ஆல்யா மானசா வீட்டுக்கு வந்த புது வரவு... கண்ணுபடாமல் இருக்க சுத்தி போட சொல்லும் ரசிகர்கள்!

ஆல்யா மானசா

இந்த மகிழ்ச்சியான பதிவுக்கு ரசிகர்களும் வாழ்த்துகளையும், அன்புகளையும் தெரிவித்து வருகின்றனர்.

 • Share this:
  ஆடம்பரமான புதிய காரை வாங்கியுள்ள சஞ்சீவ் - ஆல்யா, தங்கள் வீட்டிற்கு ஒரு புதிய Beast வந்திருப்பதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.

  சின்னத்திரையில் ஆல்யா மானசா - சஞ்சீவ் ஜோடி நட்சத்திர தம்பதிகளாக உள்ளனர். பிரபல ஹீரோ மற்றும் ஹீரோயின் பட்டியலை எடுத்தால், அதில் நிச்சயம் இருவருக்கும் இடம் இருக்கும். சீரியலில் பிரபலமாக இருக்கும் இருவருக்கும் அண்மைக்காலமாக காரின் மீது அலாதி பிரியம் ஏற்பட்டுள்ளது. ஏனென்றால், கடந்த ஆண்டு மார்ச் மாதம், அதாவது மகள் ஐலா பிறப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு தான் ஆடம்பர காரான பென்ஸை வாங்கினர். பின்னர், மகள் பிறந்நாளுக்காக மற்றொரு காரை வாங்கியிருந்தனர்.

  அந்தவகையில் தற்போது மூன்றாவதாக கியா கார்னிவெல் (Kia Carnival) காரை வாங்கியுள்ளனர். இந்தக் காரின் விலை சுமார் 40 லட்சம் எனக் கூறப்படுகிறது. கார் வாங்கிய மகிழ்ச்சியை, இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ள இருவரும், தங்கள் வீட்டிற்கு புதிய Beast வந்திருப்பதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர். அவர்களின் இந்த மகிழ்ச்சியான பதிவுக்கு ரசிகர்களும் வாழ்த்துகளையும், அன்புகளையும் தெரிவித்து வருகின்றனர்.   
  Instagram இல் இந்த இடுகையை காட்டு

   

  sanjeev இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@sanjeev_karthick)


  விஜய் டீவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியலிலும் இருவரும் ஜோடியாக நடித்தனர். இதன் மூலம் சீரியலில் மிகவும் பாப்புலரான தம்பதிகளாக மாறினர். இவர்கள் இணைந்து நடிக்கும் காட்சிகள் அனைத்துக்கும் ரசிகர்ளிடையே ஏகோபித்த வரவேற்பு கிடைத்தது. விஜய் டீவியை பொறுத்தவரை மெஹா ஹிட் காதல் சீரியலாக சரவணன் - மீனாட்சி சீரியல் இருந்தது. அதன்பிறகு ஆபீஸ் தொடர் ஹிட்டானது. அதற்கு அடுத்தபடியாக, ஆல்யா - மானசா இணைந்து நடித்த ராஜா ராணி சீரியல் முத்திரை பதித்தது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  டி.ஆர்.பி ரேட்டிங்கிலும் மற்ற தொலைக்காட்சி தொடர்களுக்கு சவால் கொடுக்கும் வகையில் இருந்தநிலையில், சீரியலில் காதல் ஜோடிகளாக இருந்த ஆல்யாவும், சஞ்சீவும் நிஜத்திலும் காதலர்களாக மாறினர். பின்னர் 2019 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். சன் டீவியில் விரைவில் ஒளிபரப்பாக உள்ள கயல் என்ற புதிய சீரியலில் சஞ்சீவ் கதாநாயகனாக நடிக்க உள்ளார். அவருக்கு ஜோடியாக சைத்திரா ரெட்டி நடிக்கிறார். சஞ்சீவைப் பொறுத்தவரை காற்றின் மொழி தொடரில் சந்தோஷாக நடித்திருந்தார்.

  அந்த சீரியலில் அவருக்கு மிகப்பெரும் வரவேற்பு கிடைத்தது. மானாட மயிலாட ரியாலிட்டி ஷோவில் போட்டியாளராக கலந்து கொண்ட ஆல்யா, டான்சிங் சூப்பர் ஸ்டார் ஷோவுக்கு நடுவராகவும் இருந்தார். செம்பருத்தி சீரியலில் சஞ்சீவுக்கு ஜோடியாக நடித்ததுடன், தற்போது ராஜா ராணி 2 சீரியலில் லீட் ரோலில் நடித்து வருகிறார்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Sreeja Sreeja
  First published: