Home /News /entertainment /

இன்னும் 2 மாதத்தில் சீரியலில் நடிக்க வரும் ஆல்யா.. எந்த சேனலில் தெரியுமா?

இன்னும் 2 மாதத்தில் சீரியலில் நடிக்க வரும் ஆல்யா.. எந்த சேனலில் தெரியுமா?

ஆல்யா

ஆல்யா

”சஞ்சீவ் இப்போது சன் டிவியில் நடிப்பதால் நீங்கள் எந்த சேனலில் கம்பேக் கொடுக்க இருக்கிறீர்கள்? ”

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    இன்னும் 2 மாதத்தில் சின்னத்திரை சீரியலில் ஆல்யா என்ட்ரி கொடுக்கிறார். இந்த தகவலை அவரே உறுதி செய்துள்ளார்.

    ஆல்யா மானசா ரீ என்ட்ரி கொடுத்த பேச்சுக்கள் ராஜா ராணி 500வது எபிசோடு கொண்டாட்டத்தின் போதே தொடங்கி விட்டது. அதுமட்டுமில்லாமல் ஆல்யா - சஞ்சீவ் நடத்தும் யூடியூப் சேனலில் இதுப் பற்றி ஆல்யா பேசி இருந்தார். இதனால் ஆல்யா ரசிகர்கள் செம்ம ஹேப்பியில் உள்ளனர். ஆல்யாவுக்கு ஐலா, அர்ஷ் என 2 குழந்தைகள். இவர்களை கவனித்துக் கொள்ளவே நேரம் சரியாக இருக்கும் என்பதால் ஆல்யா நடிக்க வரமாட்டார் என்று தான் ரசிகர்கள் கூறி வந்தனர். ஆனால் தான் கம்பேக் கொடுப்பது உறுதி என ஆல்யா கூறிவிட்டார்.

    வருண் - சக்தியை பிரிக்க வரும் வில்லன்.. இனி மெளன ராகத்தில் இவர் ஆட்டம் தான்!

    அதுமட்டுமில்லை உடல் எடையை குறைக்கும் பயிற்சியிலும் ஆல்யா இறங்கி விட்டார். இப்படி இருக்கையில் ஆல்யா -சஞ்சீவ் யூடியூப் சேனலில் மற்றொரு வீடியோ வெளீயாகியுள்ளது. இதில் ஆல்யா மாடிக்கு சென்று  டான்ஸ் மூலம் வெயிட் லாஸ் செய்கிறார். அதன் பின்பு ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளிக்கிறார். அதாவது யூடியூப்பில் ரசிகர்கள் கேட்ட கேள்வியை ஆல்யாவிடம், சஞ்சீவ் கேட்க அதற்கு பதில் சொன்னார் ஆல்யா.



    அப்போது ரசிகர் ஒருவர் சஞ்சீவ் இப்போது சன் டிவியில் நடிப்பதால் நீங்கள் எந்த சேனலில் கம்பேக் கொடுக்க இருக்கிறீர்கள்? என கேட்டார். அதற்கு சிரித்தப்படியே ஆல்யா 4 கதை கேட்டு இருக்கிறேன். அதில் 2 கதை எனக்கு பிடித்து இருக்கு. எந்த சேனலுன்னு இன்னும் கொஞ்ச நாளில் தெரிந்து விடும். ஆனால் கண்டிப்பாக நீங்கள் சந்தோஷப்படும் படியான ரோலில் ,சேனலில் தான் நடிப்பேன் என்று கூறியுள்ளார். அதே போல் இன்னும் 2 மாதத்தில் சீரியலில் பார்க்கலாம் எனவும் ஆல்யா கூறியுள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sreeja
    First published:

    Tags: Sun TV, TV Serial, Vijay tv

    அடுத்த செய்தி