Home /News /entertainment /

ஆல்யா ரொம்ப ரொம்ப லக்கி...புகழ்ந்து தள்ளும் ரசிகர்கள் கூட்டம்! என்ன விஷயம்?

ஆல்யா ரொம்ப ரொம்ப லக்கி...புகழ்ந்து தள்ளும் ரசிகர்கள் கூட்டம்! என்ன விஷயம்?

ஆல்யா மானசா

ஆல்யா மானசா

ஆல்யாவுக்கு துணையாக நிற்கும் சஞ்சீவ் மற்றும் சஞ்சீவின் அம்மாவை ரசிகர்கள் புகழ்ந்து தள்ளுகின்றனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    ஆல்யா மானசாவின் யூடியூப் சேனலில் சீரியல் என்ட்ரிக்காக ஆல்யா உடற்பயிற்சி செய்து உடல் எடையை கடுமையாக குறைக்கும் வீடியோ வெளியாகியுள்ளது. இந்த வீடியோவில் ஆல்யாவின் கடுமையான முயற்சி ஆச்சரியத்தை தந்தாலும் ஆல்யாவுக்கு இது சாத்தியமாக காரணமே அவரின் கணவர் சஞ்சீவ் மற்றும் அவரின் மாமியார் தான் என ரசிகர்கள் கூறி வருகின்றனர். அந்த விஷயத்தில் ஆல்யா ரொம்ப ரொம்ப லக்கி என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

    ஆல்யா - சஞ்சீவின் காதல் கதை சின்னத்திரையில் இருக்கும் அனைவருக்கும் தெரியும். ராஜா ராணி சீரியலில் தொடங்கிய இவர்களின் காதல் கல்யாணத்தில் முடிந்தது. இப்போது இந்த ஜோடிக்கு ஐலா - அர்ஷ் என 2 குழந்தைகள் உள்ளனர். முதல் குழந்தை பிறந்த உடனே ஆல்யா சீரியலில் இருந்து பிரேக் எடுத்தார். 6 மாதம் தீவிர உடற்பயிற்சிக்கு பின்பு மீண்டும் சீரியலில் என்ட்ரி கொடுத்தார். ராஜா ராணி2 வில் ஆல்யா லீட் ரோலில் நடித்தார்.

    பிரபல சீரியல் நடிகருக்கு ஒரே நேரத்தில் நடந்த சோகம்! ரசிகர்களும் ரொம்ப மிஸ் பண்ணுவாங்க!

    பின்பு அவருக்கு 2வது குழந்தை பிறக்க சீரியலில் இருந்து விலகினார். தற்போதைக்கு ஆல்யா சின்னத்திரையில் எந்த சீரியலிலும் நடிக்கவில்லை. ஆனால் கூடிய விரைவில் அவர் ரீஎன்ட்ரி கொடுக்க இருக்கிறார். அதுவும் சன் டிவியில் அவர் நடிகக் போவதாகவும் தகவல்கள் இணையத்தில் பரவி வருகின்றன. இப்படி இருக்கையில் தற்போது உடல் எடையை குறைக்கும் பணியில் ஆல்யா ஈடுப்பட்டுள்ளார்.


    15 நாட்களில் 5 கிலோ வரை எடையை குறைத்துள்ள ஆல்யாவின் ரகசியத்தை நீங்களே பாருங்கள் என அவரின் கணவர் சஞ்சீவ் வீடியோ  வெளியிட்டுள்ளார். ஆரம்பத்தில் ஆல்யாவுக்கு தெரியாமல் அவர் கடுமையாக வொர்க்கவுட் செய்யும் போது  சஞ்சீவ் அவரை வீடியோ எடுக்கிறார். பின்பு ஆல்யா கேமராவை பார்த்து விட அவருக்கு ஹாய் சொல்லிவிட்டு மீண்டும் வீடியோவை தொடர்கிறார். முறையான பயிற்சியாளர் மூலம் ஆல்யா உடற்பயிற்சி எடுக்கிறார்.

    alya manasa sanjeev youtube channel video , alya manasa, alya manasa insta, alya manasa son, alya manasadaughter, alya manasa husnabd, alya manasa sanjeev, alya manasa family, alya manasa lover, alya manasa marriage, alya manasa wedding, alya manasa youtube video, alya manasa youtube, alya manasa youtube vlog, alya manasa ail appa, alya manasa arsha, alya manasa mother in law, alya manasa dance, alya manasa reels, alya manasa dance video, alya manasa raja rani, alya manasaraja rani 2, alya manasa re entty, alya manasa, raja rani alya fans , alya sanjeev aila papa, ஆல்யா மானசா, ஆல்யா மானசா இன்ஸ்டா, ஆல்யா மானசா யூடியூப், ஆல்யா மானசா சஞ்சீவ், ஆல்யா மானசா இன்ஸ்டா, ஆல்யா மானசா வ்யூஇட்யூபொ வீடியோ, ஆல்யா மானசா சீரியல், ஆல்யா மானசா ராஜா ராணி , ராஜ அராணி, ராஜா ராணி 2, ராஜராணி 2 , சஞ்சீவ், ஐலா பாப்பா, சீரியல், விஜய் டிவி, டான்ஸ், ரீல்ஸ், இன்ஸ்டாகிராம்
    யூடியூப்பில் குவியும் கமெண்டுகள்


    இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் ஆல்யவை பாராட்டி உள்ளனர். அதே சமயம் அவருக்கு துணையாக நிற்கும் சஞ்சீவ் மற்றும் சஞ்சீவின் அம்மாவையும்  புகழ்ந்து தள்ளுகின்றனர். வெயிட் லாஸ் மட்டுமில்லை பெண் எடுக்கும் எல்லா முயற்சியிலும் குடும்பம் துணையாக நின்றால் அதுவே பாதி வெற்றிக்கு சமம், அந்த வகையில் ஆல்யா ரொம்ப ரொம்ப லக்கி என கமெண்டில் தெரிவித்து வருகின்றனர். ஆல்யாவின் வெயிட் லாஸ் தொடங்கி அவரின் ரீ என்ட்ரி என சஞ்சீவ் எல்லா நேரத்திலும் ஆல்யாவுக்கு துணையாக நிற்பது ரசிகர்களிடம் பாராட்டுக்களை பெற்றுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sreeja
    First published:

    Tags: Alya Manasa, TV Serial, Vijay tv

    அடுத்த செய்தி