும் வீடியோ மட்டுமில்லை கூடவே ரசிகர்களுக்கு ஒரு முக்கியமான விஷயத்தையும் தெளிவுப்படுத்தியுள்ளார். அதாவது ஆல்யாவுக்கு 2 வது குழந்தை பிறந்ததில் இருந்து குழந்தை யாரை போல் இருக்கிறது? என ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தனர். இன்ஸ்டா, யூடியூப் என எந்த பக்கம் திரும்பினாலும் அர்ஷ் குறித்த கேள்வி தான். இதற்கு கடைசி வரை இந்த தம்பதி பதில் சொல்லவில்லை.

' isDesktop="true" id="765320" youtubeid="sglg-zyOjC0" category="television">

அதற்கு பதிலாக தற்போது அர்ஷ் வீடியோவை வெளியிட்டு, குழந்தை யாரை போல் இருக்கிறது என ரசிகர்களை கண்டுப்பிடித்து அதை கமெண்ட் பாக்ஸில் பதிவு செய்ய சொல்லியுள்ளனர். ஆல்யா, சஞ்சீவ், சஞ்சீவின் அம்மா, ஐலா பாப்பா என இவர்களில் யாரை போல் அர்ஷ் இருக்கிறான் என சஞ்சீவ் - ஆல்யா ஜோடி அந்த வீடியோவில் ரசிகர்களிடம் கேட்டுள்ளனர். இதற்கு பெரும்பாலான ரசிகர்கள் அச்சு அசல் 2 குழந்தையும் சஞ்சீவ் போல தான் என பதிலும் கூறியுள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Alya Manasa, Vijay tv, Youtube