Home /News /entertainment /

விஜய் டிவி ஆல்யா மானசாவை வம்பிழுத்த நெட்டிசன்கள்.. அந்த இயக்குனர் தான் காரணமா?

விஜய் டிவி ஆல்யா மானசாவை வம்பிழுத்த நெட்டிசன்கள்.. அந்த இயக்குனர் தான் காரணமா?

ஆல்யா மானசா

ஆல்யா மானசா

ஆல்யா இரண்டாம் முறையாக கர்ப்பமாக இருக்கிறார். இதனால், அவர் ஷூட்டுக்கு லேட்டாக செல்ல வாய்ப்பிருக்கிறது என கமெண்ட் செய்திருந்தனர்

  விஜய் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஓடிய சீரியல்களில் ஒன்று தான் ராஜா ராணி. மேலும் அந்த சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் தான் நடிகை ஆல்யா மானசா. இவர் 17 வயதில் மாடலாக தனது வாழ்க்கை பயணத்தை தொடங்கினார். அதேபோல இவர் ஆர்.ஜேவாகவும் பணிபுரிந்துள்ளார். ராஜா ராணி தொடரில் நடிப்பதற்கு முன்பாகவே ஆல்யா மானசா கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘மானாட மயிலாட’ நடன நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கு பெற்றுள்ளார்.

  அதன்பின்னர் தான் இவருக்கு சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ராஜா ராணி சீரியலில் நடிக்க தொடங்கி சில மாதங்களில் இவர்களது காதல் முறிவடைந்ததாக கூறப்படுகிறது. அதன்பிறகு ராஜா ராணி சீரியலில் தனக்கு ஜோடியாக நடித்து வந்த சஞ்சீவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

  இவர்கள் இருவருக்கும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஐலா என்ற ஒரு பெண் குழந்தையும் பிறந்தது. சமூகவலைத்தள பக்கங்களில் ரொம்பவே ஆக்டிவாக இருக்கும் இந்த ஜோடி தற்போது ‘சஞ்ஜீவ் ஆல்யா’ என்ற யூடூப் சேனலை நடத்தி வருகின்றனர். கர்ப்பமாக இருந்த காலத்தில் சீரியலில் நடிப்பதிலிருந்து விலகியிருந்த ஆல்யா. குழந்தை பிறந்து ஒரு வருடம் கழித்து மீண்டும் சீரியலில் நடிக்க ஆரம்பித்தார்.

  தற்போது இவர் ராஜா ராணி-2 சீரியலில் நடித்து வருகிறார். இந்த சீரியல் முழுக்க முழுக்க கூட்டு குடும்ப கதையை மையமாக கொண்டது. இந்த சீரியலில் சரவணன் என்ற கதாபாத்திரத்தில் சித்து நடிக்கிறார். சந்தியா என்ற கதாபாத்திரத்தில் ஆல்யா நடித்து வருகிறார். முதல் சீசனில் கிடைத்த அதே வரவேற்பும், ஆதரவும் 2-ம் சீசனுக்கும் கிடைத்து வருகிறது. இந்த சீரியலின் முதல் பாகத்தை எடுத்த பிரவீன் பென்னட் தான் இரண்டாம் பாகத்தையும் இயக்கி வருகிறார்.

  இந்நிலையில் இயக்குனர் பிரவீன் இன்ஸ்டாவில் சமீபத்தில் ஒரு ரீல்ஸ் வீடியோவை பதிவிட்டுள்ளார். அதில் அவர் ‘நடிகர்கள் இன்னும் வரல, ரொம்ப போரடிக்குது. ரொம்ப லேட்டா வராங்க’ என்று பதிவிட்டிருந்தார். இந்த வீடியோ பெரிதும் வைரலாகி நெட்டிசன்களிடம் பல கமெண்ட்டுகளை பெற்றது. அதில் பலர் ஆல்யாவின் புகைப்படத்தை பதிவிட்டு, இயக்குனர் சொல்லும் நபர் இவராகத்தான் இருப்பார் என குறிப்பிட்டு வந்தனர்.

  இதையும் படிங்க.. டாப் கியரில் செல்லும் சன் டிவி சுந்தரி சீரியல்.. கதையில் அப்படி ஒரு ட்விஸ்ட்!

  தற்போது ஆல்யா இரண்டாம் முறையாக கர்ப்பமாக இருக்கிறார். இதனால், அவர் ஷூட்டுக்கு லேட்டாக செல்ல வாய்ப்பிருக்கிறது என கமெண்ட் செய்திருந்தனர்.இந்த கமெண்ட்டுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், ஆல்யாவின் கணவர் சஞ்சீவ் ஒரு பதிவினை வெளியிட்டுள்ளார். அதில், ”ஆல்யா ஒரு நாள் கூட சூட்டிங்கிற்க்கு தாமதமாக சென்றது இல்லை. நான் தான் தினமும் என் மனைவியை எழுப்பி விடுவேன். இருவரும் ஷூட்டிங்கிற்கு சரியான நேரத்திற்கு சென்றுவிடுவோம்.

  இதையும் படிங்க.. கனா காணும் காலங்கள்: ஆசைக்காட்டி கடைசியில் ரசிகர்களை ஏமாற்றிய விஜய் டிவி!

  ஷூட்டிங் தொடங்கிய நாளில் இருந்து இன்று வரையும் அவர் எப்போதும் லேட்டாக போனதில்லை. பிரவீன் சார் யாரை சொல்கிறார் என்பது தெரியலையே” என்று சிரிப்பு ஸ்மைலியுடன் பதிவிட்டிருந்தார். தற்போது இவரது போஸ்ட் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. கவனிக்க வேண்டிய மற்றொரு விஷயம் என்னவென்றால் இயக்குனர் பிரவீன் பென்னட் ராணி ராணி-2 சீரியலை மட்டும் எடுக்கவில்லை. மற்றொரு ஹிட் சீரியலான பாரதி கண்ணம்மா சீரியலையும் அவர்தான் இயக்குகிறார். எனவே, அவர் வேறு எந்த ஆர்ட்டிஸ்டை வேண்டுமானாலும் சொல்லியிருக்கலாம்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Sreeja
  First published:

  Tags: Alya Manasa, TV Serial, Vijay tv

  அடுத்த செய்தி