முன்பே சொன்னதைப் போல, தங்கள் மகனுக்கு அர்ஷ் எனப் பெயரிட்டுள்ளனர் ஆல்யா மானசா சஞ்சீவ் தம்பதி.
விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி 2 சீரியலில் சந்தியாவாக நடித்து வந்தவர் ஆல்யா மானசா. அடிப்படையில் டான்சரான ஆல்யா, ராஜா ராணி முதல் பாகத்தில் நடிகையாக அறிமுகமானார். செம்பா என்ற கதாப்பாத்திரத்தில் நடித்திருந்த அவர், தன்னுடன் நடித்த சஞ்சீவை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார்.
பின்னர் இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்தது. ஆல்யாவும் சஞ்சீவும் தங்கள் மகளுக்கு அய்லா சையத் எனப் பெயரிட்டனர். குழந்தை பிறந்து சிறிது இடைவெளி எடுத்துக் கொண்ட ஆல்யா, பின்னர் விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி 2 சீரியலில் ஒப்பந்தமானார். காற்றின் மொழி சீரியலில் நடித்து வந்த சஞ்சீவ், அந்த சீரியல் முடிந்துவிடவே சன் டிவி-யில் ’கயல்’ என்ற சீரியலில் நடித்து வருகிறார்.
ராஜா ராணி 2 சீரியலில் சந்தியாவாக நடித்து வரும் ஆல்யா மானசா இரண்டாவது முறை கர்ப்பமானார். இதனால் அவர் சீரியலை விட்டு விலகிவிடுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், தான் தொடர்ந்து சீரியலில் நடிப்பேன் என்றார் ஆல்யா. அதன்படி தொடர்ந்து சீரியலில் நடித்த ஆல்யா டெலிவரி தேதி நெருங்கியதால் சமீபத்தில் ராஜா ராணி 2 சீரியலை விட்டு விலகினார்.
விஜய்யை விட நான் பெரிய நடிகன் இல்லை - வியக்க வைத்த கே.ஜி.எஃப் 2 யாஷ்!
இந்நிலையில் இரண்டாவது முறையாக கர்ப்பம் தரித்த ஆல்யா மானசாவிடம், உங்கள் குழந்தைக்கு என்ன பெயர் வைப்பீர்கள் என முன்பு கேட்டிருந்தனர் ரசிகர்கள். அதற்கு அவர் பெண் குழந்தை என்றால் லைலா எனவும், ஆண் குழந்தை என்றால் அர்ஷ் எனவும் பெயரிட திட்டமிட்டிருப்பதாக தெரிவித்திருந்தார்.

சஞ்சீவ் இன்ஸ்டகிராம் ஸ்டோரி
Dune Oscar 2022: 6 ஆஸ்கர் விருதுகளை அள்ளிய ட்யூன்!
இதையடுத்து நேற்று
ஆல்யா மானசாவிற்கு ஆண் குழந்தை பிறந்த விஷயத்தை அவரது கணவர் சஞ்சீவ் இன்ஸ்டாகிராமில் தெரிவித்திருந்தார். குழந்தையை கையில் ஏந்தும் புகைப்படத்துடன் இந்த குட் நியூஸை சொன்ன அவர், தங்கள் மகனுக்கு அர்ஷ் எனப் பெயரிட்டுள்ளதையும் குறிப்பிட்டார். இதைப் பார்த்த ரசிகர்கள் ஆல்யா மானசா சஞ்சீவ் தம்பதிக்கு தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.