Home /News /entertainment /

ரசிகர்கள் எதிர்பார்த்த அந்த அறிவிப்பு.. மீண்டும் சேர்ந்து நடிக்கும் ஆல்யா - சஞ்சீவ்!

ரசிகர்கள் எதிர்பார்த்த அந்த அறிவிப்பு.. மீண்டும் சேர்ந்து நடிக்கும் ஆல்யா - சஞ்சீவ்!

ஆல்யா - சஞ்சீவ்

ஆல்யா - சஞ்சீவ்

இந்த தகவலை ஆல்யா தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    ==நீண்ட இடைவெளிக்கு பிறகு ஆல்யா - சஞ்சீவ் ஜோடி சேர்ந்து நடிக்கிறார்கள். இந்த தகவலை ஆல்யா இன்ஸ்டாகிராமில் உறுதிப்படுத்தியுள்ளார்.

    சின்னத்திரையின் டாப் ஜோடிகளான ஆல்யா - சஞ்சீவ் யூடியூப்பில் வேற லெவலில் கலக்கி கொண்டிருக்கின்றனர்.  எந்த சினிமா பின்புலமும் இல்லாமல் சின்னத்திரைக்குள் நுழைந்தவர் ஆல்யா மானசா. ராஜா ராணி சீரியலில் நடிக்கும் போதே அதில் ஹீரோவாக நடித்த சஞ்சீவை காதலித்து கரம் பிடித்தார். .இதையடுத்து, ஆல்யா கர்ப்பமானார். ஆல்யாவுக்கு பெண் குழந்தை பிறந்தது. இருவரும் தங்கள் குழந்தைக்கு அய்லா என்று பெயர் வைத்தனர். பின்பு மீண்டும் சின்னத்திரையில் ராஜா ராணி 2 மூலம் ஆல்யா ரீ என்ட்ரி கொடுத்தார். 1 வருடம் தொடர்ந்து பிசியாக நடித்து வந்தார். அதற்குள் இரண்டாவது குழந்தை பிறக்க தற்போது மொத்தமாக சின்னத்திரைக்கு பாய் சொல்லி விட்டார்.



    பாரதி கண்ணம்மா சீரியலில் மீண்டும் என்ட்ரி கொடுத்த நடிகை.. ரசிகர்கள் ஹேப்பி!

    மீண்டும் ஆல்யா சீரியலில் எப்போது நடிக்க வருவார்? என ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். சீரியல்கள் மூலம் ஆல்யா - சஞ்சீவ் ஜோடிக்கு  கிடைத்த ரசிகர்கள் ஒரு பக்கம் இருந்தாலும், டிஜிட்டல் மூலம் ஏகப்பட்ட ரசிகர்களை இருவரும் சொந்தமாக்கியுள்ளனர். அதற்கு காரணம் யூடியூப்பில் இவர்கள் வெளியிடும் வீடியோக்கள். சின்னத்திரையில் இருந்து ஆல்யா விலகிய பின்பு அவரின் யூடியூப் சேனலில் மட்டும் தான் ஆல்யாவை பார்க்க முடிந்தது. இந்த நேரத்தில் ராஜா ராணி 500வது எபிசோடு கொண்டாட்டத்தில் ஆல்யா ஸ்பெஷல் என்ட்ரி கொடுத்தார். இந்த நிகழ்ச்சி வரும் ஞாயிறன்று விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகவுள்ளது.

    2வது குழந்தைக்கு தாயாகும் விஜய் டிவி சீரியல் பிரபலம்!

    அதுமட்டுமில்லை ஆல்யாவின் ரீ என் ட்ரி கொடுத்த பேச்சுகளும் இணையத்தில் அவ்வப்போது வெளியாகி வருகின்றன. உடல் எடை குறைத்து என்ட்ரி கொடுப்பேன் என ஏற்கெனவே ஆல்யா தனது யூடியூப் சேனலில் கூறி இருந்தார். இந்நிலையில் ஆல்யா ரசிகர்களுக்கு மற்றொரு குட் நியூஸ்.



     




    View this post on Instagram





     

    A post shared by alya_manasa (@alya_manasa)






    ஆல்யாவும் அவரின் கணவர் சஞ்சீவும் சேர்ந்தும் விளம்பரம் ஒன்றில் ஜோடியாக நடித்துள்ளனர். இந்த தகவலை ஆல்யா தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ரசிகர்கள் அந்த விளம்பரத்திற்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். இதற்கு முன்பு சின்னத்திரை பாப்புலர் ஜோடியான ஆல்யா - சஞ்சீவ் ஆச்சி மசாலா, ஜவுளிக்கடை, துணிக்கடை என பல விளம்பரங்களில் நடித்து கலக்கியுள்ளனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sreeja
    First published:

    Tags: Alya Manasa, TV Serial, Vijay tv

    அடுத்த செய்தி