Home /News /entertainment /

குழந்தை பிறந்த 2 மாதத்தில் ரசிகர்களை பொறாமைப்பட வைத்த ஆல்யா! என்ன செய்தார் தெரியுமா?

குழந்தை பிறந்த 2 மாதத்தில் ரசிகர்களை பொறாமைப்பட வைத்த ஆல்யா! என்ன செய்தார் தெரியுமா?

ஆல்யா மானசா

ஆல்யா மானசா

ஆல்யா நடிப்புக்கு பிரேக் விட்டுட்டு வீட்டில் குழந்தையுடன் நேரத்தை செலவழிக்கிறார்.

    விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியலின் மூலமாக பட்டி தொட்டியெல்லாம் பிரபலமானவர்கள் ஆல்யா மானசா மற்றும் சஞ்சீவ் ஜோடி. ராஜா ராணி சீரியலில் செம்பா என்ற ரோலில் நடித்து ரசிகர்களின் மனதில் ஆழமாக பதிந்தார் நடிகை ஆல்யா. அதே போல சஞ்சீவும். வெள்ளித்திரையில் இருந்து சின்னத்திரைக்கு வந்தவர் இப்போது சீரியலில்  நடித்துக் கொண்டிருக்கிறார். இவர்கள் இருவருக்கும் கடந்த 2019 ஆம் ஆண்டு திருமணம் நடைப்பெற்றது. பின்பு ஆல்யாவுக்கு ஐலா என்ற பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த பிறகு சீரியலில் இருந்து  ஆல்யா பிரேக் எடுத்தார்.

    ஆல்யா - சஞ்சீவ் இருவருக்கும் திருமணத்திற்கு பின்னும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர் . முதல் குழந்தைக்கு பிறகு ஆல்யா மானசா விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி 2 சீரியலில் கதாநாயகியாக ரீ எண்ட்ரி கொடுத்தார். ஆல்யாவை ரசிகர்கள் உற்சாகத்துடன் வரவேற்று மீண்டும் ஒரு வெற்றியை தந்தனர். சந்தியா ரோல் மூலம் மீண்டும் ஹிட் அடித்தார் ஆல்யா.
    ராஜா ராணி 2 சீரியலும் நல்ல ரேட்டிங்கில் சென்றுக் கொண்டிருந்தது.

    தொடங்குகிறது பிக் பாஸ் சீசன் 6.. ஆங்கர் யார் தெரியுமா?

    இதற்கிடையில் மீண்டும் இரண்டாவது முறை கர்ப்பமான ஆல்யா, சீரியலில் இருந்து விலகினார். அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு அர்ஷ் என்று பெயர் வைத்துள்ளனர். 2 குழந்தைகள், கணவர், மாமியார், கணவரின் குடும்பம் என நேரத்தை செலவழித்து வரும் ஆல்யா நடிப்புக்கு பிரேக் விட்டுட்டு வீட்டில் குழந்தையுடன் நேரத்தை செலவழிக்கிறார். அதே நேரம் யூடியூப்பில் மட்டும் ஆல்யாவை பார்க்க முடிகிறது. ஆல்யா - சஞ்சீவ் யூடியூப் சேனலில் தொடர்ந்து வீடியோவை வெளியிட்டு வருகிறார் ஆல்யா.

    அந்த வார்த்தை சொன்ன தாமரை.. கடுப்பானாரா ஆங்கர் பிரியங்கா? கொளுத்தி போடும் நெட்டிசன்கள்!

    இந்த யூடியூப் சேனலில் சமீபத்தில் வெளியாகி இருக்கும் வீடியோ தான் ரசிகர்களை பொறாமைப்பட வைத்துள்ளது. அதாவது ஆல்யா மானசா - சஞ்சீவ் ஜோடி குடும்பத்துடன் மே மாதம் வெக்கேஷனுக்காக பிளாக் தண்டர் என்ற தீம் பார்குக்கு சென்று இருக்கிறார்கள். ஆல்யாவும் கைக்குழந்தையுடன் சென்று இருக்கிறார். குழந்தை பிறந்து 2 மாதமே ஆன நிலையில் செம்ம ஜாலியாக ஆல்யா தண்னீரில் குதித்து விளையாடி பொழுதை கழித்து இருக்கிறார். அவருக்கு துணையாக அவரின் மாமியாரும் உடன் இருக்கிறார்.



    இதைப்பார்த்த பெண் ரசிகர்கள், ”ஆல்யா நீங்க ரொம்ப லக்கி, குழந்தை பிறந்த 2 மாதத்தில் எங்கள் வீட்டில் எல்லா வேகமாக கூட நடக்க விடமாட்டாங்க, ஆனா நீங்க தண்ணீல குதித்து குளிக்கும் அளவுக்கு உங்க ஃபேமலி சப்போர்ட் பண்றாங்க சோ ஸ்வீட் “ என்று கமெண்ட் செய்துள்ளனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sreeja
    First published:

    Tags: Alya Manasa, TV Serial, Vijay tv

    அடுத்த செய்தி