Home /News /entertainment /

உடல் எடையை குறைத்து கம்பேக் கொடுக்க போகும் ஆல்யா! அவருடன் நடிக்க தான் ஆசையாம்

உடல் எடையை குறைத்து கம்பேக் கொடுக்க போகும் ஆல்யா! அவருடன் நடிக்க தான் ஆசையாம்

ஆல்யா மானசா

ஆல்யா மானசா

ஆல்யா இன்னும் சில மாதம் கழித்து  ரீ என்ட்ரி கொடுப்பார்

    சின்னத்திரை நடிகை ஆல்யா மானசா உடல் உடையை குறைத்து நிச்சயம் சீரியலில் என்ட்ரி கொடுப்பார் என்பது தற்போது உறுதியாகியுள்ளது. ஆல்யாவிடம் அவரின் கணவர் சஞ்சீவ் இதுக் குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு ஆல்யா தெளிவான பதிலையும் வழங்கியுள்ளார்.

    ஆல்யா மானசா , சஞ்சீவ் நடித்த ராஜா ராணி சீரியல் விஜய் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஓடிய சீரியல்களில் ஒன்று .
    இந்த சீரியல் மூலம் சின்னத்திரையில் நடிகையாக  அறிமுகமானர் ஆல்யா மானசா. அதற்கு முன்பு கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘மானாட மயிலாட’ நடன நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கு பெற்றுள்ளார். ராஜா ராணி சீரியலில் ஜோடியாக நடித்து வந்த சஞ்சீவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு கர்ப்பமானதால் சீரியல், சின்னத்திரையில் இருந்து விலகினார். பின்னர், குழந்தை பெற்று 6 மாதம் ஆன நிலையில் மீண்டும் கம்பேக் கொடுத்தார். ராஜா ராணி 2 சீரியலில் லீட் ரோலில் நடிக்க ஒப்பந்தம் ஆனார். இவருக்கு ஜோடியாக சித்து நடித்தார்.



    சீரியல் டி.ஆர்.யில் கலக்கி கொண்டிருந்த சமயத்தில் ஆல்யா 2வது முறையாக கர்ப்பமாக இருப்பதாக கூறினார். அதனைத் தொடர்ந்து 9 வது மாதம் சீரியலை விட்டும் விலகினார். ஆரம்பத்தில் ஆல்யா பிரசவத்திற்கு பின்பு பாரதி கண்ணம்மா வெண்பா போல் நடிக்க வந்து விடுவார் என்று தான் ரசிகர்கள் நினைத்தனர். ஆனால் பிறகு ஆல்யா நிரந்தரமாக சீரியலில் இருந்து விலகி விட்டார். இப்போது அவர் ரோலில் ராஜா ராணி 2 சீரியலில் ரியா நடித்து வருகிறார்.

    ஆல்யாவுக்கு 2வது குழந்தை பிறந்து 4 மாதம் ஆகிவிட்ட நிலையில் ரசிகர்கள் பலரும் அவரின் ரீ என்ட்ரிக்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். ராஜா ராணி முதல் பாகத்தை போலவே ராஜா ராணி 2வும் சூப்பர் டூப்பர் ஹிட் அடிக்க முக்கியமான காரணம் ஆல்யா மானசா. ஏகப்பட்ட ரசிகர்களை சம்பாதித்து வைத்திருக்கும் ஆல்யா தற்போது குடும்பம், குழந்தைகள், கணவருடன் நேரத்தை செலவழித்து வருகிறார். ஆனால் ஆல்யா - சஞ்சீவ் யூடியூப் சேனலில் மட்டும் ஆல்யாவை தினமும் ரசிகர்கள் பார்க்கலாம். இப்படி இருக்கையில் 2வது குழந்தைக்கு பிறகு உடல் எடை கூடி மதர்வுட் டைமை என்ஜாய் செய்துக் கொண்டிருக்கும் ஆல்யாவிடம் அவரின் கணவர் சஞ்சீவ் ரீஎன் ட்ரி பற்றி  கேட்கிறார்.



    இதற்கு பதில் அளிக்கும் ஆல்யா, “ சீரியலில் நடிக்க சென்று விட்டால் கட்டாயம் டயட் இருக்க வேண்டும், சரியாக சாப்பிட்ட முடியாது. எனவே இன்னும் கொஞ்சம் நாள் நல்லா சாப்பிட்டு ஆரோக்கியமாக மாறிய பின்பு உடல் எடையை குறைத்து என்ட்ரி கொடுப்பேன்” என்கிறார். உடனே சஞ்சீவ், உனக்கு யாருடன் நடிக்க ஆசை என கேட்க, உங்களுடன் தான் என்று சஞ்சீவை கை காட்டுகிறார். ஆனால் நான் எப்படி அந்த சீரியலை விட்டு வர முடியும் என்கிறார் சஞ்சீவ். உடனே ஆல்யா உங்களுடன் தான் நடிப்பேன் என்று  இல்லை நடிக்க ஆசை என்று தான் கூறினேன் என  கூறி கடைசியாக ரசிகர்களுக்கு குட் நியூஸ் சொல்கிறார்.

    கண்டிப்பாக ஆல்யா சின்னத்திரையில் இன்னும் சில மாதம் கழித்து  ரீ என்ட்ரி கொடுப்பார் என்பது அவரின் பதில் மூலம் ரசிகர்களுக்கு தெரிய வந்துள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sreeja
    First published:

    Tags: Alya Manasa, Television, TV Serial, Vijay tv

    அடுத்த செய்தி